Thursday 27 February 2014

குஜராத் வளர்ச்சியா? மோடி புளுகு - 2

பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டவுடன், குஜராத் மாநிலம் ரேவாரி கிராமத்தில் 15.9.2013 அன்று பேசிய மோடி, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள கட்ச் பகுதிகளில் காவல் புரியும் நமது இராணுவ வீரர்களின் பயன் பாட்டிற்கு, நர்மதா ஆற்றிலிருந்து குடிநீர் வருவதற்கு தன்னுடைய முயற்சிதான் காரணம் என்றும், இராணுவ வீரர்கள் மீது அதிக அன்பும் மதிப்பும் இருக்கும் காரணத்தினால், 700 கிலோமீட்டர் தூரத்திற்கு, குழாய் அமைத்து, தண்ணீர் செல்ல, தான் ஏற்பாடு செய்த தாகவும் பேசினார், மோடி. இதில் உண்மை இருக்கிறதா? கட்ச் பகுதிக்கு, குழாய் மூலமாக குடி நீர் வழங்கும் மிகப் பெரிய திட்டம் 4700 கோடி ரூபாய் செலவில் சர்தார் சரோவர் அணை மற்றும் மாகி குழாய் திட் டத்தின் மூலாமக 1999-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.


மாகி குழாய் திட்டத்தின் மூலமாக நர்மதா ஆற்று நீர், ஆறு மாவட்டங்களில், 29 நகரங்களுக்கும், 1467 கிராமங்களுக்கும், 880 கோடி ரூபாய் செலவில், குடிநீர் தரப்பட்டதை, 2001ஆம் ஆண்டு ஏப்ரலில் அப்போதைய குஜராத் முதல்வரான கேசுபாய் படேல் அறிவித்துள்ளார். ஏப்ரல் 2002-க்குள் கட்ச் பகுதிக்கும் இந்த திட்டம் சென்றடையும் என்றும் அறிவித்தார் கேசுபாய். 22.1.2001 அன்று, மாகி குழாய் திட்டம் கதாதா மாவட்டத்தில் துவக்கப்பட்டது. 

துவக்கியவர் கேசுபாய் படேல். ஆசிய வளர்ச்சி வங்கியின் 600 கோடி ரூபாய் கடனில், இத்திட்டம், கட்ச் பகுதிக்கும் சென்றடைந்தது 2002 ஆம் ஆண்டு. 7.10.2001 அன்றுதான், நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-இல் இத்திட்டம் கட்ச் பகுதிக்கும் ஏறத்தாழ 500 கிலோ மீட்டர் பாதையை கடந்து சென்றது, இறுதி யாக எல்லைப் பகுதிக்கு சுமார் நூறு கி.மீ. தூரம் உள்ள பாதையை 2004-ல் முடித்திருக்க வேண்டும். ஆனால், நிர்வாகத் திறமை மிக்க? மோடி ஆட்சியில், நூறு கி.மீ. கடக்க பத்து ஆண்டுகள் ஆகியது. இறுதி யாக ஆகஸ்டு 2013-இல் தான் இராணுவ வீரர்கள் இருக்கும் எல்லைப் பகுதிக்கு இக்குடிநீர்த் திட்டம் சென்றடைந்தது. கேசுபாய் படேல் முதல்வராக இருந்து 1999-இல் துவக்கப்பட்ட இந்த குடி நீர் திட்டத்தை, மொத்தம் உள்ள 600 கி.மீ. தூர குழாய் திட்டத்தில், 500 கி.மீ. வரை கேசுபாய் படேல் ஆட்சிக் காலத்திலேயே முடிக்கப் பட்ட ஒரு திட்டத்தை, அக்டோபர் 2001-இல் முதல்வ ரான மோடி, தானே துவக்கியதாக 2013இல் கூறுகிறார் என்றால், இதற்குப் பெயர் தான் மோடி புளுகு.


- குடந்தை கருணா



No comments:

Post a Comment