Sunday 3 November 2013

உத்தரப்பிரதேசத்தில் தங்கக் கனவு சாமியார்- மோடியின் மூக்கை உடைக்கிறார்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன் னாவ் பகுதியில் உள்ள தாண்டியா என்ற ஊரில், இந்தியத் தொல்லியல் துறை யினரால் ஒரு சாமியாரின் கனவில் மன்னர் வந்து தங்கப் புதையல் பற்றி சொன்ன காரணத்தால், தங்க வேட்டை நடத்தி வருகிறார்கள். அதை குஜராத்தின் முதல் அமைச்சர் நரேந்திர மோடி கேலி செய்துள்ளார்.
இதனால் அந்த கனவு கண்ட சாமியார் சோபனா சர்க்கார் மிகவும் வருத்த மடைந்தார். மோடியின் பேச்சு தன்னை வருத்தமடையச் செய்ததாக, ஓம்ஜி என்ற மற்றொரு சாமியார் மூலம், அவர் ஒரு திறந்த மடல் அனுப்பினார். தங்கம் தோண்டுதலைப்பற்றி கேலி செய்த பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர், சாமி யாரின் கடிதம் பார்த்தார். உடனே தனது டிவிட்டரில் சாமியார்மீதும் அவரது செயல்பாடுகள்மீதும் தான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
சாமியாரின் கடிதம்
சாமியாரின் கடிதத்தில் அப்படி என்ன தான் இருந்தது?
முதலில் அந்தக் கடிதம் மோடியை கான்பூருக்கு வருமாறு, அழைப்பு விடுத்து இருந்தது. அடுத்து, மோடியின் கருத்துக்கள் மன வருத்தத்தை அளிப் பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவென்றால், நடுவண் அரசின்மீதும் சோனியா காந்திமீதும் நீங்கள் அவசரமாகத் தாக்கிப் பேசும்போது, நீங்கள் ஒரு சாமியாரின் கவுரவத்தை அவமதித்து இருக்கிறீர்கள்.அனாவசியமான ஆவேசப்பேச்சுகளில் நேரத்தை வீண் அடிக்காமல் சோபன் சர்க்கார் ஆகிய சாமியாரை நீங்களே பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுரையும் கூறப்பட்டிருந்தது. நாங்கள் எல்லாம் மதிப்பிற்குரிய சாமியார்கள். ஆனால் சோபனா சர்க்கார் பெரு மதிப்புக்கு உரியவர்
மோடி இந்தியாவின் அடுத்த பிரத மராகப் பார்க்கப்படுவதால் சாதாரண மனிதரும் சாமியார் சங்கமும் (சாது சமாஜ்) சில பிரச்சினைகளில் மோடியின் கருத்தைக் கேட்க  ஆவலாக உள்ளனர். அதற்காக சோபனா சர்க்கார் மோடியை ஒரு பொது விவாதத்துக்கு அழைத் துள்ளார். நீங்கள் பிரதமராக இருந்தால், தங்கப் புதையல் பற்றிய தகவல் கிடைத்தால், என்ன செய்வீர்கள்? அதைப் பற்றிச் சொல்லுங்கள். தற் போதைய தோண்டப்பட்ட பணிகளால் நாட்டின் கவுரவம் கேலி செய்யப்படுவ தாக நீங்கள் உணருகிறீர்களா? வாது புரிவதற்கு பல பிரச்சினைகள் உள்ளன நேரம் ஒதுக்கித் தரும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பல வழிகளிலும் அந்தக் கடிதம் மோடியையும் அவர் கட்சியையும் சிக்க வைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் வாஜ்பேயி பிரதமராக இருந்த பொழுது, ஏன் ஸ்விஸ் வங்கியிலிருந்து கருப்புப் பணம் கொண்டு வரப்படவில்லை என்று, கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கடிதம் மோடியின் மற்றும் பா.ஜ.க.வின் பிரச்சாரங்களுக்காகச் செலவிடப்படும் பணம் வெள்ளையா அல்லது கறுப்பா? என்பதை விளக்க வேண்டும் என்பதுடன் சேதுக் கால் வாய் பற்றிய பா.ஜ.க.வின் கருத்துக்கள் சவாலாக்கப்பட்டுள்ளது. உங்கள் கட்சி யைப் பொறுத்தமட்டில் அது நம்பிக்கை சார்ந்த ஒன்று.
அயோத்திக்குப் புறப்படுமுன், ராமன் விபீஷணனிடம் ராம் சேது பாலத்தை அழித்து விடும்படி கேட்டுக் கொண்டுள்ளான். பத்ம புராணத்தைப் பார்த்து, இதை உறுதி செய்து கொள்ளலாம். உங்கள் கட்சி செய்தித் தொடர்பாளரையும், சுதன்சு மிட்டலையும் நம்பிக்கை தொடர்பான பிரச்சினை களை எழுப்பும் முன்பு, அவற்றைப் பற்றி நன்கு படித்துக் கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதம் கூறுகிறது.
அந்தக் கடிதம் மேலும், மோடிக்கு ஒரு நிகழ்வை நினைவூட்டுகிறது. சாம்பிரோட்டோ என்ற வல்லுநர் சி. டாட் என்ற திட்டத்தைச் செயல்படுத்தி அதன் மூலம் நாட்டைக் கணினி மயப்படுத்து வதற்கான அடிப்படைகளை அமைக்க ஆரம்பித்தபோது வாஜ்பாயியின் தலை மையிலிருந்த பா.ஜ.க., நாடு முழுதும், கணினி வந்தால் வேலையில்லாத் திண்டாட்ட வலையில் நாடு சிக்கிக் கொள்ளும் என்று வீதியெங்கும் கூக்குரல் எழுப்பினர். அந்தச் சமயத்தில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு தவ றானது என்று ஒத்துக் கொள்ளும் துணிவு உங்களிடம் உள்ளதா? என்று சாமியார் ஓம்ஜியின் அந்தக் கடிதம் கேள்வி எழுப்புகிறது.
ராணுவத்தினரின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் போஃபர்ஸ் லஞ்ச ஊழலைப் பற்றியும் அந்த ஆயுதங்கள் பயனற்றவை என்ற அய்யங்களையும் கிளப்பி விட்டதாக பா.ஜ.க., மீது அந்தக் கடிதம் குற்றம் சாட்டுகிறது. பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது, ஏன் போஃ பர்ஸ் லஞ்ச ஊழல் பற்றிய ரகசியங்களை வெளியிடவில்லை? கார்கில் போரின் போது போஃபர்ஸ் ஆயுதங்கள் இல் லாமல் இருந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பதை விளக்க முடியுமா? என்று அந்தக் கடிதம் கேட் கிறது. மோடியை டெக்ரி அணைபற்றி  மேலும் சிக்க வைக்கிறது. உங்கள் கட்சி எப்பொழுதும் டெக்ரி அணை ஆபத் தானது என்றும் சாபக்கேடு என்றும் சொல்லி வருகிறது. டெக்ரி அணை மட்டும் இல்லாமல் இருந்தால் கேதார் நாத் பேரழிவினால் சமவெளிகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டிருக் குமே; அதன் பிறகு கான்பூர் பேரணியில் நீங்கள் எங்கிருந்து பேசுவது? என்றும் அந்தக் கடிதம் கேட்கிறது.

No comments:

Post a Comment