Wednesday 6 November 2013

முரட்டு இந்துத்துவாவாதியான மோடி செய்வாரா?

காதலியிடம் காதலன்:  உன்னைப் போன்ற அழ கான பெண்ணை முத்தமிட நான் 5000 ரூபாய் கூட கொடுப்பேன்.

காதலி: அய்யோ, நேற்று இரவு மகேஷ் எனக்கு முத்தம் கொடுத்தான். ஆனால் பணம் ஏதும் தரவில்லையே!

கணவனிடம் மனைவி: நேற்றிரவு ஷீலாவுடன் சந் தோஷமாக இருக்க எவ் வளவு பணம் கொடுத்தாய்?

கணவன்: நூறு ரூபாய் கொடுத்தேன்.

மனைவி: அவமானம்! அவளது காதலன் என்னி டம் வரும்போது, அய்ம்பது ரூபாய் மட்டுமே கொடுத் தான்.

சென்சஸ்அதிகாரி ஒருவர் ஓர் வீட்டின் பெண் மணியிடம்  கேட்கிறார்: உங்கள் கணவர் 9 ஆண்டுகளுக்கு முன் இறந்து போய்விட்ட போது, உங்களுக்கு எப்படி  5 வயதி லும் 3 வயதிலும் மகன்கள் உள்ளனர்?

நகைச்சுவைத் துணுக்குகள் என்ற கண்ணோட் டத்தில் பார்த்தாலும்கூட மேற்கண்டவை ரசிக்கத் தக்கவையல்ல - வெறுக்கத்தக்கவை. நகைச்சுவை என்ற மிக உயர்ந்த அம்சத்தைக் கொச்சைப்படுத் துவதாகும்.

எந்தப் பெண்ணும் இந்தத் தரங்கெட்ட வகையில் பேசவும் மாட்டார்; நடந்து கொள்ளவும் மாட்டார்.

இந்தநிலையில் பள்ளிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க எப்படித் தான் மனம் வந்ததோ?

சோ கூட்டம் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றதே - கொஞ்சுகின்றதே - அடுத்த பிரதமர் இவரை விட்டால் வேறு ஆள் யார்? என்று காற்றடித்து ஊதிப் பெருக்க வைக்கிறதே பார்ப்பன ஊடகங்கள் - அந்த மகத்தான குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரதாஸ் தாமோதரதாஸ் மோடியின் ஆட்சியில் தான் பள்ளிப் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

இந்துத்துவாவாதிகளுக்கு இவைபற்றியெல்லாம் கவலை ஏது? இந்துத்துவா என்கிற போது அதன் மூலம் இந்து என்பதிலிருந்து தானே கிளைக்கிறது. அந்த இந்துவின் யோக்கியதைபற்றி அறிந்தவர் களுக்கு ஒரு பிஜேபி ஆட்சியில் இவ்வளவு ஆபாச மான  பாடத் திட்டங்கள் அமைவதில் ஆச்சரியம் இருக்கவே முடியாது.

அறிஞர் அண்ணா அவர்கள் முதல்  அமைச்சராக இருந்த நிலையில் சட்டப் பேரவையிலேயே சொன்னதைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம். நினைத்தபின் கொஞ்சம் அசைப் போட்டும் பார்க்க வேண்டும். அப்படி சிந்திக்கும் பொழுது ஆசா பாசத்துக்கு   ஆட்படக் கூடாது; பக்தி என்னும் போதைக் கண்ணாடியையும் அணியக் கூடாது. அப்பொழுதுதான் எது ஒழுக்கம், எது ஒழுக்கக் கேடு என்பதும் புத்திக்கும் படும். இதோ அண்ணா பேசுகிறார். கண்ணன் தின்னும் பண்டம் எது? கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய் என்பதைக் கற்றுத் தர இப்படிப் போட்டிருக்கும். கைக்கெட்டாத பொருளை எவருக்கும் தெரியாமல் எப்படி எடுப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கும் வகையில் இப்படம் இருக்கிறது. இப்படி நான் சொல்வதால் புராணம் கூடாது என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்தக் கருத்தை இங்கு சொல்லவில்லை. மாலை 6 மணிக்கு மேல் பொதுக் கூட்டத்தில் வைத்துக் கொள்கிறேன்.

பள்ளிக்கூடத்துக் கட்டடத்துக்குப் பக்கத்தில் உள்ள பிறர் வீட்டுத் தோட்டத்தில் காய்த்துத் தொங்குகிற மாங்கனியைப்பறிக்க சோனிப் பையன் ஒருவனைக் குனிய வைத்து மாங்காய் பறிக்கலாம் என்ற வழியை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதாக ஆகிறது. இந்தக் கருத்தை பகுத்தறிவு என்று எடுத்துக் கொண்டாலும் சரி, சுயமரியாதைக் கருத்து என்று எடுத்துக் கொண்டாலும் சரி, பயப்படாமல் உலக அறிவு என்று திருத்தி அமைத்தால் கல்வி அறிவும், தரமும் பெருகும்.

முதலமைச்சர் அண்ணா கல்வி மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளிக்கையில் 23.3.1967இல் பேசிய பேச்சின் ஒருபகுதி இது.

பகுத்தறிவுக் கண்ணோட்டம் முக்கியம் - பகுத்தறிவு என்பது வெறும் தகவலைச் சேகரிப்பது அல்ல - மனித நேயத்தையும், ஒழுக்கத்தையும் அளிப்பதாகும். அதனைத்தான் தந்தை பெரியார் போதித்தார்.

குஜராத்தில் பிஞ்சு உள்ளத்தில் ஆபாச நச்சு விதைகளைத் தூவுவதற்குக் காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முரட்டு இந்துத்துவாவாதியான மோடி செய்வாரா? எங்கே பார்ப்போம்!

No comments:

Post a Comment