Monday 24 March 2014

குஜராத்தில் உண்மை நிலை என்ன புள்ளி விவரங்கள் பேசுகின்றன தி வீக் இதழ் அம்பலப்படுத்துகிறது




குஜராத் மாடல் என்ற பெயரில் பொய்களும், புனை சுருட்டும் எவ்வாறு விலை போகின்றன என்பதை மல்லிகா சாராபாய் என்ற எழுத்தாளர் தமது கட்டுரையில் விளக்கமாகவும், புள்ளி விவரங்களுடனும் எவ்வாறு விவரித் துள்ளார் என்பதைப் பார்ப்போம்.

எல்லா புள்ளி விவரங்களும் அரசு தரப்பிலிருந்து பெறப்பட்டவை என்பதும், அவற்றை முழுவதுமாக அச்சேற்றினால் இடம் போதாது என்பதால் சுருக்கமாகவே விளக்கியுள்ளார். இதன் மூலம் தொலைக் காட்சிகளும், பத்திரிக்கைகளும் எவ்வாறு பெரிதாக்கி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகின்றன என்பதையும் சில சமயம் தமது வாசகர்களே இதை நம்பி விடுகின்றனர் என்பதையும் தோலுரித்துக் காட்டுகின்றார்.

கடந்த பத்தாண்டுகளில் 60,000 சிறு தொழிற் கூடங்கள் குஜராத்தில் மூடப் பட்டிருக்கின்றன. சுமார் ஆறு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பன்னாட்டு (அந்நிய முதலீடு) நிறுவனங் களை முதலீடு என்று எடுத்துக் கொண் டால் குஜராத் அய்ந்தாவது இடத்திலும், விவசாய உற்பத்தியில் நாட்டில் எட்டாது இடத்திலும் உள்ளது. 2005 - 2006 இலி ருந்து 2010 - 2011 வரை நாட்டின் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் (GSDP) 3.44 விழுக்காடு மட்டுமே என்பதும் அதை இரண்டு மடங்காக உயர்த்திக் காட்டி இருப்பது முழுப்பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைக்க முயலுவது மாகும். நாட்டிலேயே விவசாயப் பொருட்களும், இரசாயன உரங்களும் மிக உயர்ந்த மதிப்புக் கூட்டு வரி 5 விழுக்காடு என்பதும் உண்மையான ஒன்று.

குஜராத்தில் 28 மாவட்டங்கள் உள்ளன அவற்றில் 225 வட்டங்கள் உள்ளன. அதில் 57 வட்டங்கள் மின்சாரமின்றி இருண்டு கிடக்கின்றன.

2011 புள்ளி விவரங்களின்படி 4,55,885 மின்சார விண்ணப்பங்கள் நிலுவையி லுள்ளன. 1995-இல் பாரதீய ஜனதா ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்கு முன் 10,000 கோடி ரூபாய் கடன் இருந்தது. அது மோடி 2001-இல் பதவி ஏற்ற போது ரூ. 45,301 கோடியாக இருந்தது. 2012 டிசம்பரில் அது ரூ. 1,38,978 கோடியாக உயர்ந்தது. அது மேலும் 2015 - 2016 இல் 2,07,695/- கோடி ரூபாயாக உயரும் என்று எதிர்ப்பாக்கப் படுகின்றது.

1990-1995 ஆண்டுகளில் சுகாதாரத் துறைக்கு செலவிடப்பட்ட தொகை 4.25 விழுக்காடு என்றும் அது 2005-2010 இல் 0.77 விழுக்காடாகக் குறைந்துவிட்டது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின் றன. அதாவது கீழிருந்து மேலாக இரண்டாவது இடத்திலுள்ளது குஜராத். அனிமியா என்ற நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் 20 பெரிய மாநிலங்களில் குஜராத்தில் தான் அதிகமுள்ளனர். அனி மியா நோயால் பாதிக்கப்பட்ட குழந் தைகள் 16-ஆவது இடத்திலும், ஊட்டச் சத்துக் குறைவாக வாடும் குழந்தைகள் வாழும் பெரிய மாநிலங்களில் 15-ஆவது இடத்திலுள்ளது. குழந்தைகள் ஊட்டச் சத்தின்றி இறப்பு விகிதம் அதிகம் நிகழ்வது குஜராத்தில் தான் என்பதும் அது கிராமங் களில் 14-ஆவது இடத்திலும், நகரங்களில் 10-ஆவது இடத்திலும் உள்ளது.

The Global Hunger Report  - பசியால் வாடுபவர்கள் 17 மாநிலங்களில் குஜராத் 13-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய பிரதேசம், ஜார்கண்ட், பீகார் போன்ற மாநி லங்கள் வரிசையில் குஜராத்தும் மிகவும் அஞ்சத்தக்க மாநிலமாக உள்ளது.

2001 ஆம் ஆண்டு 32 விழுக்காடு மக்கள்தான் ஏழைகள். அது பா.ஜ.க  ஆட்சியில் 2011-இல் 39.5 விழுக்காடு என்பதும் ஒரு சாதனை தானே! NSSO நாட்டில் மிகக்குறைந்த அளவில் அதா வது 8.6 விழுக்காடே கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில் நமோ மாநிலம் 10-ஆவது இடத்திலுள்ளது. 29 விழுக்காடு பேர் சுத்திகரிக்கப்படாத நீரை குடிக் கின்றனர். அவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 1.75 கோடிப் பேர் அசுத்த நீரை அருந்துகின்றனர்.

குஜராத்தில் 3716 வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்றன. இருந்தாலும் படித்த இளைஞர்கள் வேலையின்றி இருப்போரின் எண்ணிக்கை 10 லட்சம். பதிவு செய்துள்ள மொத்த வேலையற் றோரின் எண்ணிக்கை 30 லட்சம். 12 ஆண்டுகளில் பூஜ்ஜியம் விழுக்காடுதான் வேலை வாய்ப்புகளில் வளர்ச்சி!

அண்மையில் CAG வெளியிட்ட அறிக்கையில் ரூ. 16,70,699/- கோடி நிதி மற்றும் நில மோசடியும் நடைபெற்றுள்ள தாகவும் அது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

முஸ்லிம் மாணவர்கள் மற்றும் வணி கர்கள் மாநிலத்திலும், அரசு நடத்தும் கல்விக்கூடங்களிலும் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆதிவாசி களின் நிலம் பெறுவதில் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை இடம் போதாமை கருதி விட்டுவிடுகின் றேன். என்னுடைய நோக்கமெல்லாம் எங்களைப் போன்றவர்கள் எவ்வாறெல் லாம் இந்தச் செயலற்ற அரசால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை படம் பிடித்துக் காட்டுவதுதான். ஏனெனில் எங்களைப் போன்றவர்கள் ஏமாற்றப்படு கிறோம் என்பதுதான் உண்மை.

ஆம் மோடி பெரிய வணிகர்களை, பண முதலைகளை மேலும் பணக்காரர் களாக ஆக்கி இருக்கின்றார். ஆம் அவர் சிறந்த பேச்சாளர், வெற்றிடத்தில் வீடு கட்டுபவர். குஜராத் மாடல் - மாதிரி அரசு முன்னேற்றம், டார்வின், ரகத்தைச் சார்ந்ததாகும். அதாவது மனிதன் குரங்கி லிருந்து பிறந்தான் என் சொல்லப்படும் காலத்தைச் சார்ந்ததாகும். இது எப்படி யென்றால் திறமையான மாணவர்களுக் குப் பாடம் சொல்லிக் கொடுத்து முதல் இடத்தைப் பிடிப்பதைப் போன்றதாகும். மற்றவர்கள் எக்கேடு கெட்டுப் போனா லும் போகட்டும் என்ற கொள்கை. ஆகவே இதைப் படிக்கும் வாசகர்கள் இப்படிப்பட்ட புளுகு மூட்டை குஜராத் மாடல் அரசு 95 கோடி ஏழை எளிய மக்களை வாழ வைக்கும் என்று நம்பு கின்றார்களா? இந்த குஜராத் மாடல், நம் இந்திய நாட்டிற்குத் தேவையா என் பதைச் சிந்திப்பீர்!

- தமிழ் மொழியாக்கம்: எம்.எஸ். முகம்மது ஈசா, சென்னை-1

Friday 21 March 2014

குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் சில அம்சங்கள்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் முன்னிறுத் தப்பட்டுள்ள பிரதம மந்திரி வேட்பாளர் நரேந்திர மோடி முகமூடி அணிந்துகொண்டு நாடு முழுவதும் வலம் வருகிறார். ஒரே நாளில் இரண்டு மூன்று மாநிலங்களுக்குக்கூட தனி விமானத்தில் பறந்து செல்கிறார். இவர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் பயிற்சி பெற்று இளம் வயதி லிருந்து ஆர்எஸ்எஸ் இட்ட பணிகளை மிக விசுவாசமாக செய்து வருபவர். இப்பொழுது கூட ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை குஜராத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றி வந்த காரணத்தால் அதையே இந்தியா முழுமையாக செயல்படுத்திட ஆர்.எஸ்.எஸ். பணித்துள்ளது. இவர்களுடைய சித்தாந்தம் என்ன? கொள்கை கோட்பாடுகள் என்ன, குஜராத்தில் எப்படிசெயல்படுத்தி வருகிறது என்ற உண் மைகளை முழுமையாக திரைபோட்டு மறைத்து சுய உருவம் தெரியாமல் முக மூடி அணிந்து பிரச்சாரம் செய்து மக்களைஏமாற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவரின் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் சில அம்சங்களை முதலில் பார்ப்போம். இவை எப்படி குஜராத்தில் செயல் படுத்தப்பட்டுள்ளன என்பதை பின்னால் பார்க்கலாம்.

நேருவின் எச்சரிக்கை

ஜவஹர்லால் அவர் காலத்திலேயே இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய அபாயத்தை சுட்டிக்காட்டினார். தனது சுய சரிதையில் ‘பிரிட்டிஷ் ஆட்சி முழுமையாக அகற்றப்பட்ட பிறகு மேல்தட்டு மத்திய வர்க்கத்தினர் மற் றும் பணக்கார வர்க்கத்தினர் ஆதரவுடன் பாசிசம் வேகமாக வளர்ந்தாலும் வளரலாம்’ என்றார் நேரு. “சிறுபான்மையினரின் வகுப்பு வாதத்தைவிட மிக மிக அபாயகரமானது பெரும்பான்மையினரின் வகுப்புவாதம்” (1948, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் நேரு உரை). “சிறுபான்மையினர் வகுப்புவாதத்தை நாம் சுலபமாக கண்டுகொள்ள இயலும், புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால் பெரும் பான்மையினரின் வகுப்புவாதம் தேசியவாதம் எனக்கொள்ள வைக்க முடியும்” (1961ல் நேரு சுட்டிக்காட்டியது). “நான் இந்து தேசியவாதி” என்கிறார் மோடி. “இந்தியாவிற்கு வாக்களியுங்கள்” என்கிறது மோடியின் விளம்பரம். இந்து தேசிய வாதம், இந்திய தேசியவாதமல்ல இதுதான் இன்று இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து. முழு வெற்றி பெற்றால் இந்தியா, பாகிஸ்தான் போன்று ஆக்கப்பட்டுவிடும். அங்கு இஸ் லாமிய தேசியவாதம் என்றால் இங்கு இந்து தேசியவாதம்.

பாசிசத்தின் இந்திய வடிவம்

ஆர்எஸ்எஸ் 1925ல் துவக்கப்பட்டது. இதை துவக்கிய முதல் சர்சங்சாலக் ஹெட் கேவாரின் குருநாதர் டாக்டர் பி.எஸ்.மூஞ்சே 1931ல் இத்தாலிக்கு சென்று பாசிச ஆட்சித் தலைவர் முசோலினியை சந்தித்து பாசிச அமைப்பு முறைகளைப் பற்றி 13 பக்க குறிப்புவெளியிட்டார். (நேரு மியூசியம் நூலகத்தி லுள்ளது). பாசிஸ்ட் கட்சி பாணியில் சிறு வர்கள் பயிற்சி (6-18 வயது) இளைஞர்கள் உடற்பயிற்சி, ராணுவப் பயிற்சி (இதற்காக நாக்பூரிலும் நாசிக்கிலும் இரண்டு ராணுவப் பயிற்சி பள்ளிகள் துவங்கி இன்றும் செயல்பட்டுக்கொண்டு வருகின்றன) அணி வகுப்புகள், டிரில்கள் ஆகியவை விலக்கப் பட்டுள்ளன. “எதிரி மக்கள் கூட்டத்தைத் தாக்கிஅதிகபட்சம் கொலை செய்து காயமடைய வைத்து வெற்றிகாணும் திறன் கொள்ள இந்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது” மூஞ்சே தனது திட்டக் குறிப்பில் முன்வைக்கிறார்.

“இந்து, இந்தியாவின் ஒற்றுமைக்கும் இந்துக்களின் ராணுவ மறுமலர்ச்சிக்கும் பாசிசம் தெளிவான வழிகாட்டுகின்றது ஹெட் கேவார் தலைமையிலுள்ள ஆர்எஸ்எஸ் இதுபோன்ற நிறுவனமாகும். ஹெட்கேவாரின் அமைப்பை விரிவுபடுத்தவும் இதர மாநிலங் களுக்கு பரப்பவும் எனது எஞ்சியுள்ள வாழ் நாளை கழிப்பேன்” என்றும் எழுதினார் மூஞ்சே.இவர் ஜெர்மனிக்கும் சென்று ஹிட்லரின் நாஜிக் கட்சி அமைப்பை பற்றியும் தெரிந்து கொண்டார். (இறுதியில் 1943ல் இந்த முசோலினி மக்களால் தெருக்களில் அடித்துக்கொல்லப்பட்டதும் ஹிட்லர் விஷம் குடித்தும் செத்ததும் வேறு கதை).

1934 ஜனவரி 31ம் தேதி “பாசிசமும் முசோலினியும்” என்ற தலைப்பில் பம்பாயில் நடந்தகூட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் முதல் சர்சங் சாலக் (1925-1940) ஹெட்கேவார் தலைமை வகித்தார். இதில் உரையாற்றிய மூஞ்சே, “இந்து தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்து மதத்தை இந்தியா முழுவதும் கட்டுவதற்கு நான் திட்டத்தை தயாரித்துள்ளேன். இத் தாலியின் முசோலினி ஜெர்மனியின் ஹிட்லர் போன்று ஒரு சர்வாதிகாரி இல்லாமல் இந்த லட்சியத்தை செயல்படுத்த இய லாது” என்றார். இத்தகைய பயிற்சி பெற்ற ஒருவரை தற்காலத்திற்கேற்றவாறு உருவாக்கு வதற்கான முதல் முயற்சியில் இன்று ஆர்எஸ்எஸ் ஈடு பட்டிருக்கின்றது.

இந்து தேசியமா, இந்திய தேசியமா?

இந்திய தேசியத்தை ஒரு “விசித்திரமான மிருகம்”, ஒரு “பூதாகரமான பிரமை” என்று ஆர்எஸ்எஸ்சின் இரண்டாம் சர்சங்காலக் கோல் வார்க்கர் விளக்கினார். இது ஒரு ஹம்பக் தேசியம் என்றார்.“இப்படிப்பட்டஒரு மோசடி தேசியத்திற்கு உயிருண்டாக்க முயற்சிக்கின்றனர். ஒரு காளையின் கால்களையும், ஒரு கழுதையின் தலையையும், ஒரு யானையின் துதிக்கையும் இணைத்து ஒரு விசித்திரமான மிருகத்தை உருவாக்கும் முயற்சிக்கு ஒப்பாகும். இதன் விளைவு ஒரு பூதாகரமான பிணம்தான். இது ஒரு உயிருள்ள உயிரினமாக இருக்க முடியாது. இதில் சில அசைவுகள் தென்பட்டால் அதை அழுகிவரும் சடலத்தில் உற்பத்தியாகும் கிருமிகளின் செயல்பாடுதான்” .

(குரு கோல்வார்க்கர் - ஞானகங்கை பக்.239)மேலும் நமக்கு முன்னால் உள்ள கேள்வி யாதெனில் “இஸ்லாத்திற்கோ, கிறிஸ்து வத்திற்கோ மதம் மாற்றப்பட்டவர்களின் போக்கு என்ன என்பதை அவர்கள் இந்தநாட்டில்தான் பிறந்திருக்கிறார்கள் சந்தேக மில்லை. ஆனால் இதனிடம் பக்தி விசுவாசத்துடன் வாழ்கின்றார்களா? இந்தநாட்டிடம் நன்றி விசுவாசம் பாராட்டு கின்றார்களா?... மதம் மாறுவதுடன் கூட இந்து ராஷ்ட்ரியத்திடம் உள்ள அன்பு நெகிழ்ச்சியும் பக்தி பாவனையும் அழிந்துவிட்டது” (ஞான கங்கை பக்கம் 193)“ஆகவே நாம் கூறுவதெல்லாம் இதுதான்.

இவர்கள் தமது மன அமைப்பு நிலையை கைவிட்டுவிட்டு இந்து தேசிய வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிடவேண்டும். தங்களு டைய மூதாதையருக்கு சொந்தமான பக்திமுறைகளையும் பின்பற்றட்டும்.... மீண்டும் திரும்பி வந்து உடையிலும், பழக்க வழக்கங்களிலும் திருமண சடங்குகளையும் இறுதிச்சடங்குகளையும் நடத்துவதிலும் அதுபோன்ற மற்றெல்லா நிகழ்ச்சிகளிலும் தங்கள் முன்னோர்களான ஹிந்துக்களின் வாழ்க்கை முறையுடன் இரண்டறக் கலக்கவேண்டும். வழிதவறிய சகோதரர்களைப் போல் மீண்டும் நமது தர்மத்திடம் இரண்டற கலந்துவிட வேண்டும்” (ஞா.க.பக்.197, 200).

அரசியல் சாசனம் மாற்றப்படவேண்டுமாம்!

“நமது நாட்டின் கூட்டாட்சித்தன்மை பேச்செல்லாம் நிரந்தரமாக குழிதோண்டிப் புதைக்க வேண்டும். பாரதம் என்ற ஒரே ராஜ்யம் தானிருக்க வேண்டும். பூரண சுயாட் சியோ அரைகுறை சுயாட்சியோ உள்ள எல்லாமாநிலங்களையும் துடைத்தெறிய வேண்டும்”“ஒரே தேசம், ஒரே ராஜ்யம், ஒரே சட்டமன்றம், ஒரே நிர்வாகம் என்று பிரகடனப்படுத்த வேண்டும்... மாநிலவாதம், மொழிவாதம், குறுகிய கட்சிவாதம் அல்லது வேறு எவ்விதமான தற்பெருமை உணர்ச்சிகளுக்கு இடம்தரக்கூடாது”“அரசியல் சாசனத்தை மீண்டும் பரி சீலனை செய்து ஒற்றை அரசு முறையை (Unitary form of govt)நிறுவி திருத்தி எழுத வேண்டும். அதன் மூலம் நாம் அனைவரும் தனித்தனி இனங்களைச் சார்ந்தவர்கள்.. என்பதை பொய்யாக்கவேண்டும்.” (Ph.f. g¡. 686, 687)

“நமது தேசிய மொழிப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சமஸ்கிருதம் அந்த இடத்தைப் பிடிக்கும் வரை இந்தி மொழிக்கு அந்த இடத்தை நாம் தரவேண்டியிருக்கும்” (ஞா.க. பக். 171)வாஜ்பேயின் ஆட்சியிலிருந்த காலத்தில் அரசியல் சட்டத்தை மாற்றியமைக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (ஒய்.வெங்கடாச் சலையா தலைமையில்) ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. நால்வர் கொண்ட கமிட்டி (சுவாமிவாம தேவ், சுவாமி முக்தானந்த் சரஸ்வதி, சுவாமி நிரஞ்சன் தேவ்தீர்த், சின்மையானந்தா) அமைக்கப்பட்டு 63 பக்க அறிக் கையும் சமர்ப்பிக்கப்பட்டது. “இன்றைய அர சியல் சட்டம் தூக்கி எறியப்பட வேண்டும்” “இந்துத்துவா அரசியல் சட்டம் இடம்பெற வேண்டும்” என்றனர். இவர்கள் முயற்சி அன்று வெற்றிபெறவில்லை.பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கா சென்றி ருந்தபொழுது விஷ்வ இந்து பரிஷத்தினர் எப்பொழுது அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்படும்? எப்பொழுது அரசியல் சட்டம் மாற்றம் செய்யப்படும்? என்று கேட்கப் பட்டபொழுது “நாடாளுமன்றத்தில் நமக்குத் தனி பெரும்பான்மை கிடைத்தபின் இவைகள் நிறைவேற்றப்படும்” என்றார்.இன்று தீவிர ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் நரேந்திர மோடி இவைகளையெல்லாம் ஒளித்து வைத்துக்கொண்டு மோடி வித்தை காட்டுகிறார்.உலகிலேயே சிறந்த மதம் இந்து மதம், ஏனெனில் அது மதமே அல்ல என்றார் ஜார்ஜ் பெர்னாட்ஷா. ஏனெனில் இது அனைவரையும் அணைத்துக்கொள்ளும், நாத்தீகர்கள் உட்பட விவேகானந்தர் கூட நாத்தீகம் பேசினார்.

அவ்வளவு தாராளமானது, சகிப்புத்தன்மை கொண்டது.கேள்வி என்னவென்றால் மூஞ்சே, சாவர்க்கர், ஆர்எஸ்எஸ் சர்சங்சாலக்குகள் ஹெட்கேவார் (1925-40) குருகோல்வார்க்கர் தேவ்ராஸ், இன்றைய சர்சங்காலக் மோகன்பகத் ஆகியோரின் கொள்கைகள் மாற்றப்பட் டுள்ளனவா? (இவர்கள் அனைவரும் மகாராஷ்டிரா சித்பவன் பிராமணர்கள்!) இந்தமன அமைப்பு நிலை ( (mind set) ) கைவிடப் பட்டுள்ளதா? இதற்கு ஆர்எஸ்எஸ்ஸின் பதில் என்ன? மோடியின் தன்னிலை விளக்கம் என்ன?

நன்றி: தீக்கதிர்,21-03-2014

Thursday 20 March 2014

மோடி ஆட்சி வளர்ச்சியா - தளர்ச்சியா?


குஜராத் ஒளிர்கிறது ஒளிர்கிறது என்கிறார்களே, அதன் பொருள் என்ன? ஒழிகிறதா ஒளிர்கிறதா?

வளர்ச்சித் திட்டம் என்று சொல்லப்படுவதைக்கூட இந்துக்கள் வாழும் பகுதிகளில்தானே? முசுலிம்கள் வாழும் பகுதிகள் நகராட்சிக் குப்பைத் தொட்டிகள்தான்!

தொடக்கப் பள்ளியில் சேரும் இந்துக்கள் 79 விழுக்காடு என்றால் முசுலிம்கள் 75 விழுக்காடுதான். முசுலிம்  மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்லும்போது வெறும் 26 சதவிகிதம் என்கிற பெரும் சரிவே!

டீக்கடை, தையல்கடை, பீடிசுற்றுதல், ரிக்ஷா இழுத்தல், ஆட்டோ ஓட்டுதல் _ இவையெல்லாம் முசுலிம்களுக்கு ஒதுக்கப்பட்ட தீண்டாமைத் தொழில்கள் ஆகிவிட்டன.

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இஸ்லாமியர் வெறும் 12 சதவிகிதமே; மற்றவர்கள் இதில் 89 சதவிகிதம்!

ஃபிரண்ட் லைன் ஏடு  (20.05.2011) குஜராத்தில் வளர்ச்சி நிலை, பொருளாதாரச் சூழல், ஊழல்கள் பற்றி விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டது.
என்.வி.ஏ.பி.ஆர். என்ற பொருளாதார தொடர்பான ஆய்வு மய்யம் குஜராத் மாநிலத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வு வெளியிட்ட அறிக்கையைத்தான் ஃபிரண்ட் லைன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அவற்றுள் சில இதோ:
  • 2002ஆம் ஆண்டில் முசுலிம்கள் படுகொலை - பாதிப்புகள் நடந்திருந்தாலும் இன்னும் முசுலிம்களில் அகதிகளாக முடங்கிக் கிடப்பவர்கள் 23 ஆயிரம் பேர்.
  • சாலைகள், மின் இணைப்புகள், குடிநீர் வசதிகள் ஒரு பக்கம் செய்யப்பட்டுள்ளன எனினும் பொதுவான சமூக மேம்பாடு வளர்ச்சி மிகவும் குறைவே - இதற்கும் காரணம் ஊழல்கள் அதிகரித்ததுதான்.
  • மோடி ஆட்சியில் முப்பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. ரூ. 17 ஆயிரம் கோடி செலவில் சுறாலம் சஃபாலம் என்னும் திட்டம் தீட்டப்பட்டது. குளங்களை வெட்டும் - சீரமைக்கும் திட்டம் இது. தொழிலாளர் களுக்கு உள்நாட்டில் கோதுமை விலையைக் கணக்கில் கொண்டு கூலி வழங்கப்பட வேண்டும்.
  • ஒப்பந்தக்காரர்களுக்கு முன்கூட்டியே தொகை வழங்கப்பட்டுவிட்டது.
  • ஆனால், தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கப்படவில்லை.

    குளங்கள் வெட்டப்பட்டதாக ஏட்டில் காட்டப்பட் டதே தவிர நடைமுறையில் வெட்டப்பட வில்லை. (குளத்தைக் காணோம் - யாரோ திருடிவிட்டார்கள்  என்ற வடிவேலுவின் காமெடி நினைவுக்கு வருமே!).

    தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதற்கான அரிசி மகராஷ்டிர மாநிலத்திற்குக் கடத்தப்பட்டது.
  • மத்திய அரசின் திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 260 கோடியும் சுளையாக விழுங்கப்பட்டது. வேலைகளும் நடைபெறவில்லை _ மக்களும் வேலைவாய்ப்புகளைப் பெற்றிடவில்லை.
  • மீன் வளர்ப்புத் திட்டத்தில்கூட 600 கோடி ரூபாய் நட்டமாகும் அளவிற்குப் பெரும் ஊழல்.
  • பன்னாட்டு நிறுவனங்கள் குவிந்தது உண்மைதான். விவசாய நிலங்கள் பழங்குடியினருக்கான நிலப்பகுதிகள் தாராளமாக பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டன.

    கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக நீதிமன்ற உத்தரவின்பேரில் பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன.

    பெரும் தொழிற்சாலைகள் வந்தன; ஆனால், மக்களின் அடிப்படை வளர்ச்சித் திட்டங்கள் குன்றின.

    வேலைவாய்ப்பு பெருகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பொய்த்துவிட்டது.

    குஜராத் மகுவா பகுதி நிலக்காரர்களின் போராட்டம் மிக முக்கியமானது.

    அணை ஒன்றைக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை பூமிக்கு அடியில் உள்ள சுண்ணாம்புக் கற்களைத் தோண்டி வெளியில் எடுத்து சோப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க உத்திரவிட்டார் நரேந்திர மோடி.

    மோடியின் இந்த அடாத செயலை எதிர்த்து உள்ளூர் பி.ஜே.பி.காரர்களும்கூட விவசாயிகளுடன் சேர்ந்துகொண்டு போராட்டத்தில் குதித்தனர். 30 ஆயிரம் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதிகளை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

    சவுராட்டிரா வாங்கனர் மாவட்டத்தில் 40 ஹெக்டேர் நிலம் ஒரு சதுர மீட்டர் 40 ரூபாய் என்று அடிமாட்டு விலைக்குத் தனியார் தொழிற்சாலைக்கு விற்கப்பட்டது. உள்ளூர் மக்கள் நீதிமன்றம் வரை சென்று தடை ஆணை பெற்றனர்.
  • மோடி ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர் நிலை படுபாதாளத்தில்! தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் பிற ஜாதிகளைச் சேர்ந்தவர்களையும் சரிசமமாக அமர வைத்ததற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியை வேறு ஊருக்குத் தூக்கி அடிக்கப்பட்டார்.
இதுபோன்ற ஏராள தகவல்களை ஃப்ரண்ட் லைன் பட்டியல் போட்டுள்ளதே. இதற்கு என்ன பதில்?

வேலை வாய்ப்பின் நிலை என்ன?

குஜராத்திற்கு முதலீட்டாளர்களை கவரும் வகையில் துடிப்புமிக்க குஜராத் மாநாடு (Vibrant Gujarat Summit) எனும் பெயரில் ஒரு மாநாடு நடத்தினார் மோடி. முதல்முறையாக ரூபாய் 69 கோடிக்கான திட்டங்களை ஈர்த்தார். 2005ஆம் ஆண்டில் ருபாய் ஒரு லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள் செய்தார். பின்னர் 2007இல் ரூபாய் 4 லட்சம் கோடிக்கும், 2011இல் ஏறக்குறைய 21 லட்சம் கோடிக்கம் தொழில் துறை திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்தார்.

எந்த நம்பிக்கையின் அடிப்படையில் முதலீட்டாளர்கள் மோடியுடன் இந்த ஒப்பந்தங்களைச் செய்து கொண்டனர்? முதலீட்டாளர்கள் குஜராத்தில் தாங்கள் விரும்பிய இடங்களில் நிலம் மற்றும் நீராதாரத்தை எளிதாக  பெற்றுக்கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு வரி விதிப்புகளிலும் தொழிலாளர் சட்டங்களிலும் விலக்குகள் அளிக்கப்படுகின்றன. இத்திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, அவை தொழில் நிலங்களாக மாற்றப்படுகின்றன.

தொழிற்சாலைகளுக்கு வனத்துறை நிலங்கள் கையளிக்கப்டுகின்றன. தொழில் நிறுவனங்கள் எல்லாம் சுற்றுச் சூழலைக் கெடுப்பவையாக உள்ளன என்பதால் அத்தொழிற்சாலைகளுக்கு நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன.

துடிப்பான குஜராத் திட்டத்தின் பெயரால் பெரிய அளவிலான முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூகத்தில் ஏற்கெனவே வசதியுடையவர்களே பயனடைவார்கள். சுகாதாரம் குறிப்பாக பெண்கள் மற்றம் குழந்தைகளின் சுகாதாரம், கல்வி, சிறுபான்மையினரின் நிலை, நடுத்தரம் மற்றும் ஏழை மக்களின் பொருளாதார வளம், வேலை வாய்ப்புகள், வாழ்வாதாரங்கள், சுற்றுச்சூழல், பாதுகாப்பு அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஆதாயம் அடைபவர்கள் சிறியதும்,  சிறப்புடையதுமான ஒரு சிறிய மக்கள் தொகைதான். “Vibrant Gujarat Summit 2011: Ridiculous slow off Power” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில், குஜராத், மகாராஷ்ட்ரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை ஒப்பீடு செய்துள்ள அவர், 2006 முதல் 2010 வரையிலான முடிவுகளைக் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்ட்ரா அரசின் முதலீட்டு மதிப்பு ரூபாய் 4,20,546 கோடி. வேலைவாய்ப்புகள் முதலீடு ரூபாய் 1,63,280 கோடி. வேலை வாய்ப்பு மதிப்பீடு ரூபாய் 13,09,613 கோடி. குஜராத்தின் முதலீட்டு மதிப்பு ரூபாய்5,35,873 கோடி. வேலை வாய்ப்பு மதிப்பீடு ரூபாய் 6,47631 கோடியாகவும் உள்ளது என்கிறார்.

தீஸ்தா செதல்வாட் ஆய்வு தரும் தகவல்படி 2009_-2010 ஆண்டின் முடிவில் குஜராத்தில் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் எண்ணிக்கை 8,32,000 ஆக இருந்துள்ளது. அதுவே 2004இல் 9,64,000 ஆகவும்; 2005இல் 9,00,000 ஆகவும்; 2006இல் 8,30,000 ஆகவும்;2007இல் 7,78,000 ஆகவும்; 2008இல் 8,25,000 ஆகவும்;2009இல் 8,25,000 ஆகவும் இருந்துள்ளது. 2003, 2005, 2007 ஆகிய வருடங்களில் மோடி செல்வது மாதிரி Vibrant Gujara இருந்திருக்குமானால் குறிப்பிடத் தக்க வகையில் வேலைவாய்ப்பற்ற மக்களின் எண்ணிக்கை ஏன் குறையவில்லை என அவர் கேள்வி எழுப்புகிறார்.
நன்றி: சமநிலைச் சமுதாயம் அக்டோபர் 2011


ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்கிறபோது கல்வியைக் கணக்கில் கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கான கல்வி வளர்ச்சியில் இந்தியாவில் 15ஆவது இடத்தில் இருக்கும் மாநிலம்தான் குஜராத்.

கட்டட வசதி, குடிதண்ணீர், கழிப்பறை, ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை சதவிகிதம், மாணவர் சேர்க்கை, இடைநிறுத்தம் (DROP OUTS) தேர்ச்சி விகிதம் ஆகியவற்றில் அடிமட்டத்தில் கிடக்கும் குஜராத் மாநிலம் இந்தியாவில் முதல் மாநிலம் என்றும், அமெரிக்கா பாராட்டுகிறது என்றும் பிரச்சாரம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படுகிறது.

மத்திய அரசின் நிதி உதவிகளைக் கொண்டு தொழிற்கல்வி அளிக்கும் பயிற்சி மய்யங்கள் குஜராத் மாநிலத்தில் மேற்கொள்ளத் திட்டம்.

ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் மூன்று லட்ச ரூபாய் மத்திய அரசிடமிருந்து இந்தப் பயிற்சி மய்யங்களுக்கு வழங்கப்பட்டன. பத்தாண்டுகளுக்கு முன் 500 பயிற்சி மய்யங்கள் தொடங்கப்பட்டன.

இவை குறித்து கல்வித்துறைச் செயலாளர் வரேஷ்சின்கா ஆய்வு செய்தார். அதிர்ச்சிதான் காத்திருந்தது. மய்யங்களில்  விளம்பரப் பலகை இருந்தனவே தவிர மாணவர்களும் கிடையாது.

ஒப்புக்குச் சில ஆசிரியர்கள் இருந்தனராம். இந்த ஆசிரியர்களிடத்தில் மாதச் சம்பளம் 7 ஆயிரம் என்று கையொப்பம் வாங்கிக்கொண்டு மூவாயிரத்திற்குக் குறைவாகக் கொடுக்கப்பட்டது.

இந்த ஆசிரியர்கள் முறையான பயிற்சி பெற்றவர்களும் அல்லர். இந்தத் திட்டத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் ஏப்பம்.

சொல்லியிருப்பவர் யார்? கல்வித்துறைச் செயலாளர் - அதுதான் முக்கியம்.

இதுபற்றியெல்லாம் மூச்சுவிடுமா சோ கூட்டம்? மோடி ஆட்சியில் சுயநிதி ஆசிரியர் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 40 கல்லூரிகளில் எவ்வித வசதியும் கிடையாது. பொதுமக்களின் வளர்ப்பு முட்டி எழுந்தது. இந்த நிலையில் ஏ.பி.படேல் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அடிப்படை வசதியின்றி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை குழு அறிக்கை அம்பலப்படுத்தியது.

40 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறக் கூடாது என்று தேசியக் கவுன்சில் ஆணை பிறப்பித்துவிட்டது. தேசியக் கவுன்சில் சார்பாக அய்ந்து குழுக்கள் குஜராத்திற்குச் சென்றன. அவசரமாக வெவ்வேறு கல்லூரிகளிலிருந்து மாற்றி மாற்றி ஆசிரியர்களை வரவழைத்து கண்ணில் மண்தூவும் ஏமாற்று வேலைகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. ஆகா மோடியின் நிர்வாகமே நிர்வாகம்!

குடிநீருக்காக பல மைல்கள் நடந்து செல்லும் அவலம்தான் இன்னும் குஜராத்தில்.

வளர்ச்சியோ வளர்ச்சி என்று குஜராத் கொண்டைக்குப் பூ சூட்டுகிறார்கள்; அம்மாநில அரசின் கடன் கொஞ்சம்தான். 1.3. லட்சம் கோடி (கொஞ்சம் தானே!)
ஊழலற்ற ஆட்சி  என்று சங்கெடுத்து ஊதி முழங்குகின்றனவே உயர்ஜாதி ஊடகங்கள் -அதாவது உண்மைதானா?

ஊழல் என்றால் உடனே வெளிப்படுத்தும் அமைப்புதானே லோக் அயுக்தா?

குஜராத்தில் இதன் நிலை என்ன? லோக் அயுக்தா உண்டு; ஆனால் எட்டாண்டு காலமாக அதற்கு நீதிபதியை நியமிக்காதது ஏன்? மடியில் கனமில்லை என்றால் நீதிபதியை நியமிக்க வேண்டியதுதானே?

மோடிதான் நியமிக்கவில்லை; நீதிபதியை ஆளுநர் நியமனம் செய்தார். மாநில முதல்வர் உரிமையைப் பறிக்க இவர் யார் என்ற உரிமைக் குரல் கொடுப்பது போல ஊத்தை வாயைத் திறக்கின்றனர்.

லோக் அயுக்தா விஷயத்தில் மோடி ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று எந்தப் பார்ப்பனன் கேட்டான்? எந்த ஏடு எழுதியது?

இன்னும்    பஜாஜ் ஸ்கூட்டர்கள்தான் தலைநகரமான அகமதாபாத்தில்; ஒரு வகையில் இன்னும் கற்காலத்தில்தான் குஜராத் இருக்கிறதே தவிர தற்காலத்தின் பக்கம் அடியை எடுத்து வைக்க முன்வரவில்லை.

ஒரு கட்டத்தில் குஜராத்தை வானளாவப் புகழ்ந்த அன்னா ஹசாரே குஜராத்தை நேரில் சென்று பார்த்த பிறகு அப்படியே தலைகீழாக மாற்றிப் பேசினாரே_

இவ்வுளவு மோசமான மோடி ஆட்சியையா நான் புகழ்ந்து உரைத்தேன் என்று வெட்கப்பட்டார் மனுஷன்.

குஜராத்தின் உண்மை நிலை என்ன? - இதோ அன்னா ஹசாரே பேசுகிறார்.

ஊழலுக்கு எதிரான சொற்பொழிவாற்ற அன்னா ஹசாரேவின் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடாகி இருந்தது. அதில் பல அதிரடி அறிக்கைகளை, குஜராத்தில் உண்மை நிலைகளை நேரில் கண்டு மனம் வெதும்பி மக்களுக்குச் சமர்ப்பிப்பதாக அறிவித்தார்.
  • மகாத்மா காந்தி எதை ஒழிக்கப் பாடுபட்டோரா அந்த மது விற்பனை காட்டாற்று வெள்ளம்போல் குஜராத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுவா காந்தி பிறந்த மண்?
  • ஓரு நாளைக்கு குஜராத்தில் நாலரைக் கோடி ரூபாய்க்குப் பால் விற்பனை. ஆனால் 6 கோடி ரூபாய்க்கு மது விற்பனை! குஜராத்தில் பால் விற்பனையைவிட மது விற்பனைதான் அதிகமாக உள்ளது.
  • அகமதாபாத் நகரில் மட்டுமே ஒவ்வொரு நாளும் 3 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு மதுவகை கொண்டுவரப்படுகிறது.
  • குஜராத் மாநிலம் என்றாலே பாலுக்கும் பால் பொருளுக்கும் பிரபலம். ஆனால், பூரண மதுவிலக்கு (!) அமலில் (?) உள்ள மோடி ஆட்சியிலோ அது அயல்நாட்டு மதுவுக்கும் கள்ளச் சாராயத்திற்கும் பிரபலம் ஆகிவிட்டது!
  • லோக்பால் மசோதா தயாராக்குவதற்காக குஜராத்திற்கு வந்து பொதுமக்களிடம் கையெழுத்துகள் சேகரித்தபோதுதான் நரேந்திர மோடியைக் குறித்தும் குஜராத் மாநிலத்தைக் குறித்தும் அறிய முடிந்தது.
  • இவரைப் பற்றியா நான் சென்ற மாதம் பாராட்டினேன்?
  • முதலில் இந்த முதல்வர் மோடி தன் மாநிலத்தில் லோகாயுக்தாவை அமல்படுத்த வேண்டும்.
  • பின்னர் இவர் நேர்மையானவராய் கிராம சபைக்கு அதிகாரம் தரவேண்டும்.
  • நாட்டில் குஜராத்தில்தான் ஊழல் அதிகம் என்று நான் இங்கே வந்தபிறகுதான் - நேரில் பார்த்தபிறகுதான் தெரிகிறது.

    மகாத்மா மண்ணில் ஊழல்...!
  • என்னுடைய ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டம் வெற்றி கண்டவுடன் எனது போராட்டம் குஜராத்தை நோக்கியேதான் அமைந்து இருக்கும் என்று பொரிந்து தள்ளிவிட்டாரே, ஹசாரே!
இனியாவது இந்துத்துவா பிடியில் உள்ள பத்திரிகைகளின் பொய்ச் செய்திகளை நம்பி குஜராத்தில் முன்னேற்றம்... மோடியின் அருமையான ஆட்சி... என்றெல்லாம் பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்னா ஹசாரே குஜராத்தைப் பற்றிப் பாராட்டி நான்கு சொல் சொன்னதும் வரவேற்று எழுதிய திருவாளர் சோ ராமசாமி, உண்மை நிலையை உணர்ந்து மோடியைப் புரட்டி எடுத்தபின், ஹசாரேயைக் கீழே போட்டு மிதிக்க ஆரம்பித்துவிட்டார். பார்ப்பனத்தனம் என்பது இதுதான்!

ராமராஜ்ஜியத்தைப் பற்றிப் பேசிய காந்தியாரை மகாத்மாவாக்கிப் பார்த்தார்கள். மதச்சார்பின்மை பற்றி காந்தியார் பேச ஆரம்பித்ததும் அவரை துர் ஆத்மாவாகக் கருதி மார்பில் குண்டைப் பாய்ச்சவில்லையா? பார்ப்பனர்களைத் தெரிந்துகொள்ள இன்னும் எவ்வளவு காலம் தேவை?

நரேந்திர மோடி நேர்மையின் சின்னம் - உத்தம புத்திரன் - சுத்தமான நெய்யில் பொரித்த சுத்தமான அக்மார்க் சரக்கு என்று ஒரு கூட்டம் தம் கையில் இருக்கும் ஊடகங்கள் மூலம் நூல்கட்டி வானத்தில பட்டமாகப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. உண்மை நிலை என்பதை நாம் சொல்லவில்லை; மோடியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரே பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்திருக்கிறார். அவர் பெயர் ரமிலாபென் தேசாய்.

ஹிட்லர் தன் சொந்த நாட்டு மக்களை ஒருபோதும் படுகொலை செய்யவில்லை. ஆனால் மோடியோ தன் அதிகாரத்தைக்
 காப்பாற்றிக் கொள்ள சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவித்தவர்.

பொய்களைப் பிரகடனங்களாக வெளியிட்டவர்; முதல்வர் மோடியோ அவர்தம் அமைச்சரவையினரோ சொத்துக் கணக்குகளைக் காட்டவில்லை. அரசு நிலங்களை மிகக் குறைந்த விலையில் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற  தொழில் நிறுவனங்களுக்கு மோடி தாரை வார்த்துவிட்டார்.

கட்ஜ் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பி.ஜே.பி.யின் தலைவராக இருந்த வெங்கையா நாயுடு பங்குதாரராக இருந்த நிறுவனத்துக்குக் குறைந்த விலையில் விற்றார் என்று பி.ஜே.பி. சட்டமன்றப் பெண் உறுப்பினர் ஆன்லுக்கர் இதழுக்கு விரிவான பேட்டியாகவே அளித்துள்ளார்.

உண்மை நிலைகள் இவ்வாறு இருக்க பார்ப்பன - பனியா சக்திகள் மோடியை இந்தியாவின் பிரதமராக்கி தங்கள் சுயநலத் திட்டங்களுக்கு அரண் அமைக்க ஆயாசப்படுகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சோ குருமூர்த்தி அண்ட் கம்பெனி ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.

கேள்வி: நரேந்திர மோடி பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவராகவோ பிரதமராகவோ வாய்ப்புண்டா?

பதில்: எதிர்காலத்தில் அந்தப் பொறுப்பை ஏற்பதற்கான தகுதி படைத்தவராகத்தான் நான் அவரைக் கருதுகிறேன். (துக்ளக் 2.01.2008 - பக்கம் 12) அதோடு விட்டாரா? இன்னும் இருக்கிறது.... எதனால் குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி சாத்தியமாயிற்று? பா.ஜ.க.வினர் காட்டிய முனைப்பு, அத்வானி போன்ற அகில இந்தியத் தலைவர்களின் பிரச்சாரம்; அருண்ஜெட்லி போன்றவர்களின் உழைப்பு; இவை எல்லாவற்றிற்கு மேலாக நரேந்திர மோடி மக்களிடையே பெற்றிருக்கிற நம்பகத்தன்மை, அவருடைய நிர்வாகத்தில் குஜராத் கண்டிருக்கும் முன்னேற்றம் இவைதான் பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்குக் காரணம்.

வேறு எந்த மாநில முதல்வருக்கும்  இப்படிப்பட்ட பெருமை கிட்டியதில்லை. மோடி ஆறு வருடங்கள் ஆட்சி புரிந்து, அவரை வெறுத்து, தூஷித்து, கரித்துக் கொட்டி பிரச்சாரம் செய்கிற அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும், டெலிவிஷன்களும் மிகக் கடுமையாக முனைந்தும் ஒரு ஊழல் குற்றச்சாட்டைக்கூட அவர் மீது சுமத்த அவர்களால் முடியவில்லை. இன்றைய சீர்கெட்ட அரசியலில் ஒரு மாநில முதல்வர் இப்படிபட்ட நேர்மையாளராக திகழ முடியும் என்று நரேந்திரமோடி நிரூபித்திருக்கிறாரே, அதுதான் அவரது மிகப்பெரிய வெற்றி. (துக்ளக்  2.1.2008 தலையங்கம்)

ஆறு ஆண்டுகாலம் ஓகோ என்று ஆட்சி புரிந்துவிட்டாராம் மோடி. ஹிட்லர்கூட ஜெர்மனியில் வெற்றி பெற்றவன்தான் -_ ஆட்சி புரிந்தவன்தான். நாஜிகளைத் தவிர வேறு யாரையும் கொல்லுவதில்லை என்றான். மோடியும் அப்படித்தான் முஸ்லிம்தளைதவிர வேறு யாரையும் கொன்று குவிக்கவில்லை.

இடி அமீன்கூட கால் நூற்றாண்டு ஆட்சிக் கட்டிலில் அட்டகாசமாக அமர்ந்திருந்தான். எட்டு லட்சம் கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிய சுகார்தா கூட 30 ஆண்டுகாலம் ஆட்சி சிம்மாசனத்தை அலங்கரித்தான். பார்ப்பனர்களே மெச்சும் பாரத கதைப்படி துரியோதனன்கூட தாயாதிகளைக் காட்டுக்கு அனுப்பி 14 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறான்.

கோத்ரா சமபவத்திற்குப் பிறகு குஜராத்தில் நடந்தவை கண்டனத்துக்குரியவைதான் என்றாலும், அந்தச் சம்பவங்களுக்கு பா.ஜ.க. -வைக் குற்றம் கூற முடியாது.

(துக்ளக் - 6.5.2009) என்கிறார் சோ. ராமசாமி, அப்படியென்றால் யாரைக் குற்றம் கூறவேண்டும்?

2000 பேர் படுகொலை செய்யப்பட்டபோது அங்கு ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த முதல் அமைச்சர் மோடி இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர் அல்லவா?

முதல் அமைச்சர் மோடி இதற்கெல்லாம் பொறுப்பு இல்லை என்றால், உச்சநீதிமன்றம் முதல் அமைச்சர் மோடியை நீரோ மன்னன் என்று ஏன் கேவலப்படுத்தியது? பதில் உண்டா?

பா.ஜ.க. அரசு அதற்குப் பொறுப்பில்லை என்றால் வேறு யார் பொறுப்பு என்றாவது திருவாளர் சோ கூறவேண்டாமா? பார்ப்பனர்களின் நியாய தர்மம் எந்த யோக்கியதையில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா? இந்துமத வெறி கொண்டு இஸ்லாமிய மக்களை மிருகம் போல் வேட்டையாடி, கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்து மாலையாக போட்டுக் கொண்டு, விறகு கட்டைகளை எரிப்பதுபோல முஸ்லிம்களை கட்டாகக் கட்டி பேக்கிரி அடுப்பில் திணித்து துடிக்கத்துடிக்கக் கொலை செய்து வெறியாட்டம் போட்ட ஒரு கொடூரனுக்குப் பெயர்தான் நரேந்திர மோடி.

இந்தப் படுமோசமான பக்கத்தை கருப்புத் திரைபோட்டு அறவே மறைத்து, நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஒளிர்கிறது - வளர்கிறது என்ற ஒரு படத்தைக் காட்டி - அவரை இந்தியாவின் பிரதமர் நாற்காலியில் உட்கார வைக்க சதித்திட்டத்தைத் தீட்டும் வேலையில் இறங்கியுள்ளது ஒரு கூட்டம்.

அதாவது உண்மையா? குஜராத் மாநில வளர்ச்சி பெற்றிருக்கிறதா? மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளவையா என்றால் அதுதான் இல்லை.

பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்களை படுகொலை செய்ததை மறைக்கும் பித்தலாட்டக்காரர்கள் பொய்க்கு ஒப்பனை செய்து பொய்க்கால் குதிரையில் ஏற்றி நடனம் செய்விக்க மாட்டார்களா?

குஜராத் வளர்ச்சி என்பதும் கோயபல்சு பிரச்சாரம்தான் - எச்சரிக்கை!

மோடி அணியும் மூடி!

2002 பிப்ரவரி 27ஆம் தேதி குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி ரயில் பெட்டி எரிக்கப்பட்ட நிகழ்ச்சி - 56 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - வன்முறை உலகில் அதற்கு முன் நடத்தப்பட்ட அதி பயங்கரவாதப் பட்டியலில் இடம்பெறத் தக்கதே.
 
 கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டது - தொடக்கத்தில் விபத்து என்றே கருதப்பட்டது. ஊடகங்களும் அவ்வாறே செய்தியை வெளியிட்டன.
 
 விபத்து நடந்த இடத்தையும், பலியானவர்களையும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரபாய் தாமோதர தாஸ் மோடி நேரில் சென்று பார்த்த பிறகே பிரச்சினை திசை திருப்பப்பட்டது.
 
 பலியானவர்களை அவரவர் சொந்த ஊருக்குக் கொண்டு செல்வது என்ற முடிவும் மாற்றப்பட்டு அனைத்துச் சடலங்களையும் ஊர்வலமாகக் கொண்டு செல்வதாக முடிவு எடுக்கப்பட்டது. அன்று காவல்துறை அதிகாரிகளைக்கூட்டி கலவரத்துக்கான கத்தி தீட்டப்பட்டது.
 
 நாளை நடக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின்போது காவல்துறை கண்டுகொள்ளக் கூடாது. - தலையிடக் கூடாது என ஆணையிடுகிறார் முதல் அமைச்சர்.
 
 இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட உளவுத்துறை அதிகாரி ஸ்ரீகுமார், ஷர்மா, சஞ்சீவ்பட் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.
 
 மோடியின் இந்துத்துவா வெறியாளர்களால் குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. சி-ஹ்சான் ஜாப்ரி மனைவி தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி சஞ்சீவ்பட் பிரமாணப்பத்திரமாகவே (AFFIDAVIT) இதனைத் தாக்கல் செய்தார் என்பது முக்கியமாகும்.
 
 எந்த அளவுக்கு முதல் அமைச்சர் மோடி சென்றுள்ளார்? தெகல்கா புலனாய்வு நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களைப் பேட்டி கண்டு டேப்களை வெளியிட்டுள்ளதே!
பல்கலைக்கழக தலைமைத் தணிக்கையாளர் திமந்பட் இதோ பேசுகிறார்.

கோத்ரா சம்பவத்துக்குப் பிறகுதான் இந்த எதிர்வினைகள். பிறகு தகுந்த சூழல் சங்பரிவாரால் உருவாக்கப்பட்டது. அதாவது, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., பஜ்ரங்தள், துர்காவாசினி ஆகிய அமைப்புகளின் தலைவர்களால்; அதற்கு முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் முழு ஆதரவு கிடைத்தது. இந்துக்கள் இவ்வாறாகக் கொளுத்தப்படுவதை விரும்புவதாக யாராவது தைரியம் இருந்தால் வெளிப்படையாகச் சொல்லட்டும். அப்படி இந்துக்களுக்கு எதிராக சூழ்ச்சிகள் இருந்ததால்தான் முழு ரயிலையும் எரிக்க முயன்றார்கள். இதற்குப் பின்னும் நாம் எதுவும் செய்யவில்லை யென்றால், இதற்குப் பதிலடி கொடுக்கவில்லை யென்றால் மேலும் ஒரு ரயில் எரிக்கப்படும். இந்த யோசனைதான் முதல்வர் மோடியிடமிருந்து வந்தது. நான் அந்த ஆட்டத்தில் கலந்து கொண்டேன் என்று பல்கலைக்கழகத்தின் தலைமைத் தணிக்கையாளர் சொல்கிறார் என்றால் - மோடி எப்படிப்பட்ட மூர்க்கர்- முரடர் - மோசமான மதவெறியர்.
மோடி கூட்டிய கூட்டத்தில் நடந்ததை நன்கு அறிந்தவர் அமைச்சரவை சகாவான ஹரேன் பாண்டியா; மக்கள் விசாரணை ஆணையத்திடமும் நடந்தவை பற்றி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
 
 இவரை விட்டுவைத்தால் ஆபத்து என்று நினைக்கிறார்கள்; விளைவு, அந்த அமைச்சர் படுகொலை செய்யப்படுகிறார் - நடைப் பயணத்தில் இருந்தபோது.தன் மகன் படுகொலைக்குக் காரணம் முதல் அமைச்சர் மோடிதான் என்று ஹரேன் பாண்டியாவின் தந்தையார் நானாவதி ஆணையத்திடம் தெரிவித்தார். ஆணையம் குறட்டைவிட்டதா, கோட்டைவிட்டதா என்பது யாருக்கோ வெளிச்சம்.
 
 முதல் அமைச்சர் மோடி பற்றி அவரது கட்சியைச் சேர்ந்தவர்களிடமே (பி.ஜே.பி.) பேட்டி வாங்கி வெளியிட்டது தெகல்கா.
 
 விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த தலைவர் - அவர் பெயர் ராஜேந்திர வியாஸ் - என்ன சொல்கிறார்? நரேந்திர மோடி காவல்துறையை எங்களுக்காகப் பணிபுரியச் செய்தார் என்கிறாரே.
 
 நீங்கள் ஜெய்ராம் என்று சொன்னால் காவல்துறையினர் புரிந்து கொள்வார்கள் என்று சங்பரிவார்க்குச் கூறப்பட்டதாக தவால் ஜெயந்த் பட்டேல் (வி.எச்.பி.) கூறியுள்ளார்.
 
 காவல்துறையினரே எப்படியும் 70 _ 80 பேர்களைக் கொன்றிருப்பார்கள் என்கிறார் சுரேஷ் ரிச்சர்ட்.
 
 இன்று பஜ்ரங்தளைச் சேர்ந்த (குரங்குப் பட்டாளம் என்று பொருள்) ஹரேஷ் பட் என்ன கூறுகிறார்? மூன்று நாள்களில் அனைத்தையும் முடித்து விடுங்கள். அதற்குமேல் கால அவகாசம் கேட்காதீர்கள் என்று முதல் அமைச்சர் மோடி உத்தரவிட்டார் என்று கூறியுள்ளார்.
 
 இன்னொரு பஜ்ரங்தள் சொல்லியிருப்பது - அவர் பெயர் பாபுபஜ்ரங்கி _ பேசுகிறார்: கோத்ரா கலவரங்கள் நடந்தபோது எல்லாவற்றையும் கச்சிதமாக முதல் அமைச்சர் மோடி செய்து முடித்தார். முதல்வர் மோடியின் ஆசிர்வாதத்தால்தான் இவ்வளவையும் செய்து முடிக்க முடிந்தது என்கிறார்.
 
 
குஜராத் கலவரம் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது?
 
 மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர் டேவிட் ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. குஜராத் கலவர வீடியோ காட்சி என்னிடம் காட்டப்பட்டது. அந்தக் காட்சிதான் என்னைப் பயங்கரவாதியாக ஆக்கியது என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் என்றால் குஜராத் குரூரம்தான் எத்தகையது! சிந்திக்க வேண்டிய ஒன்றே.
 
 குஜராத் கலவரத்தில் மிகவும் கொடுமையானது பேக்கரி அடுப்பில் 14 பேர்களை விறகுக் கட்டைகளைப் போல் கட்டி துடிக்கத் துடிக்கக் கொளுத்திக் குதூகலித்ததாகும்.
 
 வதோதரா என்ற நகரம் பெஸ்ட் பேக்கரி என்னும் நிலையம். சங்பரிவார் கும்பல் கொலைவெறி ஆட்டம் போட்டு உள்ளே புகுந்து _ பேக்கரியின் உரிமையாளர் ஹபிபுல்லா ஷேக் உட்பட 14 பேர் பேக்கரி அடுப்பில் தள்ளப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
 
 அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் எப்படியோ தப்பிப் பிழைத்தார். காவல் நிலையம் சென்று 21 பேர் மீது புகார் கொடுத்தார்.
 
 பிரச்சினை பெரிதான நிலையில் பெயரளவிற்கு வழக்கைப் பதிவு செய்தனர்; நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது. மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்தன. அவர்களின் கண்களில் மண்ணைத் தூவிட உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.
 
 முதலில் 21 பேர்களையும் விடுதலை செய்த நீதிபதி எச்.யூ.மகீதா என்பவருக்குச் சன்மானம் கொடுக்க வேண்டாமா? குஜராத் மாநில மின் வாரியத்தில் ஆலோசகர் பதவி அளித்து உபசரிக்கப்பட்டது. மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய், கார், பங்களா, தொலைப்பேசி வசதிகள் - உதவியாளர்கள் இத்யாதி... இத்யாதி...
 
 இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி ராஜு, (தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.) அரிஜித் பசாயத் குஜராத் மாநில மோடியை நீரோ மன்னன் என்று எழுதினார்கள்.
 
 எந்தப் பார்ப்பன ஏடும், இதற்காக மோடி பதவி விலக வேண்டும் என்று நான்கு எழுத்துகள் எழுதவில்லை.
 
 அத்தோடு நீதிபதிகள் விட்டார்கள் இல்லை. வரைந்து தள்ளியிருக்கிறார்கள் பத்தி பத்தியாக.
 
 சட்டத்தின் பார்வையில் இது விடுதலையே அல்ல; தீர்ப்புரை என்ற பெயரால் விரைவு நீதிமன்றத்தின் முடிவுகள் மதிக்கத்தக்கவையல்ல; நம்பிக்கைக்கு உரியவையும் அல்ல.
 
 மகாத்மா காந்தி பிறந்த பகுதியில் கொடூரமான கொலைகள் நடந்துள்ளன. இதைப் பார்க்கும்போது அவர் மதித்த அனைத்துக் கோட்பாடுகளையும் உதாசீனப்படுத்தும் படியான அளவிற்குச் சிலர் போய்விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.
 
 எந்தவிதப் பாதுகாப்புமற்ற தப்பான இடத்தில் பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டது - இந்தச் சமுதாயத்திற்கே இழைக்கப்பட்ட அவமானம் ஆகும்.
 
 மனிதநேயத்தின் சிறுசிறு துளிகள் சேர்ந்துதான் மனிதம் உண்டாக்கப்பட்டது. இந்த மனிதம் கொடுங்கோலர்களிடம் வற்றிப்போய் விட்டதோ! ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பிறந்தார்கள் என்பதற்காகவா இவர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.
 
 குஜராத் உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறையே சரியல்ல. அதன் தீர்ப்பில் குறைபாடுகளும், ஓர வஞ்சகமும், ஒருதலைப்பட்ச முடிவுகளும் உள்ளன. நீதி மனப்பாங்கே இல்லாமல் சொல்லப்பட்ட தீர்ப்பு!
 
 நீதி வழங்கும் நெறிமுறைகள் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன. துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன. தான் விரும்பியபடி செய்யும் வகையில் சிதைக்கப்பட்டுள்ளன.
 
 குற்றவியல் புலனாய்வோ கடன்காரத்தனமாக ஏனோ தானோ எனச் செய்யப்பட்டுள்ளது. பாரபட்சமற்ற முறையிலே செயல்படவில்லை. உண்மையைக் கண்டுபிடித்து குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் வகையில் புலனாய்வு செய்யப்படவில்லை என்றது உச்ச நீதிமன்றம்.
 
 _இதற்குமேல் ஒரு தீர்ப்பில் சொல்லப்பட என்ன இருக்கிறது? இதைப்பற்றி எந்தப் பத்திரிகை மூச்சுவிட்டது?
 
 பத்திரிகா தர்மம் பேசும் பார்ப்பனப் பத்திரிகைகளின் பசப்புகளைத் தெரிந்துகொள்ள இந்த இடம் போதுமானதே.
 
 குஜராத் மாநிலத்தில் வழக்கு நடத்தப்படக் கூடாது. மும்பையில் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு நிற்காமல் மோடி அரசு நியமித்த அரசு வழக்குரைஞர்களையும் அகற்றிவிட்டு வேறு இரு வழக்குரைஞர்களை (பி.ஆர்.வகீல், மஞ்சுளா) நியமித்தது.
 
 மொத்தம் 4,252 வழக்குகளில் குஜராத் அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டவை 2,000க்கு மேலாம். மறுபடியும் அனைத்து வழக்குகளின் மீதும் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வழக்கு நடத்தப்பட வேண்டும் என்று மோடியின் முரட்டுத் தலையில் குட்டு வைத்தது உச்ச நீதிமன்றம்.
 
 குஜராத் மாநில எல்லைக்குள் சிக்கிய உயர் நீதிமன்றம்வரை எப்படி தன் கைக்குள் போட்டு மடக்கி வைத்திருந்தது மோடியின் குஜராத் அரசு என்பது உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் பளிச் பளிச்சென்று தெரிகிறதே.
 
 நடோரா பாட்டியா என்னும் இடத்தில் காவிகள் கூலிகள் 58 முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். காவல் நிலையம் வழக்கை எப்படிப் பதிவு செய்தது தெரியுமா?
 
 கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்கிற வன்முறைக்குப் பதில் தரும் வகையில் இந்த வன்முறை நடந்திருக்கின்றது என்று வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதன் பொருள் என்ன?
 
 முதல் தகவல் அறிக்கையிலேயே தீர்ப்பும் எழுதப்பட்டுவிட்டது என்றுதானே பொருள்.
 
 மோடி அமைச்சரவையில் உயர்கல்வி அமைச்சராக இருக்கக்கூடியவர் மாயாபென் கோட் நானி என்னும் பெயர் கொண்ட அமைச்சர். நரோடா பாட்டியா மாவட்டம் _ நரோடா கிராமத்தில் 106 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பின்னணியில் இருந்தவர் இந்தப் பெண் அமைச்சர். தலைமறைவானவர் பின் சரணடைந்து சிறைவாசம் கண்டவர்.
 
 முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட நரவேட்டையில் 2,000 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 1,70,000 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. 203 தர்காக்கள், 205 மசூதிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. 3 கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களும் தப்பவில்லை. 4,000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் எரிப்பு. காவல்துறையினர் 10 ஆயிரம் தோட்டாக்களைப் பயன்படுத்தினர்.
 
 காவல்துறையினரே தங்கள் வாகனங்களிலிருந்து பெட்ரோலை எடுத்துக் கொடுத்துக் கொளுத்தச் செய்தனர் என்பது எத்தகு கொடுமை!
 
 3,800 கோடி ரூபாய் இழப்பு என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் 12 லட்சம் பேர் களத்தில் இறங்கி வன்முறை வேட்டை நாய்களாக ஆடித் தீர்த்தனர். ஒரு கணம் மனக்கண்முன் அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்க்கட்டும் - மனச்சான்று உள்ளவர்கள்.
 
61 ஆயிரம் அப்பாவி மக்கள் வீடுகளைத் துறந்து ஓடிவிட்டனர். 70 ஆயிரம் முஸ்லிம்கள் சொந்த மண்ணிலேயே முகாம்களில் அடைக்கலம் தேடிய அவலம்.

ஹிட்லரின் மறுபதிப்பான மோடி அச்சூழலில் - கவுரவ யாத்திரை ஒன்று மேற்கொள்கிறார். (இதில் கவுரவம் என்ன வேண்டிக் கிடக்கிறது!) அப்பொழுது அவர் திருவாய் மலர்ந்தது என்ன தெரியுமா?
 
 நாங்கள் அகதி முகாம்கள் நடத்தி, முஸ்லிம்களுக்குப் பிள்ளை பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பவில்லை. இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும் மக்களுக்குப் பாடம் படிக்கக் கொடுக்க வேண்டும் - என்று ஒரு முதல் அமைச்சர் பேசுகிறார் என்றால், சீ... இப்படியும் சில மனிதர்களா என்று துக்கப்படத்தான் வேண்டியுள்ளது. பாபர் மசூதியை சங்பரிவார்க் கும்பல் இடித்தபோதுகூட இந்த மோடி என்ன சொன்னார் தெரியுமா? பி.ஜே.பி., அலிகள் கட்சியல்ல; ஆண்கள் கட்சி என்று சொன்ன சண்டியர் இவர்.
 
 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய படுகொலைகள் நடத்தப்பட்ட குஜராத் கலவர வழக்கில் முதல் அமைச்சர் மோடி வசமாக மாட்டுவதற்கு ஆயிரம் ஆயிரம் ஆதாரங்கள் உண்டு.
 
 ஆனால் என்ன நடந்தது? வழக்குக்குத் தேவைப்பட்ட ஆதாரங்கள் அத்தனையும் 2007இல் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன என்று மோடி அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஆணையத்தில் அரசு சார்பாக ஆஜரான குஜராத் அரசு வழக்குரைஞர் எஸ்.பி.வகீல் தெரிவித்துள்ளார்.
 
 எந்த எல்லைக்கும் சென்று தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் கும்பலின் தலைவனாக மோடி இருப்பது இதன் மூலம் அம்பலமாகவில்லையா?
 
 பிரபல நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் மோடியின் மீது சுமத்தியுள்ள குற்றச்சாற்று மோடி ஓர் அசிங்கமான மனிதர் என்பதற்கான ஆதாரமாகும்.
குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மல்லிகா சாராபாய் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
 
 அந்த வழக்கைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு தனது வழக்குரைஞர்களுக்கு லஞ்சமாகப் பணம் கொடுத்தார் என்று பகிரங்கமான குற்றச்சாற்றை மோடி மீது சுமத்தியுள்ளார். காவல்துறை அதிகாரி ஸ்ரீகுமார் மூலம் பணம் தருவதற்கு ஏற்பாடு செய்தார். இந்தத் தகவலை அந்தக் காவல் துறை அதிகாரி ஸ்ரீகுமார், நானாவதி ஆணையத்திடம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார் என்றால் மோடியின் மோசமான குணத்தைத் தெரிந்து கொள்ளலாம். குஜராத்தில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் வழக்குரைஞர் மேமோன் கூறினார்:- குஜராத்தில், பொடா பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அல்ல;பயங்கரவாதிகளைத் தயார் செய்யும் சட்டம் என்றார்.
 
 இன்னொன்றும் முக்கியமானது. பொடாவில் இந்துக்கள் கைது செய்யப்படக் கூடாது என்று தனிச் சட்டம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். இதற்கு குஜராத் உள்துறை அமைச்சரிடமிருந்து பதில் இல்லை என்று கூறினார் அந்த மனித உரிமைக்கான வழக்குரைஞர்.
 
 மோடி ஆட்சியில் பொடா சட்டத்தின்படி 287 பேர் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர் என்றார். அதில் 286 பேர் முசுலிம்கள், ஒருவர் சீக்கியர்.
எப்படி இருக்கிறது? படுகொலை செய்யப்பட்ட சமூகத்தவர் மீது சட்டம் பாய்கிறது; படுகொலை செய்தவர்களுக்குச் சட்டம் சரணாகதி. ஆம், இதுதான் மோடி என்னும் மூவாயிரம் மடங்கு ஹிட்லரின் புத்தியும் - சட்டத்தை மிதிக்கும் மிருகத்தனமும்.

மோடியின் சிந்தனை எத்தகையது. கர்மயோகி என்னும் நூலை 2007ஆம் ஆண்டில் மோடி எழுதினார். அதில் என்ன கூறுகிறார்? சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு ஞானம் ஊட்டப் பெறலாம். அவர்களின் வேலை சமூகத்தின் மகிழ்ச்சிக்காகவும், கடவுள்களின் சந்தோஷத்திற்காகவும் செய்யப்படுவதாகும் எனவும் கருதலாம். (THE TIMES OF INDIA 5-5-2010)

விபரீத துண்டறிக்கைகள் - சுவரொட்டிகள்!
ஒரு பக்கம் மோடியின் தலைமையில் அரச பயங்கரவாதம் என்ற தன்மையில் காவல்துறையின் தக்க பாதுகாப்போடு முஸ்லிம்கள் வன்முறையாளர்களால் - கூலிகளால் படுகொலை நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொருபுறம் சங்பரிவார்க் கும்பலால் துண்டு வெளியீடுகளும் சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டு இந்த வெறித்தனம் கொம்பு சீவி விடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அவுட் லுக் ஏட்டில் வந்துள்ள நடுத்தர இந்துக்கள் என்ற பெயரில் வெளியான துண்டறிக்கை இதோ:-

அன்பார்ந்த நண்பர்களே,
உங்கள் உயிருக்கு ஆபத்து. நீங்கள் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். கிருஷ்ணன், அர்ச்சுனனைப் பார்த்து அறிவுறுத்தினார். இந்துக்களுக்கு எதிரானவர்களை ஆயுதம் எடுத்துக் கொல்லத் தயங்காதே என்று.

தீவிரவாதிகள் உங்களை எங்கு வேண்டுமானாலும், உங்கள் படுக்கை அறையிலோ, வரவேற்பறையிலோ கொல்லுவார்கள்.

போலீசோ, இராணுவமோ உங்களைக் காப்பாற்றாது.
இந்து _ முஸ்லிம் ஒற்றுமை என்று பேசுபவர்கள் கோடிக்கணக்கான இந்துக்களை ஏமாற்றுபவர்கள். வந்தே மாதரம், பாரத் மாதாக்கீ ஜே என்று சொல்லாத மக்களை நீங்கள் எப்படி நம்புவது?

எங்கள் முன்னோர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள்.

முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாட்டை நம்பாதவர்கள். ஒரு நாள் அவர்கள் மெஜாரிட்டியாகிவிடக் கூடும்.

பின்லேடன் 5,000 அமெரிக்கர்களைக் கொன்றான். அமெரிக்கர்கள் 10,000 ஆப்கானியர்களைக் கொன்று சரியாகக் கணக்குத் தீர்த்துக் கொண்டனர்!

முஸ்லிம்கள் ஏ.கே.47-களையும், ஆர்.டி.எக்ஸ்., ராக்கெட் ஏவுகணையும் வைத்துள்ளனர்.

கோத்ரா என்பது ஒரு டிரய்லர்தான் இனிமேல்தான் முழுத் திரைப்படம் வெளிவர இருக்கிறது. முஸ்லிம்கள் நிறைய கோத்ராக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இஸ்லாமிய நாடுகள் அல்லாதவைகளை இஸ்லாமிய நாடுகளாக்கும் முயற்சியில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் கைது செய்யப்பட்ட இராம சேவக்குகள் சமூகத்திற்காக மிகப்பெரிய தியாகத்தைச் செய்துள்ளனர். அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவிகள் செய்யப்படவேண்டியது அவசியமாகும்!
விசுவ இந்துபரிஷத்திற்கு வழங்கும் 50 சதவிகிதம் வரிச் சலுகை (80G of IT Act) யைப் பயன்படுத்தி அதற்குத் தாராளமாக நன்கொடை வழங்குங்கள்.
இப்படிக்கு,
சினுபாய்பட்டேல்,
நிதிப் பிரமுக், விசுவ இந்து பரிஷத்
 
 இந்து மதத்தில் கர்மா பலனை - அவாள் அவாள் தலையெழுத்து என்கிற ஒடுக்குமுறையை நியாயப்படுத்திப் பேசும் நீரோ மன்னன்தான் (உச்ச நீதிமன்றம் கொடுத்த பட்டம்) இந்த மோடி.
 
 மோடியின் இந்தக் கருத்துக்காக அந்த நூலைக் கொளுத்தும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியதுண்டு. (11.12.2007)
 
 கலவரம் நடந்த ஓரிரண்டு மாதங்களில் பிரதமர் வாஜ்பேயி அகதி முகாம்களைப் பார்வையிட வந்தார். நிவாரண நிதியாக 150 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை அறிவித்தார். ஆனால், அம்மாநில உள்துறை அமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா?
 
 இதற்குமுன் 7.3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இனி எந்தக் தொகையும் தேவையில்லை என்றார். மோடி எள் என்றால் மந்திரி எண்ணெய்யாகத் தானே இருப்பார்!
 
 இந்த இந்துத்துவா கும்பலால், மோடிகளால் இந்தியாவின் கதை உலகெல்லாம் ஊளை நாற்றம்.
 
 1992இல் பாபர் மசூதியை இடித்து உலகமே காறி உமிழும் நிலை ஏற்பட்டது என்றால் 2002இல் குஜராத்தில் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் மற்றொரு முறை இந்தியாவை மட்டரகமாக நினைக்கும் நிலைக்கு நெட்டித் தள்ளின.
 
 அய்ரோப்பிய ஒன்றியம் ஒரு ஆவணத்தை வெளியிட்டது. குஜராத் வன்கொடுமை ஒரு வகையான இன ஒதுக்கல் - 1930களில் ஜெர்மனியில் நடந்தவற்றிற்கு இணையானவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் 15 நாடுகள் கையொப்ப மிட்டுள்ளன.
 
 கோத்ரா கொலைகள் ஒரு சாக்காகப் பயன்படுத்தப்பட்டவை - இந்துக்கள் வாழும் பகுதிகளிலிருந்து முஸ்லிம்களை விரட்டுவதை நோக்கமாகக் கொண்ட நிகழ்வுகள் அவை. கலவரத்தில் தலையிடக் கூடாதென முதல் அமைச்சர் காவல்துறையின் மேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். மத்திய மாநில அரசுகள் மனிதநேய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்குத் தவறிவிட்டன. விசுவ இந்து பரிஷத் மற்றும் பிற தீவிரவாத இந்துக் கூட்டத்தினர் வன்முறைக்குக் காரணம், நட்ட ஈடு கொடுப்பதில் மாநில அரசு பாரபட்சமாக நடந்துகொண்டது. முழுமையான வெளிப்படையான ஆய்வை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டு தண்டிக்க வேண்டுமென அய்ரோப்பிய நாடுகளின் ஒன்றியம் (15 நாடுகள்) கேட்டுக்கொண்டதே!
 
 ஒரு மாநிலத்திற்கு முதல் அமைச்சராக இருக்கும்போதே இந்தக் கேவலம் என்றால், இந்த மோடி பிரதமர் ஆகவேண்டும் என ஒரு சதிக்கும்பல் திட்டம் தீட்டுகிறது என்றால் - இந்த மானக்கேட்டை - குரூர எண்ணத்தை என்னவென்று சொல்லுவது!.
 
 இன்றைக்கு நரேந்திர மோடியை பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் என்று வெட்கமின்றி பி.ஜே.பி. வகையறாக்கள் - பேச ஆரம்பித்துள்ளனரே. இதே பி.ஜே.பி. தலைவர்கள் குஜராத் படுகொலையின்போது என்ன வெல்லாம் சொன்னார்கள்?
 
 குஜராத் சம்பவம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட களங்கமே.
- உத்தரபிரதேசம் காசியாபாத்தில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை வீரர்கள் கூட்டத்தில் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி (8.3.2004)
 
 கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது பிரதமர் வாஜ்பேயி ஒரு சிறைக்கைதி போலத்தான் இருந்தார். குஜராத்தில் நடந்த மதக்கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு போன்றவற்றில் உறுதியான நடவடிக்கைகளை பிரதமர் வாஜ்பேயி எடுக்கத் தவறியதே தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணம்.
விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்தவர்கள் போப்பின் கொடும்பாவியை எரித்தபோது வாஜ்பேயி தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.
 
 குஜராத் கலவரத்தின்போது தீர்க்கமான நடவடிக்கை எடுக்காமல் போனதையும் வாஜ்பேயி ஒத்துக்கொண்டார்.
 
 அய்.நா.மன்றத்தின் உதவிக் குழுவில் இந்தியா உறுப்பினராக இருப்பதையும், மனித உரிமைக்கான குழுவில் இருப்பதையும் சுட்டிக்காட்டி, இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை உலக நாடுகள் அளவில் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி வேதனை அடைந்தார் வாஜ்பேயி.
 
 - இவ்வளவையும் சொல்லியிருப்பவர் சாதாரணமானவர் அல்லர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜிதான். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் குலுமணாவில் ஓய்வு எடுக்கச் சென்ற அடல்பிகாரி வாஜ்பேயி தேர்தல் தோல்விக்கான காரணத்தில் குஜராத் மதக் கலவரம் முக்கியக் காரணம் என்று சொல்லவில்லையா?
 
 குஜராத் கொலைகளுக்குப் பிறகு - எந்த முகத்தை வைத்துக்கொண்டு வெளிநாட்டுக்குச் செல்வேன் என்று வாஜ்பேயி சிணுங்கவில்லையா?
 
 இங்கிலாந்தும், அமெரிக்காவும் மோடி அந்நாடுகளுக்கு வருவதற்கு விசா மறுக்கவில்லையா?

விசுவ இந்து பரிஷத்தின் சுவரொட்டிகள்
இந்துக்களே, விழித்துக் கொள்ளுங்கள்!
முஸ்லிம் கடைகளுக்குப் போகாதீர்கள்!
முஸ்லிம் கடைகளில் எந்தச் சாமான்களையும் வாங்காதீர்கள்!
நம்மிடம் சம்பாதித்துக் கொண்டு, அதை நமக்கே எதிராகப் பயன்படுத்துகிறார்கள்!
நமது கடைகளுக்கு அவர்கள் வருவதில்லை. பின் ஏன் நாம் அவர்களது கடைகளுக்குச் செல்லவேண்டும்?
முஸ்லிம்களைக் கொல்ல தனி ஆயுதங்கள் தேவையில்லை. அவர்களுடன் உள்ள வியாபார உறவுகளைத் துண்டியுங்கள்.
பகிஷ்கரியுங்கள்! பகிஷ்கரியுங்கள்! பகிஷ்கரியுங்கள்!
-விசுவ இந்து பரிஷத் சார்பில் பரவலாக விநியோகிக்கப்படும் துண்டறிக்கையின் வாசகங்கள் இவை!
இவை எல்லாம் சட்டப்படி குற்றமானவை அல்லவா? இந்தத் துண்டு அறிக்கைகளை, சுவரொட்டிகளை வெளியிட்டவர், அச்சிட்டவர்கள் மீது மோடி அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது?
காவிக்கும்பலிடம் சட்டம் சரணாகதி ஆட்சிதான் குஜராத்தில். இந்த யோக்கியர்கள்தான் இந்தியாவை ஆளவேண்டுமாம். சிந்திப்பீர்!
 
 உண்மைகளும் நிகழ்வுகளும் இவ்வாறு இருக்க, தமிழ்நாட்டில் சோ ராமசாமி போன்றவர்கள் மோடியை உத்தமப்புத்திரர் என்றும், பிரதமராக அவர் வந்தாலே போச்சு என்று துணியைப் போட்டுத் தாண்டுகிறார்கள் என்றால் இந்தப் பார்ப்பனர்களின் இந்துத்துவா குரூரத்தை நாட்டுமக்கள் உணரவேண்டாமா?
 
 சோ அய்யர் சொல்கிறார்:_ கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு குஜராத்தில் நடந்தவை கண்டனத்துக்குரியவைதான் என்றாலும், அந்தச் சம்பவங்களுக்கு பா.ஜ.க. அரசைக் குற்றம் கூறமுடியாது (துக்ளக் 6.5.2009) என்று சொல்கிறார்.
அப்படியானால் யார்தான் பொறுப்பு? இரண்டாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டபோது அங்கு பா.ஜ.க. வைச் சேர்ந்த மோடி முதல்வராக ஆட்சிப் பொறுப்பில் இல்லவே இல்லையா? ஒரு ரயில் கவிழ்ந்ததால் ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற குரல் எழுகிறது. இவ்வளவு பெரிய கொடுமை நடந்தபோது அங்கு ஆட்சியில் இருந்தவர் பொறுப்பு இல்லை என்று சோ சொல்லுகிறார் என்றால் இவரைவிடப் பொறுப்பற்ற பத்திரிகையாளர் யார்?
 
 உச்ச நீதிமன்றம் நீரோ மன்னன் என்று மோடிக்குப் பட்டம் கொடுத்துவிட்டது. அய்ரோப்பிய யூனியன் நாடுகள் அறிக்கை வெளியிட்டுவிட்டன. வாஜ்பேயியும் அத்வானியும்கூட குஜராத் கொடூரங்களுக்கு வேதனைப்பட்டுள்ளனர்.
 
 இவற்றையெல்லாம் திசை திருப்பிய மோடி மூன்று நாள் உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் மக்கள் எல்லாம் மடையர்கள் என்ற ஆணவத்தில்தானே?
 
 பல கோடி ரூபாய் செலவு செய்து குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் உண்ணாவிரதம் இருந்துவிட்டால் பிரதமர் நாற்காலி தானாகவே நடந்து வந்து அவரை உட்கார வைத்துவிடும் என்ற நப்பாசை இந்த நரேந்திர மோடிகளுக்கு.
வீராதிவீரர், சூராதிசூரன் என்று ஜாக்கி வைத்துத் தூக்கப்படுகின்ற இந்த மோடியின் உண்மையான வீரம் என்ன? - சூரம் என்ன?
 
 சி.என்.என்., அய்.பி.என். தொலைக்காட்சி சார்பில் பிரபல ஊடக வியலாளரான கரன்தப்பாருடன் பேட்டியில் அமர்ந்த இந்த மோடி என்னும் மனிதனால் நான்கரை நிமிடங்கள்தான் தாக்குப் பிடித்து உட்கார முடிந்தது. கரன்தப்பாரின் சுனையான கேள்விக் கணைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் என்று சொல்லும் வகையில் ஓடினாரா இல்லையா?
 
 இந்தியா முழுவதையும் குஜராத் ஆக்கவேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் நோக்கம்.

பார்ப்பனர்களுக்கு மீண்டும் ஒரு மனுதர்ம ராஜ்ஜியம் தேவைப்படுகிறது.
 
 எந்தக் கட்சி பார்ப்பனர் அல்லாதாரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.
 
எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!
 
------------------------------- கவிஞர் கலி.பூங்குன்றன்அவர்கள்  ”உண்மை” அக்டோபர் 01-15 2011 இதழில் எழுதிய கட்டுரை

மோடியின் கபடம்! (3)

மோடியின் கபடம் (3) 
 

குஜராத் கலவரத்திற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருத்தம் தெரிவிக்கிறார் - அம்மாநில முதலமைச்சர் என்றால், அதனை யாரும் நம்பமாட்டார்கள்.
 
 அந்தக் கலவரம் நடந்த பின்னணியைக் கருத்தில் கொண்டால், அது முழுக்க முழுக்க முதலமைச்சர் மோடி என்ற மய்யப் புள்ளியிலிருந்து வெடித்துக் கிளம்பிய விபரீதம் ஆகும்.

சிறுபான்மையினரை வளைத்து வளைத்துக் கொன்றனர் - அதற்காக மலைவாழ் மக்களைக்கூடப் பயன்படுத்திக் கொண்டனர். ஜெய் ஸ்ரீராம் என்று குரல் கொடுத்தால் காவல்துறையினர் ஒதுங்கிக் கொள்ளவேண்டும்; சிறுபான்மையினரை உயிரோடு கொளுத்த காவல்துறையின் வாகனங்களில் இருந்துகூட பெட்ரோல் கொடுத்து உதவப்பட்டுள்ளது.

காவல்துறை ஜீப்பில்கூட சிறுபான்மையினர் கொண்டுவரப்பட்டு, சங் பரிவார்க் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதெல்லாம் உலகில் எங்கும் கேள்விப்பட்டிருக்க முடியாத அவலம் ஆகும்.

மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் முகாம்களில் சரணடைந்தனர். அந்த நேரத்தில், முதலமைச்சர் மோடி கவ்ரவ் யாத்திரை ஒன்றை நடத்தினார். அப்பொழுது அவரின் திருவாய் அவிழ்த்துக் கொட்டியது என்ன?

நாங்கள் அகதி முகாம்கள் நடத்தி, முஸ்லிம்களுக்குப் பிள்ளை பெறும் வாய்ப்பு களை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பவில்லை. இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும் மக்களுக் குப் பாடம் படித்துக் கொடுக்கவேண்டும் என்று பேசினாரா இல்லையா? இது மிகப்பெரிய- பிரச்சினையாக வெடித்தபோது முதல்வர் அவ்வாறு பேசவில்லை என்றனர்; ஆனால், அவர் அவ்வாறு பேசிய ஒலிநாடா வெளியில் வந்துவிட்டதே - மோடியின் முகம் வெளிறிப் போனதுதான் மிச்சம்.
குஜராத்தில் கலவரம் நடந்த ஒரு மாதம் கழித்து அன்றைய பிரதமர் வாஜ்பேயி அகதி முகாம்களைப் பார்வையிட்டார். நிவாரண நிதியாக ரூ.150 கோடி அறிவித்தார் பிரதமர். ஆனால், இதற்குமுன் 7.3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு விட்டது - இனி நிதியோ, திட்டங்களோ தேவைப்படாது என்று மோடியின் உள்துறை அமைச்சர் கூறினாரா இல்லையா?
இன்னொரு தகவலும் முக்கியமானது. குஜராத்தில் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மல்லிகா சாராபாய் பொதுநல வழக்கொன்றைத் தொடர்ந்தார்.

அந்த வழக்கைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு தனது வழக்குரைஞர்களுக்கு லஞ்சமாகப் பணம் கொடுத்தார் என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினாரே - முதலமைச்சர் நரேந்திர மோடி மீது - அதற்கு இதுவரை பதில் உண்டா?
காவல்துறை அதிகாரி சிறீகுமார் இந்தத் தகவலை நானாவதி ஆணையத்திடமே நேரில் சொன்னதுண்டே!

குஜராத் கலவரத்திற்கும், மோடிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையாம் - பம்மாத்துப் பேசுகிறார்கள்.

பெரிய வீராதி வீரர் சூராதி சூரர் என்று பொதுக்கூட்ட மேடைகளில் தோள் தட்டுகிறாரே - 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருத்தப்படுவதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறாரே, இதே மோடி சி.என்.என்., அய்.பி.என். தொலைக்காட்சியில் பிரபல ஊடகவியலரான கரண்தாப்பருடன் பேட்டிக்கு அமர்ந்தபோது, குஜராத் கலவரம் குறித்து வினாக்கள் எழுப்பப்பட்டபோது, தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் நான்கரை நிமிடங்களே தாக்குப்பிடித்து, தண்ணீர் குடித்து ஜகா வாங்கி வெளியேறினாரா இல்லையா?

உண்மையை மறைப்பதும், அப்பட்டமாகப் பொய்களைப் பேசுவதும், நீலிக் கண்ணீர் வடிப்பதும் எல்லாம் சங் பரிவார்க் கும்பலுக்குக் கைவந்த கலை. அதில் கைதேர்ந்தவர் இந்த மோடி. அதில் ஒன்றுதான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் சம்பவம் வருணிக்க முடியாத துயரத்தை தனக்கு அளித்தது என்று பசப்புவது ஆகும். இந்தக் கபட நாடகத்தை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் -  நம்பவே மாட்டார்கள்.
         ----------------------------”விடுதலை” தலையங்கம் --2-1-2014

மோடியின் கபடம்! (2)


மோடியின் கபடம்! (2)
நாய்க்குட்டி காரில்  அடிபட்டதையும்  குஜராத் மாநிலத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ் லீம்கள் கொல்லப்பட்டதையும், பெண்கள் சூறையாடப் பட்டதையும் சமப்படுத்திப் பேசிய நிலையில், டில்லி மாநில பி.ஜே.பி. துணைத் தலைவர் அமீர்ராசா உசேன் என்பவர் பதவியிலிருந்து மட்டுமல்ல; கட்சியிலிருந்தும் விலகினார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறினார்.
 
 நரேந்திர மோடியின் இந்தக் கருத்து இழிவானது; மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக் கூடியது. இதுபோல் பேசினால் இஸ்லாமியர்களின் ஆதரவை அவர் எப்போதும் பெற முடியாது. மோடி பிஜேபியின் தலைவர்; என்னுடைய தலைவர் இல்லை என்று கூறினாரே!
 
 பதவி விலகல் குறித்து மேலும் அவர் கூறினார். என்னைப் போல் பல சிறுபான்மையினர் காங்கிரஸ் அல்லாத மாற்றுக் கட்சிகளை எதிர்பார்க்கிறோம். அதை வாஜ்பேயி, அத்வானியால் வழங்க முடிந்தது.  மோடியை முன்னிலைபடுத்துவதன் மூலம் எங்களுக்கிருந்த மாற்று வழியை பி.ஜே.பி. அடைத்துவிட்டது. எல்.கே. அத்வானியோ, சுஷ்மா சுவராஜோ பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றே இஸ்லாமியர்கள் விரும்புகின்றனர். மோடி தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். எனவே கட்சியிலிருந்து விலக எனக்கு முழு உரிமை உள்ளது என்று எழுதினாரே.
 
 (வாஜ்பேயியாக இருந்தாலும், அத்வானியாக இருந் தாலும் அடிப்படை கொள்கை ஒன்றுதான்)
 
 இதுதான் பாதிக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வரின் உண்மையான உள்ளக் குமுறலாக இருக்க முடியும். குஜராத்தில் முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களித்து இருக் கிறார்கள் என்று சோ போன்றவர்கள் குருட்டுத்தனமாக வக்காலத்து வாங்கி எழுதுவது முஸ்லீம்கள் மீதான தாக்குதலை வேறு சொற்களில் நியாயப்படுத்துவதாகும்.
 
 குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில்  பிஜேபி சார்பில் ஒரே ஒரு முஸ்லீம்கூட நிறுத்தப்படவில்லை
 
 மோடி சொன்ன உதாரணம்கூட அடிப்படையில் தவறானது. காரில் நாய்க்குட்டி அடிபட்டதுகூட விபத்து - தற்செயலானது.
 
 ஆனால், குஜராத்தில் சிறுபான்மையினர் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டது - திட்டவட்ட மானதாகும்.
 
 கோத்ரா நிகழ்வுக்குப் பிறகு - பலியானவர்களை சம்பந்தப்பட்டவர்களின் ஊருக்கு அனுப்ப அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுத்த நிலையில், அதனை மாற்றி அனைத்துப் பிணங்களையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று முதல் அமைச்சர் மோடி ஆணையிட்டார் என்றால், அதன் பொருள் என்ன? பொது மக்கள் மத்தியில் பெரும்பான்மையினரான இந்துக்கள் மத்தியில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வெறியாகி, விபரீதமாக உருமாற வேண்டும் என்ற படுநாசமான கோரப்புத்தி தானே!

குஜராத் கலவரத்தில் பொடா சட்டத்தின் கீழ் நரேந்திர மோடி அரசால் சிறையில் தள்ளப்பட்ட 287 பேர்களுள் 286 பேர்கள் சிறுபான்மையினரான முசுலிம் கள், ஒருவர் சீக்கியர் - ஒருவர்கூட இந்து கிடையாது.
 
 குஜராத்தில் சிறுபான்மை மக்கள் கொல்லப் பட்டபோது விவரிக்க வார்த்தையே இல்லாத அளவுக்கு வருத்தப்பட்டதாக இப்பொழுது பசப்புகிறாரே - அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களைத்தானே பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார்? பாதிப்புக்குக் காரணமான கொலை வெறியர்களை - பெரும்பான்மை சமுதாயத் தினர்களுள் ஒருவரைக்கூட பொடாவின் கீழ் கைது செய்யவில்லையே, ஏன்? இதற்கு முதலில் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
 
 கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து முக்கிய அதிகாரிகளை அழைத்து, மூன்று நாள் கெடு கொடுத்து, அதற்குள் அதிகபட்சமாக எவ்வளவு முஸ்லிம் மக்களைத் தீர்த்துக் கட்ட முடியுமோ அத்தனைப் பேர்களையும் வேட்டையாட அதிகாரம் கொடுத்தார் என்று காவல்துறை அதிகாரிகளே கூறியுள்ளார்களே!
காவல்துறைத் தலைவர் (டிஜிபி) சிறீகுமார், புலனாய் வுத்துறையின் உயரதிகாரி சஞ்சீவ்பட் ஆகியோர் ஆவணப்படுத்தியுள்ளார்களே!
 
 மோடி முதல் அமைச்சராகவிருந்த பிஜேபி சட்டப் பேரவை உறுப்பினர் அதுவும் கோத்ரா தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஹரீஷ் பட் என்பவர் தெகல்கா புலனாய்வுத் துறையிடம் கூறியவை பதிவு செய்யப்பட் டுள்ளன.
 
 கலவரத்தை நடத்த பி.ஜே.பி., வி.எச்.பி. தலைவர் களுக்கு மோடி மூன்று நாள் அவகாசம் கொடுத் திருக்கிறார். வி.எச்.பி. தலைவர்கள் என்னை சபர்கந்தா என்னும் இடத்தில் உள்ள குவாரிக்கு அழைத்துச் சென்று குண்டுகள் எப்படி தயாரிக்கப்பட்டன? எப்படி அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்று நேரடியாக விளக்கினர். இந்துக்கள், முஸ்லீம்களைப் பழி தீர்த்துக் கொள்ளும்போது காவல்துறையினர் அமைதி யாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் பட்டனர். காவல்துறையினர் உதவி மட்டும் இல்லாமல் போயிருந்தால் இஹ்கான் ஜாஃப்ரியைக் கொன்றிருக்க முடியாது என்று கூறினாரே!
 
 இவ்வளவுக்கும் மூலகாரணமாக இருந்த முதல் அமைச்சர் மோடிதான் குஜராத் கலவரத்தால் அவருக்கு ஏற்பட்ட வேதனையை விவரிக்க வார்த்தையில்லை என்று இன்று கூறுகிறார் என்றால், இவர்களைவிட கொடியவர் களை மனிதம் என்ற ஒன்று அறவேயில்லாதவர்களை வரலாறு சந்திப்பது அரிதினும் அரிதே!
 
 இப்படிப்பட்ட ஒருவர் 120 கோடி இந்திய மக்களுக்குப் பிரதமரா? நினைத்துப் பார்க்கவே முடியாத பயங்கரம் அது!
  ----------------------------------”விடுதலை” தலையங்கம் 31-12-2013

மோடியின் கபடம்! (1)

மோடியின் கபடம்! (1) 
 
இந்தியாவையே குலுக்கிய இரு முக்கிய நிகழ்வுகள்
 
 1992 டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு நாளன்று சங்பரி வார்க் கும்பல் - பிஜேபி தலைவர் எல்.கே. அத்வானி தலைமையில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை - இடித்துச் சுக்கு நூறாக்கிய கொடுமை;
இரண்டாவது 2002இல் மோடியின் தலைமையிலான குஜராத் பிஜேபி ஆட்சி சிறுபான்மை மக் களான முஸ்லீம்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர் களை (குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட) அரசு பயங்கரவாதமாகக் கொன்று குவித்த கொடுமை!
 
 முதல் குற்றத்தைச் செய்த அத்வானி, வாஜ்பேயி உள்ளிட்ட 68 பேர் தண்டிக்கப்படாமல் (லிபரான் ஆணை யத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி) படாடோ பமாக பதவிச் சுகங்களையும் அனுபவித்த நிலையில் பல்லக்குச் சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
 இரண்டாவது, ஈராயிரம் பேர்களுக்கு மேல் படு கொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த நபர், இந்தியாவின் பிரதமருக்கான  வேட்பாளராகப் பவனி வருகிறார்.
 
இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல!
 

 இதுவரை இந்தக் கொலைக் குற்றங்களுக்குப் பொறுப்பு ஏற்காத, அதற்காக வருத்தம் கூடத் தெரிவிக் காத நீரோ மன்னன் (உச்சநீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தை இது) கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு பசப்பு வார்த்தைகளால் அந்தச் சம்பவம் வார்த்தை களால் விவரிக்க முடியாத வேதனையைத் தமக்கு ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
 
 இப்பொழுதுகூட அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை; மன்னிப்பும் கோரவில்லை.
 
 என்ன கூறுகிறார்? முதன் முதலாக  எனது துயரத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறுகிறார்.
 
 அவரின் ஒப்புதல் வாக்கு மூலப்படி பார்த்தாலும்கூட ஒரு கொடிய நிகழ்வுக்கு ஒரு மனிதன்12 ஆண்டு களுக்குப் பிறகு முதன் முதலாக துயரத்தை வெளிப் படுத்துகிறார் என்றால் இது இயல்பானதுதானா? நம்பத் தகுந்தது தானா?
 
 12 வருடம் கழித்தா ஒரு மனிதனுக்கு வருத்தம் பீறிட்டுக் கிளம்பும்? பல ஊடகங்கள் மிகவும் வெளிப் படையாக கேட்டும்கூட, அந்த நேரத்தில் எல்லாம் விடாப் படியாக நின்றவர் - அத்தகு சந்தர்ப்பத்தில்கூட வருத்தம் தெரிவிக்க மனம் இல்லாதவர், இப்பொழுது துயரம், வருத்தம் என்று கூறுவதற்கு என்ன காரணம்?
 
 இந்தியாவில் டவுசர் போடாத கோலி விளையாடும் சின்னஞ்சிறு பொடியன்கூட படக்கென்று சொல்லி விடுவான்;  தேர்தலுக்காகப் பசப்பும் ஏமாற்றும் வார்த்தையென்று; வெகு தூரம் கூடப் போக வேண்டாம். 5 மாதங்களுக்கு முன்புகூட இவர் என்ன சொன்னார்? குஜராத் காந்தி நகரில் அதிகார பூர்வ இல்லத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி பேட்டி அளித்தார். அப்போது குஜராத் கலவரம் தொடர்பாக பலரும் தங்கள்மீது குற்றம் சாட்டியபோது விரக்தி அடைந்தீர்களா? என்று செய்தியாளர் கேட்டதற்கு மோடி அளித்த பதில் வருமாறு:
 
 நான் ஏதாவது செய்திருந்தால்தான் நான் குற்றம் செய்ததாக நினைத்திருப்பேன். நாம் பிடிபட்டு விட்டோம். நாம் திருடி விட்டதால் சிக்கிக் கொண்டு விட்டோம் என்பதுபோல் நினைக்கும்போதுதான் எரிச்சலும், விரக்தியும் ஏற்படும். ஆனால் எனது விஷயம் அப்படிப்பட்டதல்ல; நடந்த நடவடிக்கை களுக்காக (குஜராத் கலவரம்) வருத்தப்படு கிறீர்களா? என்று கேட்கிறீர்கள். இந்த விவகா ரத்தைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு எனக்கு விரிவான நற்சான்றிதழை அளித்துள்ளது.
 
 எனினும் ஒரு காரை நாமே ஓட்டிச் சென்றாலும் சரி, மற்றொருவர் ஓட்டும்போது பின் சீட்டில் அமர்ந் திருந்தாலும் சரி, ஒரு நாய்க் குட்டி காரின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் நமக்கு மன வேதனை ஏற்படுமா? ஏற்படாதா? என் நிலையும் அதுபோன்றதுதான் (தினமணி 13.7.2013 பக்கம்1)
 
 அய்ந்து  மாதங்களுக்கு முன் இதே நரேந்திரமோடி கூறியவைதான் இவை.
இன்றைக்குத் தெரிவிக்கும் மோடியின் வருத்தம் எந்த ரகத்தைச் சேர்ந்தது? நாம் பயணிக்கும் காரில் நாய்க்குட்டி ஒன்று அடிபட்டு இறந்ததால் ஏற்படும் வருத்தத்துக்குச் சமமானது என்பதுதானே!
 
 கடந்த ஜூலையில் சொன்ன வருத்தத்துக்கும், இப்பொழுது மோடி சொல்லும் வருத்தத்திற்கும் அடர்த்தியில், ஆழத்தில், வேறுபாடு உண்டா என்பதை மோடிதான் விளக்க வேண்டும். (இதற்கு வக்காலத்துப் போட்டு பாஷ்யம் செய்ய ஒருக்கால் சோ. ராமசாமி அய்யர் வந்தாலும் வரக்கூடும்).
 
 மோடி - ஒரு மரண வியாபாரி என்று காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி சொன்னார். மோடியின்மீது விழுந்த கொலைக் கறைக்காக  தேர்தலில் பாடம் கற்பிக்கப்படும் என்ற பயம் உலுக்கும் நிலையில், அவர் வட்டாரத்தில் யாரோ சொன்ன யோசனையை ஏற்றுதான் 2002 நிகழ்வுக்கு வேதனைப்படுவதாக வெளிப்படுத்தியுள்ளார்.
 
 மோடியைப் பற்றி அறிந்தவர் களுக்கு இது வெறும் உதட்டு அசைவு - உள்ளத்தின் வெளிப்பாடு அல்ல என்பது நூற்றுக்கு ஆயிரம் சதவீதம் தெரியுமே!
                  
----------------- ----------------”விடுதலை” தலையங்கம் 30-12-2013

எச்சரிக்கை! எச்சரிக்கை!! மரண வியாபாரி மோடி வருகிறார் எச்சரிக்கை!

எச்சரிக்கை! எச்சரிக்கை!! மரண வியாபாரி மோடி வருகிறார் எச்சரிக்கை! 
 
குஜராத் கலவரங்களைத் தூண்டி விட்டதே நரேந்திர மோடிதான் என்று ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிவிட வேண்டும் என்று காங் கிரஸும், மத்திய அரசும், அவர்களு டைய ஆதரவில் செயல்படுகிறவர்களும் செய்து வருகிற முயற்சிகள் இன்னமும் தொடர்கின்றன. கலவரங்களுக்கு மோடி பொறுப்பு என்று வழக்காட ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டினால் நியமிக்கப்பட்ட விசேஷ விசாரணைக்குழு முடிவு சொல்லியும், அந்த முடிவை நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தும், இவர்கள் விடுவதாக இல்லை. ஒரு பெண்ணை குஜராத் போலீஸ் மூலம் வேவு பார்த்ததாக ஒரு குற்றம் சுமத்தினார்கள்; அதுவும் எடுபடவில்லை என்பதால் இப்போது அந்தப் புகாரை விசாரிக்க, ஒரு விசரணைக் கமிஷனை நியமிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. விசாரணை முடிவு மூன்று மாதத்தில் வர வேண்டும் என்பதும் அமைச்சரவையின் முடிவு. அதாவது தேர்தலுக்குள், தேர்தல் பிரச்சாரத்திற்காக, நரேந்திர மோடியை ஏதாவது ஒரு குற்றத்தில் சிக்க வைத்து காங்கிரஸ் கட்சிக்கு உதவுவதற்காக, மத்திய அரசு எடுத்துள்ள முடிவு இது. கட்சிக்காக, ஆட்சி துஷ்பிரயோகம் என்பதன் உச்சகட்டம் இது.(துக்ளக் 8.1.2014)
மேற்கண்ட வாசகங்கள் துக்ளக் இதழில் திருவாளர் சோ ராமசாமி  எச்சரிக்கை என்று தலையங்கத்தின் மேல் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!! என்று எச்சரிக்கவேண்டியது நாம் தான்.
திருடனே திருடன், திருடன்! என்று குரல் கொடுத்து ஓடித் தப்புவது போன்றது சோ ராமசாமி போன்றவர்களின் தந்திரப் புத்தியாகும்.
உலக வரலாற்றில் மனிதப் படு கொலையாளர்கள் வரிசையில் இட்லர் தொடங்கி மோடி வரை என்று ஒரு நீண்ட சரிதம் எழுதப்பட வேண்டும்.
காவல்துறை அதிகாரிகளை அழைத்து மூன்று நாள்கள் கெடு கொடுத்து அதற்குள் சிறுபான்மை முசுலிம்களை எந்த அளவு படுகொலை செய்ய முடியுமோ, செய்து முடியுங்கள் என்று உத்தரவிட்டவர் அனேகமாக நர வேட்டை நரேந்திர மோடியாகத் தானி ருக்க முடியும்.
நீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லாததாலேயே சவர்க்கார் காந்தியார் கொலையில் சம்பந்தப்படாதவர் ஆக மாட்டார். நீதிமன்றத்தில் தண்டனை வழங்காததாலேயே சங்கராச்சாரியார் குற்றமற்றவர் ஆக மாட்டார்.
நீதிமன்றம் இதுவரை தீர்ப்பு வழங்காததாலேயே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் பரிசுத்த மனிதர்களாகி விட மாட்டார்கள். மோடியும் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் தான்.

இட்லர் கூட தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தவர்தான் பாலங்களையும், சாலைகளையும் போட் டவன்தான். அதற்காக சொந்த நாட்டு யூதர்களை அவன் கொன்று குவித்த கொடுமையின் ரத்த வாடை வரலாற்றை விட்டு நீங்கி விடுமா?

திறமையான நிருவாகி, குஜராத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தூக்கி நிறுத்திய திறமைசாலி என்று காற்றடித்து உப்ப வைத்து வானில் பலூனாகப் பறக்கவிடுவதெல்லாம் மோடியின் மூர்க்கத்தனமான மத வெறியை மூடி மறைக்கத்தான்; மாநில முதல் அமைச்சராக இருந்தபோதே இப்படி என்றால் பிரதமர் ஆனால் அவ் வளவுதான் - நாடு தாங்கவே தாங்காது.
இதோ சில எடுத்துக்காட்டுகள்:
விசாரணை அமைப்புகள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
2002-இல் கலவரத்தின்போது நரேந்திரமோடி நடந்து கொண்ட விதம் குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மட்டுமல்லாது தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) போன்ற நிறுவனங்களும், உச்சநீதிமன்ற மும் கடுமையாக கண்டித்துள்ளன.
கலவரம் நடந்தவுடன் உடனடியாக ஐந்துக்கும் மேற்பட்ட உண்மை அறியும் குழுக்கள் நேரடியாக சென்று விசாரித் ததுடன் கலவரத்தில் அரசாங்கத்தின் பங்கேற்பை உறுதி செய்துள்ளன. குறிப்பாக நீதியரசர் கிருஷ்ண அய்யர் தலைமையிலான குழுவின் அறிக்கையில் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது. அடுத்து தேசிய மனித உரிமை ஆணையமும் கண்டித்துள்ளது.
2004-ல் உச்சநீதிமன்றத்தில் நீதி யரசர்கள் அர்ஜூன் பசாயத் மற்றும் துரைசாமிராஜு ஆகியோர் அளித்த தீர்ப் பில் ரோம் எரிந்து கொண்டிருக்கும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனோடு மோடியை ஒப்பிட்டார்கள்.
கலவரம் நடந்தபோது தனியறையில் அமர்ந்து கொண்டு குற்றவாளிகளை எப்படி தப்ப வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் போலும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டார்கள். அப்படி சொன்னது மட்டுமல்லாமல் அவ்வழக்கு குஜராத்தில் நடந்தால் நீதி கிடைக்காது எனக் கூறி மகாராஷ்டிர மாநிலத்துக்கு அந்த வழக்கை மாற்றவும் செய்தார்கள்.
அதுமாத்திரமல்ல குற்றவாளிகளை விசாரிக்கும் அரசு வழக்கறிஞர்களை அந்த மாநில அரசுகளே நியமித்து கொள்ளும் வழக்கத்துக்கு மாறாக குஜராத் படுகொலையில் அரசாங்கமே ஈடுபட்டி ருப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால் மோடி அரசாங்கம் நியமிக்கும் அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி. போன்ற சவ்பரிவார் சிந்தனை உடையவராக இருக்க நேர்வதுடன் அவர்கள் குற்றவாளிகளை தண்டனை யிலிருந்து தப்பவைக்க முயற்சித்தார்கள் என்பதுடன், சாட்சிகளை மிரட்டுவதற்கும் காரணமாக இருந்ததால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றியதுடன், அரசு வழக்கறிஞரை பாதிக்கப்பட்டவர்களின் ஒப்புதலுடன்தான் நியமிக்க வேண்டும் என்ற புரட்சிகரமான தீர்ப்பையும் வழங்கியது. இந்நிகழ்ச்சி வேறு எந்த மாநிலத்திலும் இதற்கு முன்பு நடந்திராத ஒன்றாகும்.
இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல அமைப்புகளின் கண்டனத்துக்கு நரேந்திரமோடி ஆளாகியிருப்பதுடன், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசார ணையின்போது பல அடிப்படையான கேள்விகளுக்குக்கூட பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளார்.
கோத்ரா பிணங்களைக் காட்டி மதக் கலவரங்களை தூண்டினார்!
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் பலியான 56 உடல்களை அரசு நடை முறை வழக்கத்திற்கு மாறாக குஜராத் தலைநகருக்கு வரவழைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று மக்களின் உணர்ச் சிகளைத் தூண்டிவிட்டு பழிவாங்கும் எண்ணத்தை ஏற்படுத்தி கலவரத்திற்கு காரணமாக இருந்தார்.
அன்று இரவே காவல்துறை உள்ளிட்ட அரசின் முக்கிய துறைகளின் அதிகாரிகளை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் இரண்டு நாட்களுக்கு கலவரங்கள் நடக்கும். அதை கண்டுகொள்ளாதீர்கள், தடுக்காதீர்கள் என பகிரங்கமாக கூறியதாக 2002-லேயே சில பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. அதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் மினிட் நடைமுறை பின்பற்றப்படாதது மனித உரிமை அமைப்புகளின் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
தெகல்கா பத்திரிகை
வெளிப்படுத்திய உண்மைகள்!
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக தெகல்கா பத்திரிகை, குஜராத் கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் பல அதிர்ச் சியான உண்மைகள் வெளிப்பட்டன.
முஸ்லிம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி படுகொலை செய்த குற்றவாளியை மோடி பாராட்டியதுடன், உங்கள் செயலுக்காக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.
கலவரம் நடந்த பகுதிகள் சிலவற்றிற்கு நேரடியாகச் சென்று குற்றவாளிகளுக்கு ஊக்கம் கொடுத்துள்ளார். அந்த குற்றவாளிகளை தப்ப வைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மூலமாக மேற்கொண்டார். குற்றவாளிகளைக் கண்டித்த நீதிபதிகளை இடம் மாற்றம் செய்தார். சுமார் 20-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டு, எரித்து கொலை செய்த ஒரு குற்றவாளியை நீதிபதிகள் நீ செய்த இந்தச் செயலுக்கு, உன்னை பலமுறை தூக்கில் போட்டாலும் தகும் என தெரிவித் தனர். ஆனால், அந்த நீதிபதிகளெல்லாம் மோடியினால் மாற்றப்பட்டார்கள். அந்தக் குற்றவாளி விடுதலையடைந்து சுதந்திர மாக உள்ளான்.
####
முதல்வர் மோடியின் வானொலிப் பேச்சு
அச்சுறுத்தப்பட்டு அடங்கியொடுங்கிக் கிடப்போர், நியாயம் கேட்க மாட்டோம் என்ற உறுதியை அளித்தால்தான் அமைதி திரும்பும்
- _ குஜராத் கலவரம் தொடங்கிய மூன்றாம் நாள் முதல் அமைச்சர் நரேந்திரமோடியின் வானொலி உரையில் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 8.10.2003)
####
எதிர்வினையாம்
2005 சனவரி 17ஆம் தேதியன்று கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான உமேஷ் சந்திரா பானர்ஜி ஆணையத் தின் இடைக்கால அறிக்கை வெளியிடப் பட்டது. அடுத்த இரு நாட்களில் தினேஷ் மோகன் ஏ.கே. ராய், சுனில்காலே, எஸ்.என் சக்ரவர்த்தி முதலிய பேரா சிரியர்கள் மற்றும் பொறியாளர்களின் கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. கோத்ரா ரயில் எரிப்பு என்பது முஸ்லிம்களின் திட்டமிட்ட சதி என்கிற மோடி கும்பலின் பொய்களுக்கு இவ்விரு அறிக்கைகளும் மறுப்புத் தெரிவித்துவிட்டன. கோத்ரா ரயில் எரிப்பின் இயற்கையான எதிர்வினையே குஜராத் பயங்கரங்கள் என்னும் அவர்களின் நியாயங்கள் அடிபட்டுப் போயின.
####
படுகொலையே நியாயப்படுத்திய கொடுமை
சங்பரிவார்க் கும்பல் பந்த் நடத்தினர். நரோடா -_ பாட்டியா என்னும் இடத்தில் 58 பெண்களையும் பச்சிளங் குழந்தைகளையும் கொன்று குவித்தனர். அது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அடங்கிய வாசகம் என்ன தெரியுமா?
கோத்ரா வன்முறை நிகழ்வுக்கு எதிர்விளைவாக இந்தச் சம்பவம் நடந்தது என்று குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டதன் மூலம் அந்தப் படுகொலைக்கு மோடி அரசாங்கத்தின் காவல்துறையே நியாயம் கற்பித்து விட்டது.
வழக்கு வாபஸ்!
குஜராத் மதக் கலவரத்தின் போது 4252 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட வழக்குகள் மோடி அரசால் விலக் கிக் கொள்ளப்பட்டன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ருமாபால், சின்கா மற்றும் கபாடியா அடங்கிய அமர்வு அத்தனை வழக்குகள் மீதும் விசாரணை நடத்து மாறு ஆணை பிறப்பித்தது. (17.8.2004)
####
பொடா சட்டம்
குஜராத்தில் பொடா பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அல்ல _- பயங்கரவாதி களைத் தயார் செய்யும் சட்டம்(Production of Terrorist Act) என்று சொன்னார் குஜராத் மாநிலத்தில் மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் டாக்டர் முகில் சின்ஹா.
குஜராத்தில் பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 287 அதில் முஸ்லிம்கள் 286, சீக்கியர் ஒருவர்; மகாராட்டிராவில் மனித உரிமை ஆர்வலர் மேமோன் குஜராத் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்தபோது இதைச் சுட்டிக் காட்டி நேருக்கு நேரே கேட்டார். பொடாவில் இந்துக்கள் கைது செய்யப்படக் கூடாது என்ற தனிப் பிரிவு ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டார்.
####
ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டனவாம்!
2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கிற்குச் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அழிக்கப் பட்டு விட்டதாக மோடி அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.பி. வகில் என்பவர் நீதிபதி நானாவதி விசாரணை ஆணையத்தின் முன் பகிரங்கமாக அறிவித்தார்.
கோத்ரா சம்பவம் நடந்த அன்று இரவு காவல்துறையின் உயர் அதி காரிகளோடு முதல் அமைச்சர் நரேந்திர மோடி நடத்திய கூட்டத்தில் இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும்போது அதில் தலையிடாதீர்கள்! என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட காவல்துறை உளவுத்துறை உதவி ஆணையர் சஞ்சீவ்பட் அய்.பி.எஸ். உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் வெளிப்படையாகத் தெரிவித்தார். அந்தக் கூட்டத்திலேயே அந்த அதிகாரி கலந்து கொள்ளவில்லை என்றது மோடி அரசு. அப்படியானால் தகவல் அறியும் சட்டத்தின்படி அந்தக் கூட்டத்தில் நடவடிக்கை ஆவணங்களை அளிக்குமாறு கோரினார்; இரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் அளிக்க இயலாது என்று அப்பொழுது சொன்னவர்களே, பிற்காலத்தில் அந்த ஆவணங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டதாகச் சொன்னார்கள்.
####
போலி என் கவுண்டர்
2004 ஜூன் 15ஆம் தேதியன்று இஸ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் அம்ஜத்அலி ராணா மற்றும் ஜீஷன் ஹோஹாய் ஆகிய நான்கு பேரைப் போலி என்கவுண்டரில் கொலை செய்த விவகாரத்தில் முறையான விசார ணையை குஜராத் காவல்துறை செய்யும் என்பதை நம்ப முடியாது என்று குஜராத் உயர்நீதிமன்றம்  கூறியது. இந்த வழக்கில் மேலும் விசாரணை செய்யுமாறு மத்தியப் புலனாய்வுக் குழுவை (சி.பி.அய்.) உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் அபிலாஷ்குமாரி ஆகியோர் அடங்கிய அமர்வு ஆணை பிறப்பித்தது. படுகொலை செய்யப்பட்ட இந்த நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -_ இ-தொய்பா அமைப்புக்காக வேலை செய்தவர்கள் என்றும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினர் என்றும் குற்றஞ் சாட்டப்பட்டு இருந்தனர். குஜராத் உயர்நீதிமன்றம் ஆணைப்படி புலனாய்வு செய்த சி.பி.அய். நால்வரும் கொல்லப்பட்டது போலி என் கவுண்டர்தான் என்று உறுதி செய்தது.  இந்தப் போலி என்கவுண்டரில்  கொலை செய்த காவல்துறை அதிகாரி வன்சாரா அந்தப் போலி என்கவுண்டர் முதல் அமைச்சர் மோடி உத்தரவுப்படியேதான் நடந்தது என்று சிறையிலிருந்தபடியே தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
####
மத நல்லிணக்கத்தைக் காப்பாற்ற உண்ணாவிரதமாம்
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி (சத்பாவனா) மோடி உண்ணாவிரதம் இருந்தது ஆச்சரியமே! மூன்று நாள் உண்ணாவிரதம் ஒன்றை குஜராத் பல் கலைக் கழக வளாகத்தில் குளிரூட்டப் பட்ட மண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்.
மதநல்லிணக்கம் அல்லவா! - சில முஸ் லீம்களும் வந்திருந்தனர். மதக் குரு (இமாம்) ஒருவர் மோடியைக் கட்டித் தழுவி தான் அணிந்திருந்த குல்லாயை அணியுமாறு கொடுத்ததை அணிய மறுத்தார் மோடி (இதுதான் அவரின் மத நல்லிணக்கம்) அதனை சிவசேனா சுட்டிப் பாராட்டியது.
(தினமலர் 22.9.2011 பக்கம் 3)
எப்பொழுதும் மோடி அப்படிதான்!
குஜராத் படுகொலை நடைபெறு வதற்குப் பத்தாண்டுகளுக்குமுன் ஒரு நிகழ்வு; பிரபல சமூகவியல் சிந்தனை யாளர் -_ எழுத்தாளர் ஆஷிஸ்நந்தி அன்றைய ஆர்.எஸ்.எஸின் பிரசாரகராக விருந்த நரேந்திரமோடியைப் பேட்டி கண்டவர்; அதுபற்றி ஆஷிஸ் நந்தி என்ன கூறினார்?
அனைத்துக் குணங்களும் கொண்ட ஒரு ஃபாசிஸ்டைத்தான் நான் சந்தித்தேன் ஃபாசிஸ்ட்டு என்று அழைப்பது ஆட்சேபகரமான வார்த்தையல்ல; எல்லா குணங்களும் நிறைந்த ஒரு ஃபாசிஸ்டாக அவர் விளங்கினார் சர்வாதிகாரத்தின் பரிபூரணமான மனநிலை கொண்டவராக அவர் விளங்கினார்; ஒரு கொலை யாளியை சில வேளைகளில் ஒருகூட்டுக் கொலையாளியை நான் சந்தித்தேன். முற்றிலும் பீதியுடன் அல்லாமல், நாட்டின் எதிர்காலத்தை நோக்கி எனது பார்வையைச் செலுத்த முடியவில்லை என்று ஆஷிஷ் நந்தி குறிப்பிட்டார்.
ஊழல்! ஊழல்!!
குஜராத்தில் ஊழலே கிடையாது என்பது பொய்ப் பிரச்சாரம் அது உண்மையென்றால் மாநிலத்தில் ஊழல்களை விசாரிக்கும் உரிமை படைத்த லோக் அயுக்தா நீதிமன்றத்திற்கு எட்டு ஆண்டு காலம் நீதிபதி நியமிக்கப்படாதது  ஏன்?  ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தான் இதற்கு நியமிக்கப்பட வேண்டும். பதவியில் இருக்கும் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிதான் லோக் அயுக் தாவுக்கு ஒரு நீதிபதியைப் பரிந்துரைப் பார். அதனை முதல் அமைச்சரும் எதிர்க்கட்சி தலைவரும் பரிசீலித்து, ஆளுநருக்குப் பரிந்துரைப்பார்கள். எஸ்.டி. தவே என்ற நீதிபதியை தலைமை நீதிபதி பரிந்துரைத்தார் ஆனால், அதனை முதல்வர் மோடி ஏற்றுக் கொள்ளவில்லை.  வோரா என்னும் நீதிபதி  அப்பதவிக்கு வரவேண்டும் என்பது மோடியின் விருப்பம். ஏன் அவர்மீது அவ்வளவு அக்கறை? 2002இல் 14 பேர்களை உயிரோடு பெஸ்டு பேக்கரியில் வைத்து எரித்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அத்தனைப் பேரையும் குற்ற மற்றவர்கள் என்று விடுதலை செய்தவர்தான் அந்த வோரா. மோடி ஆட்சியில் உள்துறை அமைச் சராகவிருந்த ஹிரேன் பாண்டியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மோடிக்கு ஆதரவாகத் தீர்ப்புக் கொடுத் தவரும் இந்த வோராதான்.
####
அதற்குப்பின் வேறு ஒரு புதிய நீதிபதியைப் பரிந்துரைக்குமாறு உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியை (மு. கோபாத்தியாயா)க் கோருகிறார்; ஆளுந ரால் ஆர்.ஏ. மேத்தா என்ற நீதிபதி பரிந்துரைக்கப்படுகிறார். அதனையும் ஏற்க மறுக்கிறார் முதல்வர் மோடி. மீண்டும் அந்த வோராவையே நியமிக்குமாறு ஆளுநருக்குக் கடிதம் எழுதினார் மோடி. மேத்தாவை நியமிக்க எதிர்க்கட்சித் தலைவரும் இசைவு தந்த நிலையில் ஆளுநர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதி ஆர்.ஏ. மோத் தாவையே லோக் அயுக்தாவுக்கு நீதிபதியாக நியமித்தார். இதற்காகத்தான் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட் டனர் என்பதை மறந்து விடக் கூடாது.
####
நோபெல் விஞ்ஞானி சந்திக்க மறுப்பு! குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானியான வெங்கி ராமகிருஷ்ணன். அவரைச் சந்திக்க பல வகைகளிலும் முதல் அமைச்சராக நரேந்திர மோடி முயற்சி செய்து பார்த்தார்.
2002 மதக் கலவரத்தில் முதல் அமைச்சர் மோடி சம்பந்தப்பட்டு இருப்ப தால் சந்திக்க இயலாது என்று அந்த விஞ்ஞானி மறத்துவிட்டார்!
இப்படிப்பட்ட கொடூர மனிதனான நரேந்திர மோடிதான் பிரதமர் ஆக வேண்டுமாம் - இவருக்காகத்தான் சோ வகையறாக்கள் முட்டுக் கொடுக்கிறார்கள் - எச்சரிக்கை!
----------------------------------------மின்சாரம்  அவர்கள் 4-01-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை