Wednesday, 30 October 2013

நரேந்திர மோடி - நியூயார்க் டைம்ஸ் படப்பிடிப்பு

2002-ல்  மேற்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நடைப்பெற்ற மதக் கலவரத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மையினர்களான முஸ்ஸிம்கள். தற்பொழுது 10 ஆண்டுகள் கடந்து அந்த மத கலவரத்தின் போது குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருத்த நரேந்திரமோடி தான் தற்போதும் முதல்வர்; மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய பிரதமருக்கான முன்னனி வேட்பாளராக உள்ளார்
திரு. மோடி இந்தியாவின் முக்கிய எதிர் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் மிக முக்கிய நபராகவும், ஒருவேளை இந்த கட்சி  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெற்றால் பிரதமர் ஆக்க் கூடியவராகவும் இருக்கிறார். ஆனால் திரு.மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் அது பெரும்பாலான இந்தியர்களுக்கு மிக ஆழமான பல பிரச்சினைகள் ஏற்படும். அதிலும் இந்திய நாட்டின் 138 மில்லியன் இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவில் உள்ள மற்ற சிறுபான்மையினருக்கும் ஆபத்து ஏற்படும். ஏனெனில் மோடி கடந்த  காலங்களில் ஏற்படுத்திய மதக் கலவரத்தின் கொடூரமான தீயை இந்தியா முழுவதும் பரவ விடும் அபாயம் உள்ளது.

 திரு.மோடியின் ஆதரவாளர்கள் மோடியை குற்றம் இல்லாதவர் என்றும் அவருக்கும் கலவரத்திற்கும் தொடர்பு இல்லை என இந்திய உச்சநீதிமன்றம் கூறியதாக வாதிடுகிறார்கள். மேலும் அவர்கள், குஜராத் மாநிலத்தை வேகமாக வளரக் கூடிய மாநிலமாக்கியதால் திரு.மோடிக்கு நடுத்தர மக்களின் பெரும் ஆதரவு இருப்பதாகவும், அவரால் பொருளதாரத்தில் அபார வளர்ச்சியை ஏற்படுத்தமுடியும் என்றும், கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியை ஒழித்துக் கட்டி இந்தியாவை முன்னேற்றுவார் என்றும் கருதுகிறார்கள் என்கின்றனர்.    

எந்தக் கேள்விக்கும் இடம் இல்லாமல் காங்கிரஸ் கட்சி பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி, பொது நிறுவனங்கள் மற்றும் நீதிபரிபாலனத்தில் தோற்றுப் போனது என்பது உண்மை தான். மேலும் புதிய சிந்தனைகள், தலைவர்களுடன் தன்னை மீளமைப்பதற்கு பதிலாக, நேரு-காந்தி குடும்பத்தின் அனுபவமில்லாத  இளந்தளிரான ராகுல் காந்தியின் தலைமையில் தேர்தலைச் சந்திக்கிறது.

ஆனால் திரு.மோடியின் ஆழமான கொடூரமான ஹிந்து தேசியவாதம் (ஹிந்துத்துவா) பொது மக்களின் கோபத்தையை இன்னும் தூண்டுவதாக உள்ளது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திரு.மோடியிடம் ராய்ட்டர்ஸ் நிறுவனம், ”2002-ல் நடைபெற்ற கொடூரமான கொலைகளுக்கு நீங்கள் வருத்தப்பட்டது உண்டா?” என்று கேட்டதற்கு திரு.மோடி கூறியது “யாரோ ஒருவர் கார் ஓடுகிறார் நாம் அந்த காரில் பின் அமர்ந்து பயணம் செய்கிறோம், வழியில் ஓரு நாய்க்குட்டி காரின் சக்கரத்தில் சிக்கினால், வருத்தபடுவோமா இல்லையா? கண்டிப்பாக வருத்தபடுவோம்”.” திரு.மோடியின் இந்த பொறுப்பற்ற, பொதுமக்களின் கோபத்தை தூண்டுகின்ற பதில், அரசியல் களத்தில் அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் தோற்றுவித்த்து.

திரு.மோடி எதிர் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுகிற பொறுமையோ, தகுதியோ இல்லாதவர் என பல சூழ்நிலைகளில் நிருபித்துக்காட்டி இருக்கிறார். மேலும் அவரின் கூட்டணி சகாக்கள் அவரை விட்டு வெளியேறிவிட்டனர்.  ஓரு முக்கியமான மாநில கட்சி- பாரதீய ஜனதா உடன் இருந்த 17 ஆண்டுகால கூட்டணியை முறித்து கொண்டது. அதற்கு ஒரே காரணம் திரு.மோடி ஏற்று கொள்ளக்கூடிய நபர் இல்லை என்பது மட்டுமே!

திரு.மோடியின் பொருளாதாரப் பதிவு முற்றிலும் ஏற்றுக் கொள்வது போல் இல்லை.  நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் ஏழ்மை சதவீதம் குறைவு என்றாலும் இந்திய நாட்டில் ஏழ்மை மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள  முஸ்லிம்கள் குஜராத்தில் தான் அதிகம் உள்ளனர்.  

இந்தியா என்ற நாடு பலவித மதங்களை கொண்டு நாடு,ஓரு டசன்க்கு மேலான மொழி, எண்ணில் அடங்கா மரபு வழி நம்பிக்கை கொண்டு குழுக்கள் மற்றும் பழங்குடியினர் வாழும் நாடு. இப்படி பல்வேறு மக்களையும் தலைமை ஏற்று சிறப்பாக திரு.மோடியால் நடத்தமுடியுமா  என்றால் இல்லை, ஒட்டு மொத்த மக்களின் பயத்தைப் போக்கி அவர்களின்  நம்பிக்கையை பெறும் வரை திரு.மோடி மக்கள் தலைவராக வர முடியாது

(தி நியூயார்க் டைம்ஸ் ஏட்டின் தலையங்கப் பகுதி)

மொழிபெயர்ப்பு: தமிழன் பிரசன்னா

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: அன்பு நண்பர்களுக்கு ....இந்த கட்டுரை புகழ் பெற்ற  The New York Times’ Editorial Board ல் திரு. மோடி குறித்து எழுதப்பட்ட கட்டுரை. அதனை என் சிற்றறிவுக்கு தெரிந்ததைக் கொண்டு மொழியாக்கம் செய்துள்ளேன். இதில் துளி அளவு கூட என் கருத்து பதிந்து விடகூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளேன். ஏதேனும் குறை இருந்தால் உங்கள் மேலான கருத்துகளை பதிவுசெய்யுங்கள்