மோடியின் பித்தலாட்டத்தைத் தோலுரித்துக் காட்டினார் பேராசிரியர் சுப.வீ.
சென்னை, அக். 24- சீனாவில் ஷாங்காங்கில்
நவீன முறையில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை மோடி, குஜராத் மாநிலம், அகமதா
பாத்தில் கட்டியிருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்வதை தோலுரித்துக்
காட்டினார் பேராசிரியர் சுப.வீர பாண்டியன்.
சென்னை பெரியார் திடலில் 22.10.2013 அன்று
திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில்
உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:-
ஊரில் எல்லோரும் சட்டசபைத் தேர்தலைப்
பற்றிப் பேசிக் கொண் டிருக்கும் இந்த நேரத்தில் சென்னை - பெரியார் திடலில்
திராவிடர் கழகத் தின் சார்பில் ஜாதிய சக்திகள், மதவாத சக்திகளைப் பற்றிப்
பேசிக் கொண் டிருக்கிறோம்.
தாழ்த்தப்பட்டவர்களை எதிர்ப் பது, காதல் திருமணத்தை எதிர்ப்பது என்பது ஜாதிய கட்சிக் கூட்டணி யின் கருத்து.
மதவாத கட்சியின் நோக்கம்
மதவாதக் கூட்டணிகளுக்கு இரு கொள்கைகள். ஒன்று சிறுபான்மை யினர் எதிர்ப்பு - இன்னொன்று மதச் சார்பின்மை எதிர்ப்பு!
நாடகக் காதல் என்ற புதுவார்த் தைகளை
அறிமுகப்படுத்தியுள்ளார் கள். இளைஞர்கள் இருக்கும் வரை காதலும் இருக்கும்.
காதலை எதிர்க்க முடியாது. காதலை எதிர்க்கும் சினிமா கூட தமிழ்நாட்டில்
ஓடுவதில்லை - திரைக்கு வந்த வேகத்தில் காணாமல் போய்விடுகிறது.
ஜப்பான் நாட்டில் காதலுக்காகவே 17 இதழ்கள் வெளிவருகின்றன.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்
அடுத்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற ஒன்றை ஜாதி கூட்டணிக்காரர்கள் முன் வைத்துள்ளனர்.
இந்தச் சட்டத்தை மேலும் வலு உள்ளதாக ஆக்க
வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை. இந்தச் சட்டத் தின்மூலம் வெறும் 2
சதவிகிதம் பேர் தான் தண்டிக்கப்படுகின்றனர். அந்த ஓட்டை சரி செய்யப்பட
வேண்டும் என்பதுதான் முக்கியம்.
இந்தச் சட்டத்தைத் திருத்துவதோ, மாற்றுவதோ
மாநில அரசின் கையில் இல்லை. மத்திய அரசுதான் அதனைச் செய்யவேண்டும்.
திராவிட இயக்க எதிர்ப்பை முன் வைக்கிறார்கள். திராவிடர் என்றால் - தமிழ்
நாட்டில் பார்ப்பனர் எதிர்ப்பு என்பதன் குறியீடு!
யாரை ஆதரிப்பது - யாரை எதிர்ப்பது!
யார் ஆதிக்கம் செலுத்துகிறார் களோ அவர்களை
எதிர்ப்பது - யார் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்களோ, அவர்களை ஆதரிப்பது
என்பது நமது கொள்கை. முதலில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மோடி திருச்சி வந்தார். எந்தக் கொள்கையைப்
பிரகடனம் செய்தார்? தி.மு.க. - அஇஅதிமுக மீது ஏன் எந்த வித
விமர்சனத்தையும் அவர் வைக்க வில்லை?
மொழிவாரி மாநிலமே கூடாதாம்!
அங்கு என்னதான் பேசினார்? மொழி வாரியாக
மாநிலங்களைப் பிரித்தது தவறு என்கிறார். இந்தியா ஒரே நாடு, ஒரே பண்பாடு
என்கிறார். கேரளாவிலும் வங்காளத்திலும் ஒரே பண்பாடு தான் நிலவுகிறதா?
நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், தான் எழுதிய நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு.
அந்தத் தன்மை, சிறப்பு அழிக்கப் பட்டால், இந்தியா முழுமையும் கல வரங்கள்
நடக்கும் என்று குறிப் பிட்டுள்ளாரே!
1926இல் வங்காளத்தில் முஸ்லீம் கள் வாங்கு சத்தம் கூடாது என்று தடை போட்டதால் பெரும் கலவரம் ஏற்படவில்லையா?
மோடியை பற்றி மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்யகிறார்கள். கோயபெல்ஸ் பிரச்சாரம்.
மோடி பெரிய சாதனையாளர் என்று ஒரு படத்தை வெளியிடுகிறார்கள்.
பார்ப்பதற்கு ஆச்சரியப்படும் அள வுக்கு
உருவாக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் - அகமதாபாத்தில் மோடி
உருவாக்கியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
முகநூலில் நமது தம்பிகள் தேடி - அது
சீனாவில். ஷாங்காங் நகரில் உள்ள பேருந்து நிலையம் என்று கண்டுபிடித்து
வெளியிட்டு விட்டனர். மோடி என்றாலே மோசடி - மோடி மஸ்தான் பேர்வழி என்பதை
உணர வேண்டும். இணைய தளங்களில் நம் இளை ஞர்கள் இப்பொழுதுதான் நுழைய
ஆரம்பித்துள்ளன.ர் பெரியார் வலை தளம் ஒரு துவக்கத்தைக் கொடுத்தது 40 ஆயிரம்
இளைஞர்கள் இப்பொழுது திமுக இணைய தளத்தில் இணைந்து உள்ளனர் என்பது நல்ல
செய்தி.
பொய்யைப் பரப்பியே ஆட்சி யைப் பிடித்து விடலாம் என்று மனப் பால் குடிக்கிறார்கள்.
காவிகளின் ஜம்பம் கருஞ்சட்டைகளிடம் பலிக்காது
காவிகளின் ஜம்பம் தமிழ்நாட்டில் எடுபடாது. அவர்களைச் சந்திக்கும் சக்தி கருஞ்சட்டைப் பட்டாளத்துக் குத்தான் உண்டு.
தேநீர்க் கடையில் வேலை பார்த்து, அதற்குப்
பின் சைக்கிள் கடையில் வேலை பார்த்த ஆசாமி ஒருவர். குறுக்கு வழியில் பணம்
சேர்க்க பெரிய மனுசனாக ஒரு வழி சாமியார் ஆவது தான், ஆசிரமம் அமைப்பதுதான்
என்று முடிவு செய்து மத்தியப் பிரதே சத்தில் ஆசிரமம் ஒன்றை ஆரம் பித்தார்
ஆசாராம்.
இன்றைக்கு அவருக்கு இருக்கும் சொத்து 5000 கோடி ரூபாய்; இந்தியா முழுமையும் 426 ஆசிரமங்கள் 1400 யோகா நிலையங்கள்.
புலால் உண்டால், காமக் கிளர்ச்சி ஏற்படும்
என்று கீதோபதேசம் செய் கிறார். அப்படி சொன்னவர்தான், ஒரு பெண்ணைப் பாலியல்
வன்முறை செய்த வழக்கில் சிறைக்குள் இருக் கிறார்.
மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவை!
மும்பையிலே நரேந்திர தபோல்கர் சமூக
சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட் டுக் கொண்டிருந்தார். இரு இந்துத்
துவாவாதிகள் அவரைச் சுட்டுக் கொன்று இருக்கின்றனர். அதற்குப் பின் அங்கு
ஒரு சட்டம், மூடநம் பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்றப் பட்டுள்ளது. 2005இல்
முன்மொழியப்பட்டது.
2013இல்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதுவும் ஒரு சமூக சீர்திருத்தவாதியின் உயிரை இந்துத்துவாவாதிகள் குடித்த
பிறகு தான் இது நிறைவேற்றப்படு வது. இதுபோன்ற ஒரு சட்டத்தை மத்திய அரசு
கொண்டு வர வேண்டும். எது எதற்கெல் லாமோ அவசரச் சட்டம் கொண்டு வருபவர்கள்,
இந்த அவசிய மான அவசரமான தேவைக்கு ஓர் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று
கூறினார்.
No comments:
Post a Comment