Tuesday 5 November 2013

மோடியின் முகவரி

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி பார்ப்பனர்கள் கூட்டிய மாநாட்டில் பங்கு கொண்டு பின் வருமாறு பேசியுள்ளார்.

இந்தியக் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க பார்ப்பன சமூகம் உதவியது. நமது கலாச்சாரம் இன்னமும் அழியாமல் இருக்கிறதென்றால், அதற்குக் காரணம் பார்ப்பனர்கள்தான். பல நூற்றாண்டு காலமாக அவர்கள் ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அறிவைத் தொடர்ந்து அளித்து வந்துள்ளனர். இது சமூகத்துக்கு அவர்கள் செய்த மாபெரும் சேவையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் உள்ள பார்ப்பனர் அல்லாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் இந்த மோடி. இவர் படித்தவராம்; விவரங்கள் அறிந்தவராம்; சிறந்த நிருவாகியாம் - ஊடகங்கள் அப்படித்தான் ஊதிப் பெருகச் செய்து தகவல்களைக் உலவ விடுகின்றன.

இவர் படிப்பின் தகுதி - சிந்தனை வளம் எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்குப் பார்ப்பனர் சங்க நிகழ்ச்சிக்குச் சென்று அவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்துக்களே போதுமானவை.

பார்ப்பனர்களிடத்தில் பக்தியோடு யார் கொழுத்த அடிமையாக இருப்பாரோ, அவரைத்தான் அவர்கள் தூக்கிப் பிடிப்பார்கள் என்பதை நாடு அறியும்.

(1) செல்வி உமா பாரதியும், உத்திரப் பிரதேச கல்யாண் சிங்கும் பார்ப்பனர் அல்லாதவர்களாக  பி.ஜே.பி.யில் இருந்ததால் என்ன பாடுபடுத்தப் பட்டார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பங்காரு லட்சமணரின் கதி என்ன?

உமா பாரதி மிக வெளிப்படையாகச் சொன்னாரே பி.ஜே.பி. என்பது பிராமின் பார்ட்டி (பார்ப்பனர் கட்சி) என்று அடித்துக் கூறவில்லையா?
மத்தியப் பிரதேசத்தில் முதல் அமைச்சராக அவர் ஏன் தொடர முடியவில்லை?

ஒரு வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டார் என்பதற் காக அறிவு நாணயமான முறையில் அரசியல் பண் பாட்டோடு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

அந்த வழக்கில் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் இறுதியாகத் தீர்ப்பு அளித்துவிட்ட பிறகு, மரியாதை யாக அறிவு நாணயமாக முதல் அமைச்சர் பதவியை அவருக்கு அளித்திருக்க வேண்டுமா, வேண்டாமா?

பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எல்லாம் மத்திய அமைச்சர்களாக இருந்தார்களே!

ஏனிந்த இரட்டை அளவுகோல் என்பதை நரேந்திர மோடி சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

(2) இந்தியக் கலாச்சாரத்தைப் பார்ப்பனர்கள் கட்டிக் காத்தார்களாமே! எந்தக் கலாச்சாரத்தைக் காப்பாற்றிக் கொடுத்தார்கள்?

பிறப்பின் அடிப்படையிலேயே பேதம் - உயர் ஜாதி - கீழ் ஜாதி பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் - பிரம்மாவின் காலில் பிறந்தவன் - என்கிற மனித உரிமைக்கும் நேயத்துக்கும், பண்பாட்டுக்கும், அறிவுக்கும் பொருத்தமில்லாத அந்தக் கயிறு திரிப்புகள்தானே இந்தப் பார்ப்பனப் பண்பாடு.

இது ஓர் அநாகரிக அமைப்பு முறையல்லவா? சூத்திரர்களும், பெண்களும் பாவயோனியில் பிறந்த வர்கள் என்று கூறும் கீதைதானே பார்ப்பனர்கள் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் பொக்கிஷம்?

இவற்றை ஏற்றுக் கொண்டால் இந்த நரேந்திர மோடியார்? பிரம்மாவின் காலில் பிறந்த நாலாவது ஜாதிதானே. சூத்திரர்தானே - வேசி மகன்தானே!
பதவி கிடைத்தால் போதுமா? மான உணர்ச்சி வேண்டாமா? பார்ப்பனர்கள் அறிவாளிகளா? அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மிக அழகாகச் சொன்னாரே - பார்ப்பனர்கள் படித்தவர்கள்தானே தவிர அறிவாளிகள் அல்லர் என்று ஆய்வு பூர்வமாகச் சொன்னாரே!

குழந்தைப் பேற்றுக்காக; உடல் பூராவும் நெய்யைத் தடவிக் கொண்டு யாருடனும் புணரலாம் என்பது தானே பார்ப்பனர்கள் கற்பித்த இந்துத்துவப் பண்பாட்டு முறை! சுத்த காட்டு விலங்காண்டிகள் ஆயிற்றே!

பதவித் துண்டு கிடைத்துவிட்டால் எவ்வளவு அடிமைத் தனத்துக்கும் அனுமார்கள் ஆட்படுவார்கள் என்பதற்கு மோடி ஒருவர் போதுமே! வெட்கம்! மகாமகாவெட்கம்!!

No comments:

Post a Comment