Thursday, 27 February 2014

குஜராத் வளர்ச்சியா? மோடி புளுகு -1



நரேந்திரா தாமோதர்தாஸ் மோடி, (பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் முழுப் பெயர்), மற்ற மாநிலங்களில் பேசுகையில், குஜராத்தில் மின் உற்பத்தி தன்னி றைவு பெற்றுவிட்டதாக கூறி வரு கிறார். இதில் உண்மை இருக்கிறதா?

பாஜகவின் விவசாயிகள் சங்கமாக இருக்கும், பாரதீய கிசான் சங், விவ சாயிகளுக்கு, தடையில்லா மின்சாரம் வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறது. மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக குஜராத் இருந்தால், ஏன், விவசாயிகள் இப்படி ஓர் போராட்டத்தை நடத்த வேண்டும்?

தனியார் நிறுவனங்களில் இருந்து அதிக விலை கொடுத்து 15,300 மெகா வாட் மின்சாரத்தை குஜராத் அரசு வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா விலேயே, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை தனியார் நிறுவனங் களிடமிருந்து வாங்கும் மாநிலமாக குஜராத் முதலிடம் வகிக்கிறது.

தமிழ் நாட்டில், முதல் 100 யூனிட் வரை, ஒரு யூனிட் ஒரு ரூபாய் என்கிற நிலையில், குஜராத்தில், ஒரு யூனிட் ரூ. 3.60 ஆக உள்ளது. 200 யூனிட் வரை தமிழ் நாட்டில் ரூ.1.50 என் றால், குஜராத்தில் ரூ.4.25 ஆக உள் ளது. இதை மேலும் உயர்த்திட குஜ ராத் அரசிடம் தனியார் நிறுவனங்கள் கோரி வருகின்றன.

குஜராத்தில், பாஜகவிற்கு இந்த தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தான் அதிக நன்கொடைகளை தந்துள் ளன என்பதை தேர்தலை பற்றிய ஆய்வு செய்த சனநாயக சீரமைப்பு சங்கம் என்ற அரசு சாரா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குஜராத்தில் மின் இணைப்பு கேட்டு வந்த மூன்று லட்சம் விண் ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 3945 விண்ணப்பங்களுக்குத் தான், மின் இணைப்பு தரப்பட்டுள்ளன.

2011 கணக்கெடுப்பின்படி, குஜ ராத்தில், மின்சாரம் இல்லாத 11 லட்சம் வீடுகள் உள்ளன. அதில் 9 லட்சம் வீடுகள், கிராமத்தில் தான் உள்ளது என பாரீஸில் வாழும் சமூக ஆய்வாளர் கிறிஸ்டபர் ஜாபரிலெட், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக் கையில் 17.4.2013 எழுதிய கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார்.

இது தான், குஜராத்தில் மின் உற்பத்தி பற்றிய நிலை.


- குடந்தை கருணா

Wednesday, 26 February 2014

பில்ட் அப் மஸ்தான் "மோடி"



ஊழலை பிறப்புரிமையாக்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுடன் பில்ட் அப் மஸ்தான் "மோடி".
- அறிவழகன் கைவல்யம் (முகநூலில்...)

மோடி ம(i)றைக்க நினைக்கும் 17 ஊழல்கள்


1.டாட்டாவின் நானோ திட்டத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.900க்கு தரப்பட்டது. அது டாட்டா குழுமம் அடித்த ஜாக்பாட் ரூ.33,000 கோடி.

2. அதானி குழுமத்திற்கு முந்த்ரா துறைமுகம் மற்றும் முந்த்ரா விசேட பொருளாதார மண்டலம் உருவாக்கிட நிலம் சதுர அடி/ ச.மீ. ஒன்றுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு அதாவது வெறும் 10 பைசாவிற்கு தரப்பட்டது. இதனை அதானி குழுமம் பின்னர் சதுர மீட்டர் ரூ.100க்கு விற்று கொழுத்த இலாபம் பார்த்தனர். இந்த விற்பனை சட்டவிரோதமானது.

3. கே.ரஹேஜா என்ற ரியல் எஸ்டேட்டுக்கு முக்கிய பகுதியில் ஒரு ச.மீ. ரூ.470 வீதம் 3.76 லட்சம் சதுர மீட்டர் விற்கப்பட்டது. அதற்கு அருகாமையில் விமானப்படை நிலம் கேட்டபொழுது ஒரு சதுரமீட்டர் ரூ.1100 என கூறப்பட்டது. என்னே மோடியின் தேசபக்தி!

4. நவ்சாரி விவசாயப் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 65,000 ச.மீட்டர் நிலம் சத்ராலா ஓட்டல் குழுமத்திற்கு விடுதிகட்ட தாரைவார்க்கப்பட்டது. பல்கலைக் நிர்வாகம் ஆட்சேபனை தெரிவித்தாலும் அது உதாசீனப்படுத்தப்பட்டது.

இந்த இடமாற்றம் நேரடியாக நரேந்திர மோடியின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது. இதனால் குஜராத்அரசுக்கு இழப்பு ரூ. 426 கோடி.

5. அண்டை நாட்டின் எல்லை ஓரத்தில் உள்ள நிலம் அரசின் கைகளில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இது தேச பாதுகாப்புடன் தொடர்புடைய அம்சம்.

ஆனால் ஒரு பெரிய பரப்பளவு உள்ள நிலம் உப்பு நிறுவனங் களுக்கு தரப்பட்டது. இந்த நிறுவனங்கள் வெங்கையாநாயுடுவின் உறவினர்களுக்கு சொந்தமானது. வெங்கையா நாயுடு மோடியை ஏன் ஆதரிக்கிறார் என்பது புரிகிறதா?

6. எஸ்ஸார் கார்ப்பரேட் குழுமத்திற்கு 2.08 லட்சம் சதுரமீட்டர் நிலம் தரப்பட்டது. இதில் ஒரு பகுதி வனங்கள் நிறைந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இது சட்டவிரோதமானது.

7. அகமதாபாத் நகரின் அருகில் சந்தை நிலவரப்படி விலை உயர்ந்த 25,724 ச.மீ. இடம் பாரத் ஒட்டல் குழுமத்திற்கு தரப்பட்டது. இதற்காக டெண்டர் எதுவும் கோரப்படவில்லை.

8. 38 மிகப்பெரிய ஏரிகளில் மீன்படிக்கும் உரிமை டெண்டர்கள் கோரப்படாமலேயே ஒரு சிலருக்கு தரப்பட்டது.

9. ஹாசிரா எனும் இடத்தில் L&T நிறுவனத்திற்கு 80 ஹெக்டேர் அளவுள்ள நிலம் சதுர மிட்டர் ஒன்றுக்கு வெறும் ரூ.1/- அதாவது சதுர அடி வெறும் 10 பைசாவிற்கு தாரை வார்க்கப்பட்டது.

10. Vibrant குஜராத் விழாக்களில் பங்கேற்ற தொழில் அதிபர்களுக்கு நகரின் பல முக்கிய இடங்களில் சந்தையில் விலை உயர்ந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

11. கால்நடை தீவனங்கள் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து ஒரு கிலோ ரூ.48-க்கு வாங்கப்பட்டது. ஆனால் வெளிச்சந்தையில் இந்த தீவனம் ரூ. 24க்கு கிடைக்கிறது.

12. அங்கன்வாடி மையங்களுக்கு உணவுப் பொருட்கள் வாங்கியதில் இரு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி. இதன்காரணமாக நஷ்டம் ரூ. 92 கோடி.

13. GSPC எனும் நிறுவனம் தொடங்கிட குஜராத் அரசாங்கம் ரூ. 4993.50 கோடி முதலீடு செய்தது. இதுவரை வருமானம் ரூ. 290 கோடி மட்டுமே. ஆண்டிற்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.

14. Sujalam Sufalam yojana எனும் திட்டத்திற்கு 2003ம் ஆண்டு ரூ. 6237.33 கோடி ஒதுக்கப்பட்டது.

2005ம் ஆண்டு இத்திட்டம் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் இதுவரை பூர்த்தியாகவில்லை. குஜராத் சட்டமன்றத்தின் பொதுக் கணக்கு குழு (Public Accounts Commitee) இதனை ஆய்வு செய்த பொழுது ரூ. 500 கோடி ஊழல் நடந் திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழுவில் பிஜேபி உறுப் பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதில் ஆச்சர்யமும் இல்லை!

15. நரேந்திர மோடி விமானத்தில் பயணிக்கும் பொழுது குஜராத் அரசாங்கத்தின் விமானத்தையோ அல்லது ஹெலிகாப்டரையோ பயன்படுத்துவது இல்லை.

ஏர் - இந்தியா, ஜெட் ஏர்வேஸ் போன்ற மக்கள் பயன்படுத்தும் விமானங்களிலும் பயணிப்பது இல்லை.

மிகவும் சொகுகான தனியார் முதலாளிகளுக்கு சொந்தமான விமானங்களில்தான் அவர் பயணிப்பார். அதன் செலவு தொழில் அதிபர்கள் ஏற்றுக்கொள்வர்.

அண்மையில் திருச்சிக்கு வந்தபோதும் இதேபோன்று தனி விமானத்தில்தான் வந்தார்; வெள்ளியன்று (அக். 18) சென்னைக்கும் தனி விமானத்தில்தான் வந்தார்.

16. இண்டிகோல்டு எனும் நிறுவனம் சட்டத்தை மீறி 36.25 ஏக்கர் பண்ணை நிலத்தை வாங்கி அதிக விலைக்கு விற்று கொழுத்த லாபம் அடைந்தது. இதுவரை இந்த நிறுவனம் மீது நடவடிக்கை இல்லை.

17. குஜராத் அரசுக்கு சொந்தமான பிப் பவர் மின்நிலையத்தின் 49சதவீதப் பங்குகள் ஸ்வான் எனர்ஜி எனும் நிறு வனத்திற்கு விற்கப்பட்டது. இதற்காக எந்த டெண்டரும் கோரப்படவில்லை.

Thursday, 30 January 2014

மாநில மொத்த உற்பத்தியும் (GSDP) மோடியாரின் வளர்ச்சி பலூன் வெடிப்பும்

மோடியின் புளுகு மூட்டைகளை தோழர் நரேன் ராஜகோபாலன் ஆதாரத்தோடு நிரூபித்து தொடர்ந்தது எழுதி வருகிறார்...மோடி குறித்தான ஊடகங்களின் பம்மாத்துகளுக்கும் (Paid News), சம்பளத்துக்கு ஆள் வைத்து, இணையத்தில் பரப்பப்படும் பொய்யான செய்திகளுக்கும் இது போன்ற ஆதாரபூர்வமான கட்டுரைகள் சரியான சாட்டையடி.....நண்பர்கள் இதுபோன்ற கட்டுரைகளை முழுதும் படித்து, தங்களால் இயன்றளவு பரப்பவேண்டும்....
-------------------------------------------------------------------------------------------------
மாநில மொத்த உற்பத்தியும் (GSDP)
மோடியாரின் வளர்ச்சி பலூன் வெடிப்பும்
(Long Read)
- Narain Rajagopalan

ஒரு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியினை (பொருட்கள் மற்றும் சேவைகளை )(Gross Domestic Product - GDP) வைத்து தான் அந்த நாடு முன்னேறியிருக்கிறதா. தேங்குகிறதா. அல்லது பின்னேறுகிறதா என்பதை சொல்ல முடியும். இதையே ஒரு மாநிலத்துக்காக சுருக்கினால் அது தான் GSDP - Gross State Domestic Product. ஒரு மாநிலத்துக்குள் ஒரு வருடத்தில் உருவாகும் பொருட்கள் & சேவைகளின் மொத்த பயன்பாட்டை பணமாக அளவீடுவது தான் இது.

உ.தா போன வருடம் GSDP ரூ.100 என்று வைத்துக் கொண்டால், இந்த வருடத்தில் GSDP ரூ.110 ஆக மாறியிருந்தால், மாநிலம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. பொருட்களும், சேவைகளும் பெருகுகிறதென்று பொருள். மாறாக இந்த வருடம் ரூ.90 என்றால் தேக்கமோ, மந்தமோ, தொய்வோ ஏற்பட்டிருக்கிறது. 10% குறைவான பொருட்கள் + சேவைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். இந்த அடிப்படைத் தெரிந்தால் போதும். இந்தியாவில் ப்ளானிங் கமிஷன் இதை அளவிட ஆறு காரணிகளை முன்வைக்கிறது.

விவசாயம் மற்றும் அதற்கிணையான தொழில்கள் (Agriculture and Allied)
நேரடி விவசாயம் (Agriculture)
தொழில்துறை (Industry)
சுரங்கம் மற்றும் குவாரிகள் (Mining and Quarrying)
உற்பத்தித் துறை (Manufacturing)
சேவைகள் (Services)

இந்த ஆறு காரணிகளின் வருடாந்திர உயர்வு / தாழ்வில் தான் ஒரு மாநிலத்தின் ஏற்றமும் / இறக்கமும் இருக்கிறது.

இந்தியாவின் அதிகமான வருடாந்திர வளர்ச்சிப் பெற்ற மாநிலம் - குஜராத்
இந்தியாவின் வேகமான தொழில்துறை மாநிலம் - குஜராத்
சிறு சிறு கால்வாய்களை இணைத்ததன் மூலம் விவசாயத்திற்கு அதிகமான பங்களிப்பை அளித்துள்ள மாநிலம் - குஜராத்
24 x 7 மின்சாரமிருப்பதால், அதிகமான உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் மையம் கொள்ளும் மாநிலம் - குஜராத்

மேற்சொன்னவை அத்தனையுமே குஜராத் அரசாலும், வெவ்வேறு ஊடகங்களாலும் முன் வைக்கப்படும் செய்திகள். இதில் எவ்வளவு தூரம் உண்மைகள் இருக்கிறது ?

நான் ப்ளானிங் கமிஷனின் ஒரு டேட்டா டேபிளை முன்வைக்கிறேன். இது 2004-05 விலைவாசியை அடிப்படையாகக் கொண்டு 2012-13 வரைஇந்த ஆறு காரணிகளுக்கான வளர்ச்சியை மாநிலம் தோறும் கணித்திருக்கிறது. மாண்டேக் சிங் அலுவாலியா வேண்டுமென்றே குஜராத்துக்கு குறைவான மதிப்பீடுகள் போடுவார் என்று நினைத்து இதைப் படித்தால், சாரி இப்போதை கிளம்பிவிடுங்கள். உங்களோடு பேச முடியாது. நேரடியாக மத்திய அரசின் கீழ் வந்தாலும், ப்ளானிங் கமிஷன் சி ஏ ஜி, ரிசர்வ் வங்கி, செபி மாதிரி தனியான ஒரு அமைப்பு. இதனுடைய டேட்டாவினை அடிப்படையாக வைத்து தான் பேச முடியும்.

இப்போதைக்கு குஜராத், ராஜஸ்தான், பீகார், ஆந்திரா, தமிழகம் இந்த ஐந்து மாநிலங்களையும் ஓப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வோம். (குஜராத்தினுடைய 2012-13 டேட்டா ப்ளானிங் கமிஷனிலேயே இல்லை. ஆகவே நாம் 2011-12 வரைக்குமான வளர்ச்சி / தேய்வு ஒப்பிட்டினை மட்டும் செய்வோம்)

பார்க்க Datasheet 1

மஞ்சள் பட்டை - குஜராத்
நீலப் பட்டை - பீகார்

2004-05 விலைவாசியில் குஜராத் ஆரம்பிப்பது 203,373 கோடிகள்; பீகார் ஆரம்பிப்பது 77,781 கோடிகள்.

2011-12 முடிவில் 2004-05 விலைவாசியில் குஜராத் 398,884 கோடிகள்; அதாவது எட்டு வருடத்தில் ஆரம்பித்ததிலிருந்து சற்றேறக் குறைய இரண்டு மடங்கு (406,000 கோடிகள் தேவை. சல்தா ஹே!)

ஆனால் பீகார் இதே காலகட்டத்தில் செய்திருப்பது 246,995 கோடிகள்; எட்டு வருடத்தில் மூன்று மடங்கிற்கும் மேலான வளர்ச்சி.

இந்த எட்டு வருடங்களில் பீகார் வெறும் 77,000 கோடிகளில் ஆரம்பிக்கிறது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வோம். குஜராத் ஆரம்பிப்பது அதைப் போல இரண்டு மடங்கிற்கும் மேலே. ஆனால் எட்டு வருடங்கள் கழித்து வளர்ச்சி விகிதத்தை சராசரியாய்ப் பார்த்தால் வருவது இது தான்

குஜராத் - 10.13%
பீகார் - 18.84 %

அந்த ஃக்ராப்பினைப் பார்த்தால் 2005-06-இல் மட்டும் தான் பீகாரின் வளர்ச்சி விகிதம் (6.05%) குஜராத்தை (14.75%) விட பின் தங்கியிருக்கிறது. அங்கிருந்து எடுக்கிறது வேகம். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒரு முறையும் பீகார் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்திற்கு குறையவே இல்லை. இதில் நான்கு வருடங்களில் வளர்ச்சி விகிதம் (போன வருடத்தோடு ஒப்பிடுகையில்) 20%+ ஆனால், குஜராத் ஒற்றை இலக்க வளர்ச்சியோடு மூன்று வருடங்களையும், 2010-11-இல் முட்டி மோதி ஜஸ்ட் பாஸ் நிலையில் இரட்டை இலக்க வளர்ச்சியோடு நிற்கிறது. ஆக எட்டாண்டுகள் மோடியின் ஆட்சியின் கீழ், இந்திய சராசரியை விட குஜராத் அதிகமாக வளர்ந்திருக்கலாம். ஆனால், பீமாரு என்று நக்கலடிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் மாநிலமான பீகாரின் வளர்ச்சியை தொடக் கூட முடியவில்லை.

இது தான் குஜராத் வளர்ச்சி மாடல். இந்த மாடலை தான் அவர் இந்தியா முழுமைக்கும் முன் வைக்கிறார். There is absolutely no reasoning for why we should go for this model, when statistically it is very clear that the model has its limitations & issues. It is vividly clear about governance deficit & administrative inability to take the State to growth trajectory sustain-ably.

இந்த க்ராபிலேயே உங்களால் ராஜஸ்தான், ஆந்திரா, தமிழக விவரங்களையும் பார்க்க முடியும். தமிழகத்தில் இந்த எட்டாண்டுகளில் மூன்று ஆட்சிகள் (2005-06 அதிமுக / 2006 - 11 திமுக / 2011 - 12 அதிமுக மீண்டும்) மாறியிருக்கின்றன. வழமையாய் ஆட்சி மாறினால் திட்டங்கள் தொய்வுறும். அப்ரூவல்கள் நிற்கும். முந்தின ஆட்சி முன்வைத்த திட்டங்களை ஆளும் கட்சி எடுத்து நடத்த யோசிக்கும். இதெல்லாம் நிஜத்தில் நடப்பவை. நடந்தவை. ஆனால் இத்தனையும் தாண்டி, தமிழகம் புலிப்பாய்ச்சலில் முன்னேறியிருக்கிறது. தமிழகத்தின் சராசரி எட்டாண்டு கால வளர்ச்சி (ஒப்பீட்டளவில்) குஜராத்தை விட அதிகம் (10.30% சராசரி). ஆக இனிமேல் தமிழகத்தையும், குஜராத்தையும் ஒப்பிடத் தேவையில்லை. ஏனென்றால் தமிழகத்தின் ஆரம்ப 2004 -05 அடிப்படையே 219,003 கோடிகள், குஜராத்தை விட 16,000 கோடிகள் அதிகமாய் ஆரம்பிக்கிறது. TN has entered into the Developed State league in alignment with Maharastra & Delhi.

ஆக கடந்த எட்டாண்டுகளில், டெக்னிகலாக இந்தியாவின் வேகமாக வளர்ந்த மாநிலம் - பீகார்.

குஜராத்தில் வளர்ச்சி பரவலாக நடக்கவில்லை. மேலும் கீழுமாக தான் போயிருக்கிறதேயொழிய சீரான வளர்ச்சி இல்லை. ஆகவே குஜராத் இந்தியாவின் நம்பர் 1 வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று இனிமேல் சொல்லாதீர்கள். They have done an okay job for growth, not spectacular sustainable growth traction. ஆக அதிகமான வருடாந்திர வளர்ச்சிப் பெற்ற மாநிலம் என்கிற claim இத்தோடு முடிந்தது.

முதலும் முக்கியமுமான விக்கெட் காலி.

ஒப்பீட்டளவில் இந்த இரண்டு மாற்றுக் கருத்துக்கள், மாற்று வளர்ச்சி மாடல்கள் கொண்ட மாநிலங்களை (குஜராத் / பீகார்) எடுத்துக் கொண்டு ஒவ்வொரு காரணியாக அலசுவோம்.

பீகாரில் மின்சாரம் 60% இருந்தால் பெரிய விஷயம். சரியான தரவுகள் இல்லை. குஜராத் பீற்றிக் கொள்வது near 100% மின்சாரம். இதை ஏற்கனவே நாம் உடைத்து விட்டோம். ஆனாலும் ஒரு வாதத்துக்கு இப்போதைக்கு குஜராத் சொல்வதையை அடிப்படையாகக் கொள்வோம்.

பார்க்க Datasheet 2

நீலப்பட்டை - விவசாயம் + சார்புகள்
ஆரஞ்சுப் பட்டை - நேரடி விவசாயம்
பிங்க் பட்டை - தொழில்துறை
பச்சைப் பட்டை - உற்பத்தித் துறை

முதலில் பீகாரை எடுத்துக் கொள்வோம். அவர்கள் தானே பரிதாபமான நிலையில் இருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன. விவசாயம் + சார்புகளிலும், நேரடி விவசாயத்திலும் கிட்டத்திட்ட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறார்கள் (24,530 Vs 65,102 / 20,673 Vs 58,113) எட்டாண்டுகளில் ஆட்சியமைப்பும், அரசாங்கமும், அரசும் ஒழுங்காக இல்லாமல் இது சாத்தியமேயில்லை. இந்த எட்டாண்டுகளில் 2007-08 / 2009 -10 காலக்கட்டங்களில் மட்டுமே முந்தைய ஆண்டை விட கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஈடாக வெறித்தனமாக முன் / பின் ஆண்டுகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு ஈடான காலக்கட்டத்தில் குஜராத்தில் என்ன நடந்திருக்கிறது ?

விவசாயம் + சார்புகள் விஷயத்தில் 60% முன்னேறியிருக்கிறார்கள் (32,706 Vs 51,525) இதிலேயே மூன்று வருடங்களில் நடுவில் சுணக்கமிருக்கிறது.

நேரடி விவசாயத்தில் சரி அடி வாங்கியிருக்கிறார்கள். ஜான் ஏறினால் கி.மீ சறுக்கியிருக்கிறது. எட்டாண்டுகளின் வளர்ச்சி 70% மட்டுமே. மூன்றாண்டுகள் இங்கேயும் மரண அடி. இந்த காலகட்டங்களில் குஜராத் அரசு இந்த வருடங்களை (2006 - 07 / 2008 - 09 / 2009 -10) Drought ஆக அறிவித்திருக்கிறதா என்று கெஜட்டில் பார்க்க வேண்டும். ஆனால் வளர்ச்சி சீராக இல்லை என்பதை டேட்டா சொல்கிறது.

தொழில் துறை: குஜராத் அரசு போகிற இடங்களெல்லாம் பறை சாற்றும் கோஷம். Fastest growing Industrialized State in India.
2004 - 05 - 89,321
2011 - 12 - 163,826

அட்டகாசம், எட்டாண்டுகளில் கிட்டத்திட்ட இரண்டு மடங்கு (90% வளர்ச்சி) மின்சாரம் செய்திருக்கும் வேலையாகக் கூட இருக்கலாம். மின்சாரமே இல்லாத டூபாக்கூர் ஊரான பீகார் எப்படி தொழில்துறையில் பயணித்திருக்கிறது ?

2004 - 05 - 10,706
2011 - 12 - 48,212

இந்த டேட்டாவினை முதல்முறையாகப் பார்த்தப் போது மிரண்டு போய் ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை. எட்டாண்டுகளில் 400% வளர்ச்சி. நிதிஷ் குமார் இதை ஒரு தனியார் நிறுவனத்தில் செய்திருந்தால் இந்நேரம் நிறுவனம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடி தள்ளியிருக்கும்.

இத்தனைக்கும் ஊரிலிருக்கக் கூடிய எல்லா disadvantage-களும் இருக்கக்கூடிய மாநிலம் பீகார். கரெண்ட் கிடையாது. முழுமையான சாலைகள் கிடையாது. திறன் வாய்ந்த பணியாளர்கள் கிடையாது. இதையெல்லாம் வைத்துக் கொண்டே இந்த மனிதர் இதை செய்திருக்கிறார் என்றால் ஒரளவுக்கு நல்ல கட்டமைப்பும், வசதிகளும் இருந்தால் பீகார் முன்னணி மாநிலமாக ஏன் மாறாது ?

கட்-ஆப்ல 95% வாங்கினவன் பாஸ் பண்றது பெரிய விஷயமே இல்லை. 40% பார்ட்டர் பாஸ் பண்ணவன் பர்ஸ்ட் கிளாஸ் எடுக்கிறது தான் சாதனை. அந்த வகையில் பீகாரில் எட்டாண்டுகளில் நடந்திருப்பது அசாத்தியமான administrative சாதனை. எல்லாத் தளங்களிலும் நிர்வாகமும், தெளிவும் இருந்தாலேயொழிய அந்த மாதிரியான ஒரு மாநிலத்தை இப்படி தலைகீழாகப் புரட்டிப் போடவே முடியாது.

இறுதியாய் மோடி அடிக்கடி சொல்லும் தொழிற்சாலைகள் அடங்கிய உற்பத்தித் துறை.

குஜராத்துக்கும் பீகாருக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. குஜராத்தின் ஆரம்பத்தில் பத்தில் ஒரு பங்கு கூட பீகாரில்லை (G: 55,443; B: 4,379)

எட்டாண்டுகளில் குஜராத் மேலேறி சாதித்திருப்பது 112,521 அதாவது கிட்டத்திட்ட இரண்டு மடங்கு. மறுக்க முடியாத சாதனைதான்.

ஆனால் ஒன்றுமேயில்லாத, கரண்ட்டில்லாத ஒரு மாநிலம் அதே காலக்கட்டத்தில் நான்கு மடங்கு தாண்டியிருக்கிறது (12,705)

இவை வெறும் எண்கள் அல்ல. இதற்கு பின் இரண்டு மாநில தலைமைகளின் ஆளுமையும், நிர்வாகத் திறமையும், பங்களிப்பும் இருக்கிறது.

உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். இத்தனைக்கு பிறகும், மோடி முன்வைக்கும் புகழாரங்களுக்கு அவர் தகுதியானவர் தானா ? தகுதியானவர்கள் எல்லாம் சத்தமேப் போடாமல் சாதித்துக் கொண்டிருக்கும்போது, இந்திய ஒப்பீட்டளவில் பெரியதாய் leap frogging எதுவுமே செய்யாத ஒருவரை எப்படி ஏற்றுக் கொள்ள சொல்கிறீர்கள் ?

//இந்தியாவின் வேகமான தொழில்துறை மாநிலம் - குஜராத்
சிறு சிறு கால்வாய்களை இணைத்ததன் மூலம் விவசாயத்திற்கு அதிகமான பங்களிப்பை அளித்துள்ள மாநிலம் - குஜராத்
24 x 7 மின்சாரமிருப்பதால், அதிகமான உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் மையம் கொள்ளும் மாநிலம் - குஜராத்//

இனி நீங்கள் முடிவு செய்துக் கொள்ளுங்கள். இந்த வாசகங்களில் உண்மை இருக்கிறதா அல்லது தன்னை பட்டவர்த்தனமாக முன்னிறுத்திக் கொள்ளும் ஒரு அதிகாரவெறி பிடித்த ஆளுமையின் குரல் இருக்கிறதா என்பதை!

Thursday, 26 December 2013

ஒரு ஃபாசிஸ்டின் உண்மையான தோற்றம் (2)

- அமித் சென்குப்தா


 
(நரேந்திர மோடியை உற்று நோக்குபவர்கள் பலரும்  அவரைப் பற்றி திடுக்கிடச் செய்யும், மனதை உறைய வைக்கும் சில செய்தி களைக் கூறுவார்கள்)

காட்டாண்டித்தனமான இந்தக் கதைகளையெல்லாம் கேட்ட பிறகும்,  நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முன்னேற்றத்தை உருவாக்கியவர், புதிய வரலாறு படைத்தவர் என்று எப்படி கூறமுடிகிறது? வெற்றி பெற்ற ஒரு மாநிலத் தலைவர் என்றும், வருங்காலத்தில் மிகச் சிறந்த தேசத் தலைவராக விளங்கத் தகுதி படைத் தவர் என்றும் எப்படி கூற முடிகிறது? இந்தியர்களாகிய நாம் அந்த அள வுக்கு  நினைவாற்றல் அற்றவர்களாக இருக்கிறோமா? அல்லது இந்த மோடி ஒளிர்கிறார் என்று நாடகத்தனமாகக் கூறுவது, கார்ப்பரேட் நிறுவனங்கள் - ஊடகங்கள் கூட்டுறவின் மூலம் சில சுயநல சக்திகளால் கட்டிவிடப்பட்ட அரசியல் கழைக்கூத்துதான் என்பது வெளிப்படையாகத் தெரிவதாகும். இந்த உறவு எதிர்காலத்தில் அவர்கள் மீதே திரும்பி வந்து தாக்க இயன்றதாகவும் இருக்கலாம்.

இமயமலையில் ஒரே நாளில் நிலச் சரிவுகளில் இருந்து 15,000 குஜராத் மக்களை (வேறு மாநில மக்களே இல்லையா?)  மோடி காப்பாற்றினார் என்பது போன்ற கட்டுக் கதைதான் இதுவும். இப்போது அவர் எல்லா பெயர்களாலும் - மோசடி, மோசடி மோடி, நம்போ பம்போ ரம்போ என்ற அழைக்கப்படுகிறார். ஒத்திகை பார்க்காத சூழ்நிலைகளில் அவரது புகழ், பெருமை என்பது நீர்க்குமிழி போல உடைந்து போகிறது.  அரிய நேர்காணல் ஒன்றில் குஜராத் கலவரப் பேய் பற்றி மோடிக்கு தொலைக்காட்சி செய்தியாளர் கரன் தாபர் நினைவு படுத்தியதை இதற்கு எடுத்துக் காட் டாகக் கூறலாம்.  அவருடைய நேர் காணல்கள், செய்தி நிகழ்ச்சிகள் அனைத்துமே பணம் கொடுத்து ஏற்பாடு செய்யப்படுபவையே.  கரன் தாபரின் நேர்காணல் மட்டும் தவறி விட்டது. மக்கள் தீயில் எரிந்து மடியும்போது வயலின் வாசித்த நீரோ மன்னனைப் போன்ற  என்று மோடியை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டதைப் பற்றி தாபர்-மோடிக்கு நினைவுபடுத்தினார். திடீரென்று அவரது அகம்பாவம் மிகுந்த தோற்றம் மாறி அவர் கூனிக் குறுகிப் போய், தவறான ஆங்கிலத்தில் உளறிக் கொட்டி, ஏராளமாக வியர்த் துப் போய், குடிக்கத் தண் ணீர் கேட்டு உடனடியாக நேர்காணலை முடித்துக் கொண்டார்.

இது போன்ற நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலத்தினுள் நடப்பது அரிதிலும் அரிதா கும். தன்னை எதிர்ப்பவர் களை அவர் இரும்புக் கரம் கொண்டு அடக்கிவைத்தார். மாநிலத்தில் ஒரு மனிதரின் சர்வாதிகார ஆட்சி நிலவியது. தனது கோட்பாட்டு சகாக்களான ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. ஆட்களையும் கூட மோடி அழித்துள்ளார். வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத, பேராசை கொண்ட சில கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு மான்ய உதவிகளைச் செய்து அவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டார். இடையூறு இல்லாத நிகழ்ச்சிகளாக மோடியின் நிகழ்ச்சிகளை நேரடியாக ஊடகங்கள் ஒளிபரப்புவதற்கு இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊடகங் களுக்கு பணம் கொடுப்பதாக நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் பணம் கொடுத்து ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளே; செய்தி போல காட்டப்படும் விளம்பரங்களே இவை. உத்தரகண்ட் மாநில ஆங்கில நாளிதழ் வெளியிட்ட மோடி ஒரே நாளில் 15000 குஜராத்திகளை இமயமலையில் காப்பாற்றினார் என்ற போலியான செய்தியை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ஷொராபுடீன் போலி என்கவுண்டர் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற மோடியின் நண்பரான அமித் ஷாவும் கூட மறுபடியும் சிறைக்குச் செல்லக் கூடும் என்ற நிலையிலும், சில நேரடி தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் மோடியுடன் கலந்து கொள்கிறார். பொதுமக்களின் பெரும் ஆதரவும் அன்பும் பெற்ற மாபெரும் தலைவர்கள் போலவும், மெத்தப்படித்த மேதாவிகள் போலவும்,  துறவு மனப் பான்மை கொண்டவர்கள் போலவும், தொலைநோக்குப் பார்வை கொண்ட வர்கள் போலவும்  மோடியும் ஷாவும் இந்நிகழ்ச்சிகளில் காட்டப்படுகின்றனர். இவர்களை நேரடி ஒலிபரப்பில் கண்ட வுடன் ஒட்டு மொத்த தேச மக்களும் மகிழ்ச்சியின் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டுவிடுவார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள் போலும்

இந்த உறுதியற்ற நிலையிலும் நகர்ப் புறங்களில் உள்ள உயர்வருவாய்ப் பிரிவு மக்களிடையே கண்ணுக்குத் தெரியாத மோடி ஆதரவு உணர்வு ஒரு வேளை இருக்கக்கூடும். ஆனால் நாடு முழுவ திலும் தனக்கு பெருத்த ஆதரவு இருப்ப தாக மோடி நினைப்பது வெறும் கற் பனையே; இக்கற்பனைக்கு ஊடகத்தின் ஒப்புதலும் தந்திரமாக பெறப்பட்டுள்ளது. சிக்கல் நிறைந்த, பிளவுபட்ட சமூகம் கொண்ட, வறுமை தாண்டவமாடும், முன்னேற்றம் பெறாத இந்தியா போன்ற ஒரு நாட்டில்  ஊடகங்களாலும், ஒரு சில பணக்காரர்களாலும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடமுடியாது. 2004 இல் காட் டப்பட்ட இந்தியா ஒளிர்கிறது என்ன ஆயிற்று என்பது நினைவில் இருக் கிறதா?

கொலைகாரன் என்றும் கொலைகாரன் தான் என்ற பழமொழி ஒன்று இருக்கிறது. அந்த உண்மையை மக்கள் மறந்து விடுவதாகத் தோன்றவில்லை.  பாபர் மசூதியை இடித்துவிட்டு, பின்னர் நாடு முழுவதிலும் ரத்த ஆறு ஓடும் அள வுக்கு மதக் கலவரங்களை ஏற்படுத்தியவர்களும்,  ரத்தம் சிந்தும், பகை உணர்வு அரசியலை அறிந்தவர்கள்தான்.  தேவைகளும், புறக்கணிப்புகளும் மிகுந்த இந்த நாட்டின் மக்களை மத அடிப்படையில் பிரித்து வைத்து பயன் பெற நினைப்பது இயலக் கூடியது அல்ல. அப்படி செய்ய முடியுமானால், பா.ஜ.க.வும் ஆர்.எஸ். எஸ்.சும்தான் இன்று உத்திரப் பிரதேசத் திலும், இந்தியாவிலும் ஆட்சி செய்து கொண்டிருக்க வேண்டும். குறைந்தது ராமர் கோயிலாவது கட்டப் பட்டிருக்க வேண்டும்.

மோடியின் ஊடக நடிப்பைப் பற்றி பத்திரிகையாளர் சிமா முஸ்தபா அண் மையில் தெரிவித்துள்ள ஒரு சிறு கருத்து:

மோடி தனது சவக்குழியை தானே மெதுவாகவும், முறைப்படியும்  வெட்டிக் கொண்டிருக்கிறார்.  போடக்ஸ் மற்றும் சிலிகான் கொண்டு செய்யப்பட்ட இயந்திரமனிதனைப் போன்றவர்தான் மோடி.  ஒத்திகை பார்க்க முடிந்தாலும், அவரது செயலாற்றல் ஓர் அளவுக்கு உட்பட்டதுதான்.  குஜராத் மாநிலத் துக்கு வெளியே அவர் சவுகரியமாக இல்லாதது போல தோன்றுகிறது. டில்லி பல்கலைக் கழகத்தில் ஒரு நிகழ்ச்சியை ஒத்திகை பார்த்தபோது மட்டும் அவர் நன்றாக இருந்தார். நேர்காணல்களிலோ அல்லது ஒத் திகை பார்க்காத சூழ்நிலைகளிலோ, அவர் உடைந்து போகிறார். மற்றவர் களின் கருத்து சரியானதல்ல என்று கருதுபவர் மோடி. சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்விகள் கூட அவருக் குள் இருக்கும் இந்த உணர்வை, தன்னைப் போல் இல்லாதவர்கள் மீதான வெறுப்பை வெளிக்கொண்டு வந்துவிடும். தேர்தல் நடக்கும் காலம் நெருங்கும்போது, மோடி கட்சிக்கு பெரும் பலம் என்ற நிலை மாறி கட்சிக்கு பெரும் சுமை என்று பா.ஜ.க. காணவும் கூடும்.  நிச்சயமாக இந்திய நாடாவது அதைக் காணும்.

(நன்றி: கின்டில் ஆகஸ்ட் 15, 2013)
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

(தொடரும்)

Read more: http://www.viduthalai.in/page-2/72622.html#ixzz2oeXHG7hj

ஒரு ஃபாசிஸ்டின் உண்மையான தோற்றம் (1)

- அமித் சென்குப்தா


 
(நரேந்திர மோடியை உற்று நோக்குபவர்கள் பலரும்  அவரைப் பற்றி திடுக்கிடச் செய்யும், மனதை உறைய வைக்கும் சில செய்தி களைக் கூறுவார்கள்)

ஆஷிஷ் நந்தி என்ற சமூக அறிவிய லாளர், 1990களின் தொடக்கத்தில் நரேந்திரமோடியைப்  பேட்டி கண்டவர். பேட்டியை முடித்துக் கொண்டு வெளியே வந்த அவர் அதிர்ச்சியுடன் கூறிய சொற்கள்:

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபலம் அடையாமல் ஒரு சாதாரண ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்த நரேந்திர மோடி, பா.ஜ.கட்சியின் ஒரு சிறு பொறுப்புக்கு வருவதற்கு முயற்சிகள் செய்து கொண்டிருந்தவர். அவரைப் பேட்டி காணும் பெருமை எனக்குக் கிடைத்தது. மோடியைப் பற்றி இவ்வாறு கூறுவதற்காக நான் மகிழ்ச்சி அடையவில்லை. என்றாலும்,  எதேச்சாய திகார மனப்பான்மை கொண்ட மனிதர் களுக்கு உண்டான அளவுகோல்கள், கூறுகள், குணநலன்கள் எவை என மனநோய் மருத்துவர்களும், உளவியல் மருத்துவர்களும், மனஇயல் வல்லுநர் களும் பல ஆண்டு ஆய்வுகளுக்குப் பிறகு நிர்ணயித்துள்ள அம்சங்கள் அனைத்தையும் நிறைவு செய்பவராக நரேந்திர மோடி இருக்கிறார் என்று தான் என்னால் கூறமுடியும். தூய் மையான உயர்ஒழுக்கக் கொள்கை என்று தான் கருதியிருப்பதில் கொண்டிருக்கும் பிடிவாதம், உணர்ச்சி வயப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறுகிய கண்ணோட்டம்,  தனது கருத்தை நிலைநாட்டுவதில்  அள வுக்கு அதிகமாகக் காட்டும் தன் முனைப்பு, தனது உணர்வுகள் பற்றிய அச்சம் மற்றும் அத்தகைய உணர்வுகள் இருப்பதை ஏற்காமல் மறுப்பது,  அவற்றுடன் இணைந்த வன்முறை பற்றிய கற்பனைகள் - ஆகியவற்றின் ஒட்டு மொத்த கலவையாக, தன்னைப் பற்றி பிறர் இழிவாகவும், தவறாகவும் பேசுகின்றனர் என்ற எண்ணத்தையும், ஒன்றைப் பற்றியே மிகத் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் தனித் தன்மைப் பண்புகளையும் கொண்டு, அத்தகைய சமூக சூழ்நிலையில் வளர்ந்தவர் அவர் என்பது தெளிவாகத் தெரிகிறது..  நாட்டுத் துரோகி என்றும்,  தீவிரவாதியாக மாறக் கூடியவர் என்றும் ஒவ்வொரு முசுலீமுக்கும் வண்ணம் தீட்டி,  இந்தியாவுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் சதி செய்கிறது என்ற கோட்பாட்டை அவர் தீர்மானமான குரலில் விவரித்தது இன்னும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. பேரதிர்ச்சி அடைந்த நிலையில் பேட்டியை முடித்துக் கொண்டு வெளியே வந்த நான், ஒரு ஃபாசிஸ்டுக்கான இலக்கணங்களை முழுமையாகப் பெற்றுள்ள ஒருவரை -  எதிர்காலத்தில் ஒரு பெரும் கூட்ட மான மக்கள் இனத்தையே அழிக்க வல்ல - தனது கொள்கைகளுக்காக எவரையும் கொல்லத் தயங்காத -  ஒருவரை இப்போதுதான் நான் சந்தித்திருக்கிறேன் என்று யாக்னிக் கிடம் கூறினேன். அண்மையில் பிரைம் டைம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்,  நாகரிகமற்ற ஒரு விலங்கு என்று நரேந்திர மோடியைப் பற்றி மற்றொரு சமூக அறிவியலாளர் சிவ. விஸ்வநாதன் கூறியிருந்தார்.

குஜராத்தைப் பற்றி பத்தாண்டு காலம் நான் ஆய்வு நடத்தி யிருப்பதால், அவரை மிருகம் என்று நான் கூறியதைப் பற்றி நான் நிச்சயமாக அறிந்துள் ளேன் என்பதை உறுதிப்படுத்து கிறேன்.  மோடியின் உடல் அசை வுகள் அவரது அகம்பாவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளன என்று அய்க்கிய ஜனதா கட்சித் தலைவர் சிவானந்த் திவாரி முன்பு கூறியிருக்கிறார். அண் மையில் (ராய்ட்டார் பேட்டி ஒன்றில் மோடி வக்கிரமாக கொலைவெறி எண்ணத்து டன் கூறிய குட்டே கா பச்சா என்று மோடி கூறிய பிறகு) மோடி மனநோய் மருத்துவர் ஒருவரைச் சென்று பார்த்து சிகிச்சை பெற வேண்டும் என்று திவாரி கூறினார். மோடியின் குணநலன்களைப் பற்றி அறிந்து கொள்ள அவரது உடல் அசை வுகள்,  அவரது மனநிலை ஆகியவை பற்றிய இவர்களின் கருத்துகளை நாம் நம்பத்தேவையில்லை; கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவரைப் பற்றி அறிந்து கொள்ள அவரது கடந்த கால நடத்தை பற்றிய பதிவுகளைப் பார்த்தாலே போதுமானதாகும்.

குஜராத் கலவரம் மாநில அரசினால் தூண்டிவிடப்பட்டது, மிகுந்த மதி நுட்பத் துடன் உயர்ந்த ஒரு நிலையில் திட்டமிடப் பட்டதாகும் என்று தெரிவிக்கும்,  மிகவும் நுணுக்கமாக  ஆவணப்படுத்தப்பட்டுள்ள  அறிக்கைகள் 45க்கு மேல் உள்ளன. பெரிய அளவிலான இந்த கலவரம் காவல்துறை மற்றும் உயர் அதிகார வர்க்கத்தினரால் கருத்துருவாக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டு, ரத்ததாகம் கொண்ட கலவரக் கும்பலாலும், பெண் களை வன்புணர்ச்சி செய்யும்  சங் பரிவார கும்பலாலும், மோடியின் அமைச்சர்களா லும், இந்துத்துவ தலைவர்களாலும் கள அளவில் செயல்படுத்தப் பட்டது.  இந்த ஆவணங்களில் தேசிய மனித உரிமைக் கழகத்தின் அறிக்கையும்,  புகழ் பெற்ற முன்னாள் நீதிபதிகள் அடங்கிய மக்கள் தீர்ப்பாயத்தின் பல தொகுப்புகள் கொண்ட அறிக்கைகளும் அடங்கும். மாநில அரசினால் திட்டமிட்டு தூண்டி விடப்பட்ட கலவரங்களில் பாதிக்கப்பட்ட  பில்குஸ் பானு, ஜாகிய ஜாஃப்ரி போன்ற பெண்கள் உள்ளிட்ட, எண்ணற்ற கலவர நிகழ்ச்சிகளை நேரில் கண்ட சாட்சியங் களும் உள்ளன.

ஜாகிய ஜஃப்ரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும், அவர் அளித்த சாட்சியங்களும், முன் வைத்த வாதங்களும் குஜராத் அரசுக்கும், கலவரக்காரர்களுக்கும் இடையே இருந்த நெருங்கிய தொடர்பினையும், வன்முறைச் சம்பவங்கள் துல்லியமாக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை என்பதை யும்  சுட்டிக் காட்டுகின்றன. மோடியையே கலவரத்துக்குக் காரண கர்த்தாவாகச் சுட்டிக் காட்டும் ஆதாரங்கள் பல உள் ளன. மாநில அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் நடைபெறுவ தற்கு முந்தைய நாள் அரசு உயர் அதி காரிகளின் கூட்டம் முதல்வர் மோடி வீட்டிலேயே நடத்தப்பட்டது ஒரு முக்கிய மான சான்றாகும். திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலை பற்றியும் அதன் பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகள் முகாம்களில் மனித நேயமற்ற சூழலில் பட்ட துன்பங்கள் பற்றியும் இதர ஆவணங்கள் விரிவாகக் கூறுகின்றன. கத்திகள் கொண்டு பெண்கள் வயிறுகள் கிழிக்கப்பட்டுள்ளன. பெரும் அளவிலான பெண்கள் கும்பல் கும்பலாக வன்முறையாளர்களால் வன் புணர்ச்சி செய்யப்பட்டனர்.  மண்ணெண் ணெய் நிரப்பப்பட்ட தீப்பெட்டிகள் குழந் தைகளின் வாய்களில் திணிக்கப்பட்டன.  பெண்களும், குழந்தைகளும் உயிருடன் எரிக்கப்பட்டனர். இவை அனைத்தும் பத்திரிகையாளர்கள், சமூகத் தொண் டர்கள், வழக்கறிஞர்கள், கண்ணால் கண்ட சாட்சிகள், அதிகாரிகள், திரைப் படத் தயாரிப்பாளர்கள் மற்றும் பலராலும்  முறையாகயும், விரிவாகவும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.

முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான ஹர்ஷ் மந்தர் 2002 மார்ச் 19 அன்று அவுட்லுக் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட் டுள்ளார்:

அவர்களிடமிருந்து  கேட்ட செய் திகள் மற்றும்  நேரில் கண்ட நிகழ்ச்சி களில் ஒரு சிலவற்றையாவது கட்டாயமாக எழுதவேண்டும் என்று எனக்கு நானே தீர்மானித்துக் கொண்டேன்.  இவற்றைப் பற்றியெல்லாம் நாமெல்லோரும் அறிந்து கொள்வது முக்கியம் என்பதே இதன் கார ணம்.  அத்துடன், எனது மனச் சுமையை இதன் மூலம் நான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இயலக்கூடும்.

தன்னைக் கொல்லாமல் விட்டு விடும் படி 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருத்தி  மன்றாடியதைப் பற்றியும், ஆனால் அவளைத் தாக்கியவர்கள், அவளது வயிற்றினைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்து, அவளது கண் முன்னாலேயே அதனை வெட்டிக் கொன்றதைப் பற்றியும் உங்களால் என்ன கூற இயலும்? 19 பேர் வாழ்ந்து வந்த ஒரு வீட்டிற்குள் தண்ணீரை நிரப்பி,  அதில் மின்சாரம் பாய்ச்சி அவர் களைக் கொன்றதைப் பற்றி உங்களால் என்ன கூற இயலும்?

தனது தாயையும், தனது 6 சகோதர சகோதரிகளையும் தன் கண் முன்னாலேயே வெட்டிக் கொலை செய்ததைப் பற்றி ஜூஹாபுரா முகாமில் இருந்த ஆறு வயது சிறுவன் ஒருவன் கூறியதைப் பற்றி உங் களால் என்ன கூற இயலும்? அவன் தாக்கப்பட்டபோது மயங்கி விழுந்துவிட்டதால், அவன் இறந்து விட்டான் என்று நம்பி கலவரக் காரர்கள் விட்டு விட்டுச் சென்றதால் அச்சிறுவன் உயிர் தப்பினான். கலவரத்தால் மிகமிக மோசமாக பாதிக்கப்பட்ட அஹமதாபாதின் நரோடா-பாடியா குடியிருப்பில் இருந்து தப்பி ஓடிய ஒரு குடும்பத்தினர், எவ்வாறு ஒரு இளம்பெண்ணும் அவளது மூன்று மாதக் குழந்தையும் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளனர். அவளை ஒரு காவலர் பாதுகாப்பான இடம் என்று கூறி அனுப்பி வைத்த இடத்தில் ஒரு கலவரக் கும்பலால் அவளும் அவளது குழந்தையும் மண்ணெண்ணெய் ஊற்றி எவ்வாறு எரிக்கப்பட்டனர் என்பதை அவர்கள் கூறியுள்ளனர்.

குஜராத்தில் ஒட்டு மொத்தமாக நடந்தேறிய காட்டாண்டி செயல்களில், பெண்களின் மீதான பாலியல் வன் கொடுமையை  ஒரு வன்முறைக் கருவி யாகவே  பரவலாக பயன்படுத்தியதைப் போன்று, இதற்கு முன் நடந்தேறிய எந்த  ஒரு கலவரத்திலும் நடந்ததாக  இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை.

இளம்பெண்களும், முதிர்பெண் களும் கூட்டங் கூட்டமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டது பற்றிய அறிக்கைகள் எல்லா இடங்களில் இருந்தும் வந்து கொண் டேயிருந்தன. இப்பெண்கள் எல்லாம் அவர்களது குடும்பத்து ஆண்களின் கண் முன் னாலேயே பாலியல் வன்முறை செய்து பின்னர்  மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தோ அல்லது சம்மட்டியால் அடித்தோ கொல்லப்பட்டுள்ளனர்; ஓரிடத்தில் ஒரு ஸ்க்ரூ டிரைவராலேயே ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார்.

அச்சத்தினால் பீதியடைந்திருந்த பெண்களை மேலும்  அச்சுறுத்துவதற் காகவே,   அவர்களின் கண் முன்னா லேயே, ஆயுதம் ஏந்திய கலவரக்கார ஆண்கள் தங்களை நிர்வாணப்படுத் திக் கொண்டனர் என்ற செய்தியை ஆமன் சவுக் முகாமில் இருந்த பெண் கள் கூறினர்.

அஹமதாபாத்தில் நான் சந்தித்த - சமூகப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், கலவரத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் - ஆகிய மக்களில் பெரும்பாலோர், குஜராத்தில் நடந்தது கலவரமே அல்ல என்பதையும், நன்கு திட்டமிடப்பட்ட ஒரு தீவிரவாத இனப் படுகொலையே அது என்பதையும் ஒப்புக் கொண்டனர்.  ஒரு வெளிநாட்டு எதிரியின் படை மீது நடத்தப்படும் ராணுவத் தாக்குதல் போன்று நன்கு திட்டமிடப்பட்டு நடத் தப்பட்ட படுகொலை, கொள்ளையைப் பற்றியே ஒவ்வொருவரும் பேசிக் கொண்டனர்.



- (நன்றி: கின்டில் ஆகஸ்ட் 15, 2013)

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

(தொடரும்)

Read more: http://www.viduthalai.in/page-2/72516-modi.html#ixzz2oeWiyeAs

மோடிக்குப் புதுப் பதவி: எச்சரிக்கை! (2)

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து, அதனை சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிட்ட மாபாதகத்தைச் செய்தவர் குஜராத் முதல் அமைச்சராக இருந்த நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி;  அவசர அவசரமாக அதிகாரிகளை அழைத்து - சிறுபான்மை யினருக்கு எதிரான வன்முறைகளைத் தூண்ட உத்தரவு பிறப்பித்தார் என்று காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்ல, மோடியின் அமைச்சர வையில் முக்கிய அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவும் கூறினார். அவர் சாட்சியாக மாறி விடுவார் என்று அஞ்சி அந்த அமைச்சரே படுகொலை செய்யப்பட்டார் மோடி ஆட்சியில். என் மகன் படுகொலைக்குக் காரணம் மோடிதான் என்று ஹரேன் பாண்டியாவின் தந்தை பகிங்கரமாகவே நானாவதி ஆணையத்தின்முன் சொல்லவில்லையா?

குஜராத் கலவர வழக்குகள் 4252; அவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், உச்சநீதிமன் றத்தின் ஆணையின்படி அல்லவா  அவை மீண்டும் உயிர் பெற்றன.

மோடியின் காவல்துறையினர் முதல் குற்றப் பத்திரிகையில் எப்படி வழக்கைப் பதிவு செய்தனர்? நரோடா பாட்டியாவில் நடைபெற்ற படுகொலை தொடர்பான வழக்கில் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம் பெறுகின்றன.

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்கிற வன் முறைக்குப் பதில் தரும் வகையில் இந்த வன்முறை நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் இதன் பொருள் என்ன? குற்றப் பத்திரிகையிலேயே தீர்ப்பை எழுதி விட்டனர் என்பதுதானே!

நரோடா பாட்டியா என்னும் ஒரே இடத்தில் மட்டும் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்துக் கருவைத் தீயில் தூக்கி எறிந்து - அந்தக் காட்சியைக் கண்டு குதூகலித்தனர். இந்தக் காட்டுமிராண்டித்தன படுகொலைகளுக் குத் தலைமை வகித்தவர் மோடி அரசின் முக்கிய அமைச்சராக இருந்த 55 வயது நிறைந்த ஒரு பெண்மணி - மாயாகோட்னானி - இவ்வளவுக்கும் இவர் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பது வெட்கக் கேடு!

இந்த வழக்கு ஒன்றும் இல்லாமல் குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கும். உச்சநீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation) வை அமைத்ததால் தான் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டனர்.

மோடி அரசின் பெண் அமைச்சர் மாயாகோட் னானிக்கு 28 ஆண்டுகள் தண்டனை; பஜ்ரங்தள் என்ற அமைப்பின் குஜராத் மாநிலத் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வாழ்நாள் முழுவதும்; 8 பேருக்கு 31 ஆண்டுகள் தண்டனை. மேலும் 22 பேர்களுக்கு 24 ஆண்டுத் தண்டனை; இந்தத் தண்டனையை வழங்கிய நீதிபதி ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் பெயர் ஜோத் சனாயாக்னிக்.

தீர்ப்பில் அந்த நீதிபதி சொன்ன வாசகங்கள் மிக மிக முக்கியமானவை; குஜராத் வன்முறை இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். நரோடாபாட்டியா படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு நியாயமாக தூக்குத் தண்டனை யைத்தான் வழங்கிட வேண்டும். உலகெங்கும் தூக்குத் தண்டனைக்கு எதிரான குரல் கிளம்பு வதால் ஆயுள் தண்டனையைக் கொடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாரே.

இன்னொரு அதிர்ச்சியான தகவல், நீதிபதி நானாவதி ஆணையத்தின்முன்  குஜராத் - மோடி அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது என்ன தெரியுமா? 2007ஆம் ஆண்டிலேயே ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன என்பதுதான்.

இவையெல்லாம் ஜனநாயக நாடு என்னும் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் நடந்ததுதான். மற்றொரு மானம் கப்பலேறும் தகவல், நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் - குஜராத் கலவரம் தொடர்பாக பொது நல வழக்கினைத் தொடர்ந்த வழக்குரைஞரான அவர் கூறுகிறார்.

நான் ஏற்பாடு செய்திருந்த வழக்குரைஞர் களுக்கு மோடி காவல்துறையினர் மூலம்  பணம் கொடுத்துச் சரி கட்ட முயற்சித்தார் என்று கூறியுள்ளார்  - மோடியின் சீழ் பிடித்த புத்திக்கு இது ஓர்  எடுத்துக்காட்டாகும்.

குஜராத் மாநிலத்தில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் 287; அதில் 286 பேர் முஸ்லிம்கள், மற்றொருவர் சீக்கியர்.

எப்படி இருக்கிறது நியாயம்? படுகொலைக்கு ஆளான மக்களைச் சேர்ந்தவர்களைக் கைது செய்வதும், படுகொலைக்குக் காரணமானவர் களுக்கு மாப்பிள்ளை ஊர்வலம் நடத்துவதும்தான் மோடியின் தனிப் பாணி; இவர்தான் இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளராம்; சொல்லுகிறது பிஜேபி - இந்துத்துவா கும்பல். வெகு மக்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://www.viduthalai.in/page1/62059.html#ixzz2oeUtJwft