Thursday 27 February 2014

குஜராத் வளர்ச்சியா? மோடி புளுகு - 2

பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டவுடன், குஜராத் மாநிலம் ரேவாரி கிராமத்தில் 15.9.2013 அன்று பேசிய மோடி, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள கட்ச் பகுதிகளில் காவல் புரியும் நமது இராணுவ வீரர்களின் பயன் பாட்டிற்கு, நர்மதா ஆற்றிலிருந்து குடிநீர் வருவதற்கு தன்னுடைய முயற்சிதான் காரணம் என்றும், இராணுவ வீரர்கள் மீது அதிக அன்பும் மதிப்பும் இருக்கும் காரணத்தினால், 700 கிலோமீட்டர் தூரத்திற்கு, குழாய் அமைத்து, தண்ணீர் செல்ல, தான் ஏற்பாடு செய்த தாகவும் பேசினார், மோடி. இதில் உண்மை இருக்கிறதா? கட்ச் பகுதிக்கு, குழாய் மூலமாக குடி நீர் வழங்கும் மிகப் பெரிய திட்டம் 4700 கோடி ரூபாய் செலவில் சர்தார் சரோவர் அணை மற்றும் மாகி குழாய் திட் டத்தின் மூலாமக 1999-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.


மாகி குழாய் திட்டத்தின் மூலமாக நர்மதா ஆற்று நீர், ஆறு மாவட்டங்களில், 29 நகரங்களுக்கும், 1467 கிராமங்களுக்கும், 880 கோடி ரூபாய் செலவில், குடிநீர் தரப்பட்டதை, 2001ஆம் ஆண்டு ஏப்ரலில் அப்போதைய குஜராத் முதல்வரான கேசுபாய் படேல் அறிவித்துள்ளார். ஏப்ரல் 2002-க்குள் கட்ச் பகுதிக்கும் இந்த திட்டம் சென்றடையும் என்றும் அறிவித்தார் கேசுபாய். 22.1.2001 அன்று, மாகி குழாய் திட்டம் கதாதா மாவட்டத்தில் துவக்கப்பட்டது. 

துவக்கியவர் கேசுபாய் படேல். ஆசிய வளர்ச்சி வங்கியின் 600 கோடி ரூபாய் கடனில், இத்திட்டம், கட்ச் பகுதிக்கும் சென்றடைந்தது 2002 ஆம் ஆண்டு. 7.10.2001 அன்றுதான், நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-இல் இத்திட்டம் கட்ச் பகுதிக்கும் ஏறத்தாழ 500 கிலோ மீட்டர் பாதையை கடந்து சென்றது, இறுதி யாக எல்லைப் பகுதிக்கு சுமார் நூறு கி.மீ. தூரம் உள்ள பாதையை 2004-ல் முடித்திருக்க வேண்டும். ஆனால், நிர்வாகத் திறமை மிக்க? மோடி ஆட்சியில், நூறு கி.மீ. கடக்க பத்து ஆண்டுகள் ஆகியது. இறுதி யாக ஆகஸ்டு 2013-இல் தான் இராணுவ வீரர்கள் இருக்கும் எல்லைப் பகுதிக்கு இக்குடிநீர்த் திட்டம் சென்றடைந்தது. கேசுபாய் படேல் முதல்வராக இருந்து 1999-இல் துவக்கப்பட்ட இந்த குடி நீர் திட்டத்தை, மொத்தம் உள்ள 600 கி.மீ. தூர குழாய் திட்டத்தில், 500 கி.மீ. வரை கேசுபாய் படேல் ஆட்சிக் காலத்திலேயே முடிக்கப் பட்ட ஒரு திட்டத்தை, அக்டோபர் 2001-இல் முதல்வ ரான மோடி, தானே துவக்கியதாக 2013இல் கூறுகிறார் என்றால், இதற்குப் பெயர் தான் மோடி புளுகு.


- குடந்தை கருணா



குஜராத் வளர்ச்சியா? மோடி புளுகு -1



நரேந்திரா தாமோதர்தாஸ் மோடி, (பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் முழுப் பெயர்), மற்ற மாநிலங்களில் பேசுகையில், குஜராத்தில் மின் உற்பத்தி தன்னி றைவு பெற்றுவிட்டதாக கூறி வரு கிறார். இதில் உண்மை இருக்கிறதா?

பாஜகவின் விவசாயிகள் சங்கமாக இருக்கும், பாரதீய கிசான் சங், விவ சாயிகளுக்கு, தடையில்லா மின்சாரம் வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறது. மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக குஜராத் இருந்தால், ஏன், விவசாயிகள் இப்படி ஓர் போராட்டத்தை நடத்த வேண்டும்?

தனியார் நிறுவனங்களில் இருந்து அதிக விலை கொடுத்து 15,300 மெகா வாட் மின்சாரத்தை குஜராத் அரசு வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா விலேயே, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை தனியார் நிறுவனங் களிடமிருந்து வாங்கும் மாநிலமாக குஜராத் முதலிடம் வகிக்கிறது.

தமிழ் நாட்டில், முதல் 100 யூனிட் வரை, ஒரு யூனிட் ஒரு ரூபாய் என்கிற நிலையில், குஜராத்தில், ஒரு யூனிட் ரூ. 3.60 ஆக உள்ளது. 200 யூனிட் வரை தமிழ் நாட்டில் ரூ.1.50 என் றால், குஜராத்தில் ரூ.4.25 ஆக உள் ளது. இதை மேலும் உயர்த்திட குஜ ராத் அரசிடம் தனியார் நிறுவனங்கள் கோரி வருகின்றன.

குஜராத்தில், பாஜகவிற்கு இந்த தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தான் அதிக நன்கொடைகளை தந்துள் ளன என்பதை தேர்தலை பற்றிய ஆய்வு செய்த சனநாயக சீரமைப்பு சங்கம் என்ற அரசு சாரா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குஜராத்தில் மின் இணைப்பு கேட்டு வந்த மூன்று லட்சம் விண் ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 3945 விண்ணப்பங்களுக்குத் தான், மின் இணைப்பு தரப்பட்டுள்ளன.

2011 கணக்கெடுப்பின்படி, குஜ ராத்தில், மின்சாரம் இல்லாத 11 லட்சம் வீடுகள் உள்ளன. அதில் 9 லட்சம் வீடுகள், கிராமத்தில் தான் உள்ளது என பாரீஸில் வாழும் சமூக ஆய்வாளர் கிறிஸ்டபர் ஜாபரிலெட், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக் கையில் 17.4.2013 எழுதிய கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார்.

இது தான், குஜராத்தில் மின் உற்பத்தி பற்றிய நிலை.


- குடந்தை கருணா

Wednesday 26 February 2014

பில்ட் அப் மஸ்தான் "மோடி"



ஊழலை பிறப்புரிமையாக்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுடன் பில்ட் அப் மஸ்தான் "மோடி".
- அறிவழகன் கைவல்யம் (முகநூலில்...)

மோடி ம(i)றைக்க நினைக்கும் 17 ஊழல்கள்


1.டாட்டாவின் நானோ திட்டத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.900க்கு தரப்பட்டது. அது டாட்டா குழுமம் அடித்த ஜாக்பாட் ரூ.33,000 கோடி.

2. அதானி குழுமத்திற்கு முந்த்ரா துறைமுகம் மற்றும் முந்த்ரா விசேட பொருளாதார மண்டலம் உருவாக்கிட நிலம் சதுர அடி/ ச.மீ. ஒன்றுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு அதாவது வெறும் 10 பைசாவிற்கு தரப்பட்டது. இதனை அதானி குழுமம் பின்னர் சதுர மீட்டர் ரூ.100க்கு விற்று கொழுத்த இலாபம் பார்த்தனர். இந்த விற்பனை சட்டவிரோதமானது.

3. கே.ரஹேஜா என்ற ரியல் எஸ்டேட்டுக்கு முக்கிய பகுதியில் ஒரு ச.மீ. ரூ.470 வீதம் 3.76 லட்சம் சதுர மீட்டர் விற்கப்பட்டது. அதற்கு அருகாமையில் விமானப்படை நிலம் கேட்டபொழுது ஒரு சதுரமீட்டர் ரூ.1100 என கூறப்பட்டது. என்னே மோடியின் தேசபக்தி!

4. நவ்சாரி விவசாயப் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 65,000 ச.மீட்டர் நிலம் சத்ராலா ஓட்டல் குழுமத்திற்கு விடுதிகட்ட தாரைவார்க்கப்பட்டது. பல்கலைக் நிர்வாகம் ஆட்சேபனை தெரிவித்தாலும் அது உதாசீனப்படுத்தப்பட்டது.

இந்த இடமாற்றம் நேரடியாக நரேந்திர மோடியின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது. இதனால் குஜராத்அரசுக்கு இழப்பு ரூ. 426 கோடி.

5. அண்டை நாட்டின் எல்லை ஓரத்தில் உள்ள நிலம் அரசின் கைகளில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இது தேச பாதுகாப்புடன் தொடர்புடைய அம்சம்.

ஆனால் ஒரு பெரிய பரப்பளவு உள்ள நிலம் உப்பு நிறுவனங் களுக்கு தரப்பட்டது. இந்த நிறுவனங்கள் வெங்கையாநாயுடுவின் உறவினர்களுக்கு சொந்தமானது. வெங்கையா நாயுடு மோடியை ஏன் ஆதரிக்கிறார் என்பது புரிகிறதா?

6. எஸ்ஸார் கார்ப்பரேட் குழுமத்திற்கு 2.08 லட்சம் சதுரமீட்டர் நிலம் தரப்பட்டது. இதில் ஒரு பகுதி வனங்கள் நிறைந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இது சட்டவிரோதமானது.

7. அகமதாபாத் நகரின் அருகில் சந்தை நிலவரப்படி விலை உயர்ந்த 25,724 ச.மீ. இடம் பாரத் ஒட்டல் குழுமத்திற்கு தரப்பட்டது. இதற்காக டெண்டர் எதுவும் கோரப்படவில்லை.

8. 38 மிகப்பெரிய ஏரிகளில் மீன்படிக்கும் உரிமை டெண்டர்கள் கோரப்படாமலேயே ஒரு சிலருக்கு தரப்பட்டது.

9. ஹாசிரா எனும் இடத்தில் L&T நிறுவனத்திற்கு 80 ஹெக்டேர் அளவுள்ள நிலம் சதுர மிட்டர் ஒன்றுக்கு வெறும் ரூ.1/- அதாவது சதுர அடி வெறும் 10 பைசாவிற்கு தாரை வார்க்கப்பட்டது.

10. Vibrant குஜராத் விழாக்களில் பங்கேற்ற தொழில் அதிபர்களுக்கு நகரின் பல முக்கிய இடங்களில் சந்தையில் விலை உயர்ந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

11. கால்நடை தீவனங்கள் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து ஒரு கிலோ ரூ.48-க்கு வாங்கப்பட்டது. ஆனால் வெளிச்சந்தையில் இந்த தீவனம் ரூ. 24க்கு கிடைக்கிறது.

12. அங்கன்வாடி மையங்களுக்கு உணவுப் பொருட்கள் வாங்கியதில் இரு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி. இதன்காரணமாக நஷ்டம் ரூ. 92 கோடி.

13. GSPC எனும் நிறுவனம் தொடங்கிட குஜராத் அரசாங்கம் ரூ. 4993.50 கோடி முதலீடு செய்தது. இதுவரை வருமானம் ரூ. 290 கோடி மட்டுமே. ஆண்டிற்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.

14. Sujalam Sufalam yojana எனும் திட்டத்திற்கு 2003ம் ஆண்டு ரூ. 6237.33 கோடி ஒதுக்கப்பட்டது.

2005ம் ஆண்டு இத்திட்டம் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் இதுவரை பூர்த்தியாகவில்லை. குஜராத் சட்டமன்றத்தின் பொதுக் கணக்கு குழு (Public Accounts Commitee) இதனை ஆய்வு செய்த பொழுது ரூ. 500 கோடி ஊழல் நடந் திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழுவில் பிஜேபி உறுப் பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதில் ஆச்சர்யமும் இல்லை!

15. நரேந்திர மோடி விமானத்தில் பயணிக்கும் பொழுது குஜராத் அரசாங்கத்தின் விமானத்தையோ அல்லது ஹெலிகாப்டரையோ பயன்படுத்துவது இல்லை.

ஏர் - இந்தியா, ஜெட் ஏர்வேஸ் போன்ற மக்கள் பயன்படுத்தும் விமானங்களிலும் பயணிப்பது இல்லை.

மிகவும் சொகுகான தனியார் முதலாளிகளுக்கு சொந்தமான விமானங்களில்தான் அவர் பயணிப்பார். அதன் செலவு தொழில் அதிபர்கள் ஏற்றுக்கொள்வர்.

அண்மையில் திருச்சிக்கு வந்தபோதும் இதேபோன்று தனி விமானத்தில்தான் வந்தார்; வெள்ளியன்று (அக். 18) சென்னைக்கும் தனி விமானத்தில்தான் வந்தார்.

16. இண்டிகோல்டு எனும் நிறுவனம் சட்டத்தை மீறி 36.25 ஏக்கர் பண்ணை நிலத்தை வாங்கி அதிக விலைக்கு விற்று கொழுத்த லாபம் அடைந்தது. இதுவரை இந்த நிறுவனம் மீது நடவடிக்கை இல்லை.

17. குஜராத் அரசுக்கு சொந்தமான பிப் பவர் மின்நிலையத்தின் 49சதவீதப் பங்குகள் ஸ்வான் எனர்ஜி எனும் நிறு வனத்திற்கு விற்கப்பட்டது. இதற்காக எந்த டெண்டரும் கோரப்படவில்லை.