Thursday 20 March 2014

ஆர்.எஸ்.எஸ்.-இன் இரட்டை வேடம்


மும்பை பிவாண்டி பகுதியில் பேசிய ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் காந்தியை சுட்டுக் கொன்றது. ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள் கையைத்தான் பிஜேபி ஏற்றுக்கொண் டுள்ளது. சர்தார் படேல், ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக இருந்தவர். ஆனால், இன்று, காந்தியாரையும், சர்தார் படே லையும் பிஜேபி கொண்டாடுவதாக சொல்கிறது என பேசினார்.

உடன், ஆர்.எஸ்.எஸ். தனது எதிர்ப்பை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கிறது; சட்ட ரீதியாக நடவ டிக்கை எடுக்கும் என சொல்கிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் பற்றி இப்போது புகழ் பாடுகிறார் மோடி. அவருக்கு மிக உயரமான சிலையை அமைத்திட நாடு முழுவதும் இரும்பு திரட்டுகிறார். மோடியின் இந்த செயலை பாஜக ஆதரிக்கிறது. பல்லாயிரம் கோடியில் ஊடகங்களில் விளம்பரம் செய்கிறது.

காந்தியார் சுடப்பட்ட நிலையில், 1948-இல் உள்துறை அமைச்சராக இருந்தவர் சர்தார் படேல். அவர் ஆர்.எஸ்.எஸ் பற்றி என்ன கருத்தை தெரிவித்தார்? ஆர்.எஸ்.எஸ்-இன் நடவ டிக்கைகள் அரசுக்கும் நாட்டிற்கும் மிகப் பெரிய எச்சரிக்கையாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ்-இன் இந்த விஷத் தன்மையான விளைவினால், காந்தியா ரின் விலை மதிப்பில்லா உயிரை இழந்து நாடு அவதிப்பட காரணமா யிற்று.

காந்தியார் கொல்லப்பட்டதற்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். என சர்தார் படேல் கருத்து தெரிவித்தார். பின் அவரது உள்துறை அமைச்சக ஆணையின்படி தான் 5.2.1948-இல் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது.

நாட்டில் வெறுப்பும், வன்முறையும் முற்றிலுமாக வேரறுக்க ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது என தடை ஆணையில் விளக்கமும் அளிக்கப் பட்டது. காந்தியாரைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.-இன் விஷ விளைவு என சொன்னவர் சர்தார் படேல்; ஆர்.எஸ். எஸை தடை செய்தவர் சர்தார் படேல். இந்த கருத்தைத் தான் ராகுல் காந்தி தற்போது நினைவு படுத்தி உள்ளார்.

ராகுல் காந்தி மீது கோபப்படும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள், ராகுல் சொன்ன காரணத்தை உறுதிப்படுத்திய சர்தார் படேல் மீது தான் கோபப்பட வேண்டும்; அவமதிப்பு வழக்கு போட வேண்டும்.

ஆனால், மக்கள் இந்த வரலாற்றையெல்லாம் மறந்தி ருப்பார்கள் என நினைத்து, இன்றைக்கு படேலுக்கு சிலை வைக்க முயல்வ தும், படேல் சொன்ன காரணத்தை நினைவு படுத்திய ராகுல் காந்தி மீது வன்மம் காட்டுவதும், வழக்கம் போல், ஆர்.எஸ்.எஸ்-இன் இரட்டை வேடத்தைத் தான் அம்பலப்படுத்து கிறது.

- - குடந்தை கருணா

No comments:

Post a Comment