Thursday 20 March 2014

ஜாதி இந்தியா எப்படி முன்னேறும்?

நான் மோடியைக் கவனிப்பவன், என் தந்தை ஆடுகளைக் கவனித்ததைப்போல! நரேந்திர மோடி, தேசியப் பத்திரிகை களில் முழுப்பக்க விளம்பரங்கள் தந்தும், தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத் தியும் மிகப்பெரிய பிரச்சார இயக்கம் ஒன்றினை அண்மையில் நடத்தினார். அவர் தந்த தலைப்பு முதலில் இந்தியா என்பது. அவருடைய விளம்பரங்கள் மோடியின் குஜராத் (கவனியுங்கள், இந்தியா அல்ல) தான் தொடக்கமாம்! மாற்றங்களை ஏற்படுத்தியதாம்! நிறை வேற்றி முடித்ததாம்!

2004 தேர்தலின்பேதது பா.ஜ.க. இந்தியா ஒளிர்கிறது எனச் சொன்னது. இப்போதோ, குஜராத் மட்டும் ஒளிர் கிறதாம்! முதலில் இந்தியா இயக்கத்தை அடுத்து மோடியின் மற்றுமொரு இயக்கம், சாய்லே சார்ச்சா என்பது தேநீர் விருந்தாம்!

முதலில் இந்தியா என்பதும் தேநீர் விருந்து என்பதும் சுய முரண்பாடுகளைக் கொண்டவை! உலகம் முழுக்கப் பருகப் படும் தேநீரையும் குஜராத்தின் மாற்றத் திற்கான முயற்சிக்கான வரலாற்றையும் இணைத்துப் பார்த்தால் முரண்கள் புரியும். முதலில் இந்தியா எனும் கருத்து, குஜராத் மாநிலத்தைப் போல இந்திய நாடு வளரவேண்டும் என்பதை உணர்த்துகிறது.

தேநீரை பா.ஜ.க தேர்ந்தெடுத்ததைப் பார்த்தால் அவர்களது பரிதாப நிலை நன்கு விளங்கும். கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாதது! மோடியின் புதிய முயற்சிகள், அதன் விளைவுகள் என்பவற் றிற்கும் தேநீருக்கும் கொஞ்சமும் பொருத்தமே கிடையாதே! ஏன் என்றால் தேநீர் (சாய்) சீனாவில் கண்டறியப்பட்டது. அது இந்துத்வவாதிகளின் எதிரி நாடு!

இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டிஷாரால் இந்நாட்டிற்கு வந்தது சாய்! தகவல் களஞ்சியமான விக்கி பீடியா பதிவுகளின்படி தேநீரின் வரலாறு நீண்ட நெடியது, பல்வேறு கலாச்சாரங்களிடையே பரவிப்பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவிவருவது.

சீனாவின் யுன்னான் பகுதியில் ஷாங் வம்சம் ஆண்ட காலத்தில் (கி.மு. 1500 முதல் 1046 வரை) மருத்துவ குணம் கொண்ட பானமாகத் தோன்றியது. ஹீவா டோ என்பார் எழுதிய மருத்துவ நூலில் இதுபற்றிய தகவல் காணப்படுகிறது. 16-ஆம் நூற்றாண்டில்தான் சீனாவுக்கு வந்த போர்த்துகல் நாட்டுப் பாதிரியார்களுக்கும், வணிகர்களுக்கும் தேநீர் வழங்கப்பட்டது.

17-ஆம் நூற்றாண்டில் தேநீர் குடிப்பது பிரிட்டனில் பிரபலமானது. பிரிட்டிஷார் தான், தேநீர் குடிப்பதையும் பயிரிடுவதை யும் இந்தியாவில் அறிமுகப்படுத்தினார் கள். அதன் மூலம் சீனாவின் ஏகபோகத் திற்கு இடையூறை ஏற்படுத்தினார்கள்.

எனவே தேநீர் உலகம் முழுமைக்கு மானது. பா.ஜ.கட்சியின் கலாச்சாரத் தேசி யம் என்பது பன்முகக் கலாச்சாரத்திற்கு எதிரானது! ஆனால் இப்பன்முகக் கலாச்சார வாயிலாகத்தான் தேநீரே இந்தி யாவுக்கு வந்தது! அந்நிய தேநீரை இந்தியாவில் ஏற்றுக்கொள்ளும் பா.ஜ.க., அந்நிய மதங்களான இசுலாத்தையோ, கிறித்துவத்தையோ இந்தியாவில் ஏற்றுக் கொள்வதில்லை!

தேநீரைப்போலவே மதங்களும் பல்வேறு கலாச்சாரங்களின் ஊடே பயணித்துதான் மாற்றம் பெற் றுள்ளன. இந்தியாவின் சாய்வாலாக்கள் (தேநீர் விற்பவர்கள்) அந்த மதங்களைச் சேர்ந்தவர்களே!

விக்கிபீடியாவில் இடம் பெறும் அளவுக்கு குஜராத் ஒன்றையும் கண்டு பிடிக்கவில்லை, வளர்க்கவும் இல்லை. இந்தியா (குஜராத்தும் இதில் அடக்கம் தான்) கண்டுபிடித்த ஒன்றே ஒன்று! ஜாதிமுறை மட்டுமே!

சீனா, அய்ரோப்பா, அமெரிக்கா கண்டத்து நாடுகளின் மக்களைப் போல புதியவற்றைக் கண்டு பிடிக்கும் ஆற்றலுக்குப் பெரும் தடையாக இருப்பதே இந்த ஜாதி அமைப்பு தான்!

ஆர்எஸ்எஸ்ம், சுதேசி  ஜாக்ரான் மஞ்ச்சும் தூக்கிப் பிடிக்கும் மோடியின் இயக்கங்கள் எதுவும் பொருளாதார மேம் பாட்டுக்கான எதைப்பற்றியும் குறிப் பிடுவதே கிடையாது.

முதலில் இந்தியா எனப்பேசும் மோடி இந்தியாவில் ஜாதி முறையும் தீண்டத் தகாத மனிதர்களும் இருக்கும்வரை, இத்தகைய கொடும்நோய்களுக்கான தீர்வு முறையைத் தம் உரைகளில் குறிப் பிடாமல் இருக்கும்வரை, வளர்ச்சி என்பதே கானல் நீர்தான்!

நான் சொல்வது தவறு என்றால், மோடியில் சிந்தனைக் கண்களாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், 12 ஆண்டுகளாக அவர் ஆட்சி நடத்தும் குஜராத் மாநிலத்தில், உல கத்தின் அறிவியல் துறைக்குக் குஜராத் தின் பங்களிப்பு இது என எதையாவது காட்ட முடியுமா?

மோடியின் சிந்தனைக் கண்களாக இருப்பவர்கள் ஒன்றை உணரவேண்டும் குஜராத் சமூகம் மிகவும் மூடநம்பிக்கை யில் உள்ள சமூகம்! மிருகத்தனமான ஜாதி அமைப்பு, தெளிவில்லாத (சைவ) மரக்கறி உணவுப் பழக்கம் ஆகியவற்றைக் கொண்ட சமூகம்! இப்பேர்ப்பட்ட மூட, மதவாத, தெளிவற்ற சமூகத்தில் எப்படி அறிவியல் கண்டு பிடிப்புகள் ஏற்பட முடியும்?

ஆக, தேயிலை உற்பத்தி செய்வோ ரும் (பார்ப்பனப்) பண்டிதர்களும் தேநீர் விருந்தில் ஒரு சேரக் கலந்து கொள்ள முடியாத இந்தச் சமூகத்தில் முதலில் இந்தியா எனும் இயக்கம் இந்தக் கேடான சமூகத்தை மட்டுமே காட்ட முடியுமே தவிர, வேறொன்றும் செய்யாது.

திருப்பதி அல்லது வைஷ்ணவதேவி கோயில் அர்ச்சகர்களோ அல்லது இந்துத்வ வாதிகளால் பெருமையாகப் பேசப்படும் சங்கர மடங்களின் தலைவர்களோ மோடி யுடன் அமர்ந்து அவரின் தாயார் தயாரித்து கொடுக்கும் தேநீரை அருந்தினால் நாட்டுமக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்!

தெலங்கானா பகுதியைச் சேர்ந்த ஆட்டு இடையனான என்னை இந்த தேநீர் விருந்துக்கு அழைத்தால், நான் கூட அவருக்கு ஓட்டுப் போடுவேன், அவர் கொண்டுவரும் பெரிய மாற்றத்திற்காக! இந்தியாவில் வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றமும் சமூக மாறுதலும் சேர்ந்ததுதான் என்பதை மோடி புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணவும், குடிக்கவும் அனு மதிக்காத ஒரு சமூகத்தை வைத்துக் கொண்டு வளர்ச்சி என்பதும் கண்டு பிடிப்பு என்பதும் இந்தியாவில் எப்படி வரும்? எல்லா மனிதர்களும் பிறப் பிலேயே பாகுபாடு கொண்ட சமமாற்ற வர்கள் என்னு கருத்து நிலவும் ஒரு சமுதாயம் இருக்கும் நாடு எப்படி அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் முன்னேற முடியும்?

ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பின் ஆதார வேர்கள் இந்துமத ஆன்மிக நூல்களில் எழுதி வைக்கப்பட்டுள்ள. இந்நிலையில் எந்த இந்தியாவைப் பற்றி மோடி பேசுகிறார்? அது தலித் இந்தி யாவா? பிற்படுத்தப்பட்ட மக்களின் இந்தியாவா? அல்லது பார்ப்பனர்களின் இந்தியாவா? எந்த இந்தியா முதலில்? எந்த இந்தியா இரண்டாவதாக? எந்த இந்தியா மூன்றாவதாக?

பா.ஜ.க பாரத் என்று அழைக்கப் பிரியப்படும் இந்தியாவாக இருந்தாலும், அங்கே பெண்களின் நிலை மிகவும் பயங்கரமானதாயிற்றே! தம் விருப்பத் திற்கேற்ப, ஜாதி மறுப்புத் திருமணங் களைச் செய்து கொள்ள மறுக்கப்படும் நிலையில் பெண்களை வைத்துக் கொண்டு எந்த நாடு தான் முன்னேற முடியும்?

மோடியும் நானும் ஒரே வயதினர், ஒரே பிற்படுத்தப்பட்ட சமூகப் பின்னணி கொண்டவர்கள், என்றாலும் தலித் பெண் ஒருத்தி தன் விருப்பத்திற்கேற்ப ஒருவனை மணம் செய்து கொள்ள என் கிராமத்தில் வழியில்லை என்பதற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன்.

அந்த அளவில் எனது சமூக மாற்றத்திற்கான திட்டம் தோற்றுப்போனது. மோடியின் திட்டம் இது பற்றிக் கூறுவது என்ன? அவ ருடைய பெருமைக்குரிய குஜராத் மாநிலத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதா? ஓர் இந்துப்பெண்ணும் முசுலிம் இளைஞனும் திருமணம் செய்து பதிவு செய்வதை அவரது குஜராத் மாநிலம் அனுமதிக்கிறதா? விரும்பிய உணவை உண்ணும் உரிமை குஜராத்தில் எந்த அளவுக்கு இருக்கிறது?

இடைவிடாமல் முயற்சி செய்து புதுப்பித்து உங்களால் பெருமையாகப் பேசப்படும் சோம்நாத் கோயிலில் அர்ச்சகராக ஒரு தலித் ஜாதி இந்துவோ, பிற்படுத்தப்பட்டவரோ அல்லது ஒரு பெண்ணோ வர முடியுமா? மிஸ்டர் மோடி? மானுடர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான, சமமான ஆன்மீக உரிமை அற்றவர்களாக இருக்கும்வோது, உங்கள் இந்தியா எப்படி மானுடத்தின் மாண்பைப் பெற்ற முதல் நாடாக முடியும்?

உழைப்புக்கு மாண்பும் மரியாதையும் நிலவும் சமூகத்தில் தான் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன எனும் உண்மையாவது உங்களுக்குத் தெரியுமா, மோடி அவர்களே!

அர்ச்சகர் வேலை உட்பட அனைத்து வேலைகளுக்கும் ஒவ்வொரு குழந்தை யும் ஒவ்வொரு வயது வந்தோரும் சமவாய்ப்பு பெற்றிருக்க வேண்டும். நீங்கள் பின்பற்றும் மதத்தில் அப்பேர்ப் பட்ட நிலை உண்டா?

நம்மிடையே உள்ள பலவீனங்க ளையும், தவறுகளையும் ஒத்துக் கொள் ளும் மனோபாவத்தோடு இந்தியா எல்லாவற்றிலும் முதலிடத்திற்கு வர வேண்டும் என்று நானும் தான் விரும் புகிறேன். நீங்கள் எப்படி

தரவு: டெக்கான் கிரானிக்கிள் 12-3-2014
 
தமிழில்: சு.அறிவுக்கரசு

No comments:

Post a Comment