கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து, அதனை சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிட்ட மாபாதகத்தைச் செய்தவர் குஜராத் முதல் அமைச்சராக இருந்த நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி; அவசர அவசரமாக அதிகாரிகளை அழைத்து - சிறுபான்மை யினருக்கு எதிரான வன்முறைகளைத் தூண்ட உத்தரவு பிறப்பித்தார் என்று காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்ல, மோடியின் அமைச்சர வையில் முக்கிய அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவும் கூறினார். அவர் சாட்சியாக மாறி விடுவார் என்று அஞ்சி அந்த அமைச்சரே படுகொலை செய்யப்பட்டார் மோடி ஆட்சியில். என் மகன் படுகொலைக்குக் காரணம் மோடிதான் என்று ஹரேன் பாண்டியாவின் தந்தை பகிங்கரமாகவே நானாவதி ஆணையத்தின்முன் சொல்லவில்லையா?
குஜராத் கலவர வழக்குகள் 4252; அவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், உச்சநீதிமன் றத்தின் ஆணையின்படி அல்லவா அவை மீண்டும் உயிர் பெற்றன.
மோடியின் காவல்துறையினர் முதல் குற்றப் பத்திரிகையில் எப்படி வழக்கைப் பதிவு செய்தனர்? நரோடா பாட்டியாவில் நடைபெற்ற படுகொலை தொடர்பான வழக்கில் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம் பெறுகின்றன.
கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்கிற வன் முறைக்குப் பதில் தரும் வகையில் இந்த வன்முறை நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் இதன் பொருள் என்ன? குற்றப் பத்திரிகையிலேயே தீர்ப்பை எழுதி விட்டனர் என்பதுதானே!
நரோடா பாட்டியா என்னும் ஒரே இடத்தில் மட்டும் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்துக் கருவைத் தீயில் தூக்கி எறிந்து - அந்தக் காட்சியைக் கண்டு குதூகலித்தனர். இந்தக் காட்டுமிராண்டித்தன படுகொலைகளுக் குத் தலைமை வகித்தவர் மோடி அரசின் முக்கிய அமைச்சராக இருந்த 55 வயது நிறைந்த ஒரு பெண்மணி - மாயாகோட்னானி - இவ்வளவுக்கும் இவர் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பது வெட்கக் கேடு!
இந்த வழக்கு ஒன்றும் இல்லாமல் குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கும். உச்சநீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation) வை அமைத்ததால் தான் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டனர்.
மோடி அரசின் பெண் அமைச்சர் மாயாகோட் னானிக்கு 28 ஆண்டுகள் தண்டனை; பஜ்ரங்தள் என்ற அமைப்பின் குஜராத் மாநிலத் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வாழ்நாள் முழுவதும்; 8 பேருக்கு 31 ஆண்டுகள் தண்டனை. மேலும் 22 பேர்களுக்கு 24 ஆண்டுத் தண்டனை; இந்தத் தண்டனையை வழங்கிய நீதிபதி ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் பெயர் ஜோத் சனாயாக்னிக்.
தீர்ப்பில் அந்த நீதிபதி சொன்ன வாசகங்கள் மிக மிக முக்கியமானவை; குஜராத் வன்முறை இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். நரோடாபாட்டியா படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு நியாயமாக தூக்குத் தண்டனை யைத்தான் வழங்கிட வேண்டும். உலகெங்கும் தூக்குத் தண்டனைக்கு எதிரான குரல் கிளம்பு வதால் ஆயுள் தண்டனையைக் கொடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாரே.
இன்னொரு அதிர்ச்சியான தகவல், நீதிபதி நானாவதி ஆணையத்தின்முன் குஜராத் - மோடி அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது என்ன தெரியுமா? 2007ஆம் ஆண்டிலேயே ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன என்பதுதான்.
இவையெல்லாம் ஜனநாயக நாடு என்னும் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் நடந்ததுதான். மற்றொரு மானம் கப்பலேறும் தகவல், நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் - குஜராத் கலவரம் தொடர்பாக பொது நல வழக்கினைத் தொடர்ந்த வழக்குரைஞரான அவர் கூறுகிறார்.
நான் ஏற்பாடு செய்திருந்த வழக்குரைஞர் களுக்கு மோடி காவல்துறையினர் மூலம் பணம் கொடுத்துச் சரி கட்ட முயற்சித்தார் என்று கூறியுள்ளார் - மோடியின் சீழ் பிடித்த புத்திக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
குஜராத் மாநிலத்தில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் 287; அதில் 286 பேர் முஸ்லிம்கள், மற்றொருவர் சீக்கியர்.
எப்படி இருக்கிறது நியாயம்? படுகொலைக்கு ஆளான மக்களைச் சேர்ந்தவர்களைக் கைது செய்வதும், படுகொலைக்குக் காரணமானவர் களுக்கு மாப்பிள்ளை ஊர்வலம் நடத்துவதும்தான் மோடியின் தனிப் பாணி; இவர்தான் இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளராம்; சொல்லுகிறது பிஜேபி - இந்துத்துவா கும்பல். வெகு மக்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!
Read more: http://www.viduthalai.in/page1/62059.html#ixzz2oeUtJwft

No comments:
Post a Comment