Thursday 26 December 2013

ஒரு ஃபாசிஸ்டின் உண்மையான தோற்றம் (2)

- அமித் சென்குப்தா


 
(நரேந்திர மோடியை உற்று நோக்குபவர்கள் பலரும்  அவரைப் பற்றி திடுக்கிடச் செய்யும், மனதை உறைய வைக்கும் சில செய்தி களைக் கூறுவார்கள்)

காட்டாண்டித்தனமான இந்தக் கதைகளையெல்லாம் கேட்ட பிறகும்,  நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முன்னேற்றத்தை உருவாக்கியவர், புதிய வரலாறு படைத்தவர் என்று எப்படி கூறமுடிகிறது? வெற்றி பெற்ற ஒரு மாநிலத் தலைவர் என்றும், வருங்காலத்தில் மிகச் சிறந்த தேசத் தலைவராக விளங்கத் தகுதி படைத் தவர் என்றும் எப்படி கூற முடிகிறது? இந்தியர்களாகிய நாம் அந்த அள வுக்கு  நினைவாற்றல் அற்றவர்களாக இருக்கிறோமா? அல்லது இந்த மோடி ஒளிர்கிறார் என்று நாடகத்தனமாகக் கூறுவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் - ஊடகங்கள் கூட்டுறவின் மூலம் சில சுயநல சக்திகளால் கட்டிவிடப்பட்ட அரசியல் கழைக்கூத்துதான் என்பது வெளிப்படையாகத் தெரிவதாகும். இந்த உறவு எதிர்காலத்தில் அவர்கள் மீதே திரும்பி வந்து தாக்க இயன்றதாகவும் இருக்கலாம்.

இமயமலையில் ஒரே நாளில் நிலச் சரிவுகளில் இருந்து 15,000 குஜராத் மக்களை (வேறு மாநில மக்களே இல்லையா?)  மோடி காப்பாற்றினார் என்பது போன்ற கட்டுக் கதைதான் இதுவும். இப்போது அவர் எல்லா பெயர்களாலும் - மோசடி, மோசடி மோடி, நம்போ பம்போ ரம்போ என்ற அழைக்கப்படுகிறார். ஒத்திகை பார்க்காத சூழ்நிலைகளில் அவரது புகழ், பெருமை என்பது நீர்க்குமிழி போல உடைந்து போகிறது.  அரிய நேர்காணல் ஒன்றில் குஜராத் கலவரப் பேய் பற்றி மோடிக்கு தொலைக்காட்சி செய்தியாளர் கரன் தாபர் நினைவு படுத்தியதை இதற்கு எடுத்துக் காட் டாகக் கூறலாம்.  அவருடைய நேர் காணல்கள், செய்தி நிகழ்ச்சிகள் அனைத்துமே பணம் கொடுத்து ஏற்பாடு செய்யப்படுபவையே.  கரன் தாபரின் நேர்காணல் மட்டும் தவறி விட்டது. மக்கள் தீயில் எரிந்து மடியும்போது வயலின் வாசித்த நீரோ மன்னனைப் போன்ற  என்று மோடியை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டதைப் பற்றி தாபர்-மோடிக்கு நினைவுபடுத்தினார். திடீரென்று அவரது அகம்பாவம் மிகுந்த தோற்றம் மாறி அவர் கூனிக் குறுகிப் போய், தவறான ஆங்கிலத்தில் உளறிக் கொட்டி, ஏராளமாக வியர்த் துப் போய், குடிக்கத் தண் ணீர் கேட்டு உடனடியாக நேர்காணலை முடித்துக் கொண்டார்.

இது போன்ற நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலத்தினுள் நடப்பது அரிதிலும் அரிதா கும். தன்னை எதிர்ப்பவர் களை அவர் இரும்புக் கரம் கொண்டு அடக்கிவைத்தார். மாநிலத்தில் ஒரு மனிதரின் சர்வாதிகார ஆட்சி நிலவியது. தனது கோட்பாட்டு சகாக்களான ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. ஆட்களையும் கூட மோடி அழித்துள்ளார். வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத, பேராசை கொண்ட சில கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு மான்ய உதவிகளைச் செய்து அவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டார். இடையூறு இல்லாத நிகழ்ச்சிகளாக மோடியின் நிகழ்ச்சிகளை நேரடியாக ஊடகங்கள் ஒளிபரப்புவதற்கு இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊடகங் களுக்கு பணம் கொடுப்பதாக நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் பணம் கொடுத்து ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளே; செய்தி போல காட்டப்படும் விளம்பரங்களே இவை. உத்தரகண்ட் மாநில ஆங்கில நாளிதழ் வெளியிட்ட மோடி ஒரே நாளில் 15000 குஜராத்திகளை இமயமலையில் காப்பாற்றினார் என்ற போலியான செய்தியை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ஷொராபுடீன் போலி என்கவுண்டர் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற மோடியின் நண்பரான அமித் ஷாவும் கூட மறுபடியும் சிறைக்குச் செல்லக் கூடும் என்ற நிலையிலும், சில நேரடி தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் மோடியுடன் கலந்து கொள்கிறார். பொதுமக்களின் பெரும் ஆதரவும் அன்பும் பெற்ற மாபெரும் தலைவர்கள் போலவும், மெத்தப்படித்த மேதாவிகள் போலவும்,  துறவு மனப் பான்மை கொண்டவர்கள் போலவும், தொலைநோக்குப் பார்வை கொண்ட வர்கள் போலவும்  மோடியும் ஷாவும் இந்நிகழ்ச்சிகளில் காட்டப்படுகின்றனர். இவர்களை நேரடி ஒலிபரப்பில் கண்ட வுடன் ஒட்டு மொத்த தேச மக்களும் மகிழ்ச்சியின் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டுவிடுவார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள் போலும்

இந்த உறுதியற்ற நிலையிலும் நகர்ப் புறங்களில் உள்ள உயர்வருவாய்ப் பிரிவு மக்களிடையே கண்ணுக்குத் தெரியாத மோடி ஆதரவு உணர்வு ஒரு வேளை இருக்கக்கூடும். ஆனால் நாடு முழுவ திலும் தனக்கு பெருத்த ஆதரவு இருப்ப தாக மோடி நினைப்பது வெறும் கற் பனையே; இக்கற்பனைக்கு ஊடகத்தின் ஒப்புதலும் தந்திரமாக பெறப்பட்டுள்ளது. சிக்கல் நிறைந்த, பிளவுபட்ட சமூகம் கொண்ட, வறுமை தாண்டவமாடும், முன்னேற்றம் பெறாத இந்தியா போன்ற ஒரு நாட்டில்  ஊடகங்களாலும், ஒரு சில பணக்காரர்களாலும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடமுடியாது. 2004 இல் காட் டப்பட்ட இந்தியா ஒளிர்கிறது என்ன ஆயிற்று என்பது நினைவில் இருக் கிறதா?

கொலைகாரன் என்றும் கொலைகாரன் தான் என்ற பழமொழி ஒன்று இருக்கிறது. அந்த உண்மையை மக்கள் மறந்து விடுவதாகத் தோன்றவில்லை.  பாபர் மசூதியை இடித்துவிட்டு, பின்னர் நாடு முழுவதிலும் ரத்த ஆறு ஓடும் அள வுக்கு மதக் கலவரங்களை ஏற்படுத்தியவர்களும்,  ரத்தம் சிந்தும், பகை உணர்வு அரசியலை அறிந்தவர்கள்தான்.  தேவைகளும், புறக்கணிப்புகளும் மிகுந்த இந்த நாட்டின் மக்களை மத அடிப்படையில் பிரித்து வைத்து பயன் பெற நினைப்பது இயலக் கூடியது அல்ல. அப்படி செய்ய முடியுமானால், பா.ஜ.க.வும் ஆர்.எஸ். எஸ்.சும்தான் இன்று உத்திரப் பிரதேசத் திலும், இந்தியாவிலும் ஆட்சி செய்து கொண்டிருக்க வேண்டும். குறைந்தது ராமர் கோயிலாவது கட்டப் பட்டிருக்க வேண்டும்.

மோடியின் ஊடக நடிப்பைப் பற்றி பத்திரிகையாளர் சிமா முஸ்தபா அண் மையில் தெரிவித்துள்ள ஒரு சிறு கருத்து:

மோடி தனது சவக்குழியை தானே மெதுவாகவும், முறைப்படியும்  வெட்டிக் கொண்டிருக்கிறார்.  போடக்ஸ் மற்றும் சிலிகான் கொண்டு செய்யப்பட்ட இயந்திரமனிதனைப் போன்றவர்தான் மோடி.  ஒத்திகை பார்க்க முடிந்தாலும், அவரது செயலாற்றல் ஓர் அளவுக்கு உட்பட்டதுதான்.  குஜராத் மாநிலத் துக்கு வெளியே அவர் சவுகரியமாக இல்லாதது போல தோன்றுகிறது. டில்லி பல்கலைக் கழகத்தில் ஒரு நிகழ்ச்சியை ஒத்திகை பார்த்தபோது மட்டும் அவர் நன்றாக இருந்தார். நேர்காணல்களிலோ அல்லது ஒத் திகை பார்க்காத சூழ்நிலைகளிலோ, அவர் உடைந்து போகிறார். மற்றவர் களின் கருத்து சரியானதல்ல என்று கருதுபவர் மோடி. சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்விகள் கூட அவருக் குள் இருக்கும் இந்த உணர்வை, தன்னைப் போல் இல்லாதவர்கள் மீதான வெறுப்பை வெளிக்கொண்டு வந்துவிடும். தேர்தல் நடக்கும் காலம் நெருங்கும்போது, மோடி கட்சிக்கு பெரும் பலம் என்ற நிலை மாறி கட்சிக்கு பெரும் சுமை என்று பா.ஜ.க. காணவும் கூடும்.  நிச்சயமாக இந்திய நாடாவது அதைக் காணும்.

(நன்றி: கின்டில் ஆகஸ்ட் 15, 2013)
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

(தொடரும்)

Read more: http://www.viduthalai.in/page-2/72622.html#ixzz2oeXHG7hj

No comments:

Post a Comment