Monday 17 March 2014

மன்னிப்பா?

நாங்கள் எப்போதாவது ஏதேனும் தவறு செய்து இருந்தால், மன்னிப்புக் கேட்பதற்கு தயாராக இருக்கிறோம் என அண்மையில் முஸ்லீம் மக்களி டையே உரையாற்றிய பாஜகவின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் பேசினார். காலையில் பேசிய தனது பேச்சுக்கு, அன்று மாலையே விளக்க மும் அளித்தார். 

அதாவது, தனது மன் னிப்பு பற்றிய பேச்சு, குஜராத் கலவ ரத்தை ஒட்டி சொல்லப்படவில்லை என்றும், பொதுவாக சொன்னதாகவும் கூறினார். ராமன் அங்கே தான் பிறந் தான் எனக் கூறி, நானூறு ஆண்டுகால பாபர் மஜ்ஜித்தை இடித்துத் தரை மட்டம் ஆக்கிவிட்டு, அதன் தொடர்ச்சி யாக நாடு முழுவதும் அப்பாவி சிறு பான்மை மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்; அவர்களது சொத் துகள் சூறையாடப்பட்டன.

இத்தகைய  கலவரத்தை பாஜகவும், சங் பரிவாரும் செய்தது தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்?  2002-இல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைச் சாக்காக வைத்து, ஏறத்தாழ இரண்டா யிரம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற் கும், அந்த மாநிலத்தில் அவர்கள் வாழ்வதற்குப் பயந்து ஓடுவதற்கும், மோடி தலைமையிலான அரசு செய்த அரசு பயங்கரவாதம் தவறா அல்லது குற்றமா  ராஜ்நாத் சிங்? பிப்ரவரி 2007-இல் ஹரியானாவில் உள்ள பானிபட் நகருக்கு அருகில் சென்று கொண்டிருந்த சம்ஜாயுதா விரைவு ரயில், குண்டு வெடிப்புக் குள்ளாகி, நமது இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 68 பேர் பலி யானார்கள்.

அந்த குண்டு வெடிப்புக்கு அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பு தான் காரணம் எனச் சொல்லப்பட்டு, அதில் இராணுவ அதிகாரி பிரசாந்த் சிரீகாந்த் புரோகித் ஈடுபட்டதை, சுவாமி அசீதானந்த் வாக்குமூலமும் அளித்தாரே; 

இந்த குண்டு வெடிப்பு சம்பவம், தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்? செப்டம்பர் 2008-இல், மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் எட்டு பேர் இறந்தனர். சாத்விக்கும், ராணுவ வீரர் புரோகித்திற்கும் இதில் தொடர்பு உண்டு என்று வழக்கு நடைபெறு கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆசியுடன் தான் இந்த குண்டு வெடிப்புகள் நடைபெற்றதாக சுவாமி அசீதானந்த் பேட்டி அளித்து, அது அண்மையில் கேரவான் பத்திரிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டதே. இந்த கலவரங்கள் எல்லாம், தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்? குற்றங்களுக்குத் தீர்வு தண் டனையா அல்லது மன்னிப்பா? மன் னிப்பு தருவதற்கு, இந்திய குற்றவியல் சட்டம் தேவாலயம் அல்ல, ராஜ்நாத் சிங்.  அதெல்லாம் இருக்கட்டும். உங்கள் கூட்டணியில் சேர்த்திட நீங்கள் மெனக்கெடும், கேப்டனுக்கு மன் னிப்பு என்ற வார்த்தையே பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா ராஜ்நாத்சிங்? அவர் காதில் விழுந்தால், உங்களை மன்னிக்கவே மாட்டார்.


- - குடந்தை கருணா

No comments:

Post a Comment