Tuesday, 5 November 2013

போலிக் கண்ணீர் மோடி

பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி, அக்டோபர் 27ஆம் தேதி பாட்னாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார். அப்பொழுது நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்பில் ஆறு பேர் பலியா னார்கள், 83 பேர் காயம் அடைந்தார்கள்.

அந்த வன்முறை கண்டிக்கத்தக்கதே;  காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் அதனைக் கண்டிக்கவே செய்தன.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, அந்தச் சம்பவம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை; கண்டனம் தெரிவிக்கவில்லை; பலியானவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துக் கூடப் பேசவில்லை.

இப்பொழுது அவருக்கு மனதில் ஆறாத் துயரம் வெடித்துக் கிளம்பி, அதிலிருந்து விடு படவே முடியாத ஆற்றாமையால், பீகார் மாநிலத் திற்கு ஓடோடிச் சென்று, இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பொதுவாகப் பார்ப்பவர்களுக்கு - நல்ல அணுகுமுறைதானே - மனிதத் தன்மை என்பது இதுதானே என்று தோன்றக் கூடும்.

அதே நேரத்தில் மோடியைப் பற்றிய முழு வடிவத்தைத் தெரிந்தவர்களுக்கு, இது சுத்த நடிப்பு - அரசியல் பாசாங்குதனம் - பொது மக் களை ஏமாற்ற வடிக்கும் கிளிசரின் கண்ணீர் என்பதை, எளிதிற் புரிந்து கொள்ளலாம்!

குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்ட தற்கு மூலகாரணமாக இருந்தவர் முதலமைச்சர் மோடி என்பது உலகத்துக்கே தெரிந்த உண்மை.

மூன்று நாட்கள் காவல் துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலுக்கும் முழு உரிமை கொடுத்து, சிறுபான்மையினரை வேட்டையாடி முடியுங்கள் -  காவல்துறை உங்களைக் கண்டு கொள்ளாது என்று உத்தரவிட்ட புண்ணிய வான் இந்த மோடியல்லவா!

கருவுற்ற பெண்களைக்கூட குத்திக் குடலைக் கிழித்து சிசுவை நெருப்பில் தூக்கிப் போட்டு கும்மாளம் போட்ட காட்டு விலங் காண்டிகளை இதற்கு முன் உலகம் கண்ட துண்டா? இந்த அருவருப்பான சாதனை மோடி அரசில்தான் நிகழ்த்தப்பட்டது.

அதனால்தான் உச்சநீதிமன்ற நீதிபதி, மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டார் என்பதை மறந்து விடக் கூடாது.

குஜராத்தில் நடைபெற்ற இனப்படு கொலைக்கு, நியாயமாக பொறுப்பேற்று முதல் அமைச்சர் மோடி பதவி விலகி இருக்க வேண்டாமா?

குறைந்தபட்சம், வருத்தமாவது தெரிவித் திருக்க வேண்டாமா? மாறாக என்ன சொல்லு கிறார்? காரில் பயணம் செய்யும் போது நாய்க் குட்டி அடிபடும் பொழுது ஏற்படும் அளவுக்கு வருத்தப்படுவதாகச் சொல்லுகிறார் என்றால், அவரைப் பற்றிய மதிப்பீட்டைப் புரிந்து கொள்ளலாம்.

சொந்த வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் முடங்கிக் கிடந்த சிறுபான்மை மக்கள் இனவிருத்தி வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்று பேசிய மிகப் பெரிய நாகரிகத்துக்குச் சொந்தக்காரர் இவர்.

தனக்குப் பிடிக்காதவர், சொந்த கட்சியில் இருந்தாலும், போட்டுத் தள்ளக் கூடியவர்; (எடுத்துக்காட்டு அமைச்சர் ஹரேன் பாண் டியா)

தன்னை நம்பி இருந்த அதிகாரிகளைக்கூட தன்மீது பழி வரக் கூடாது என்பதற்காகக், காட்டிக் கொடுத்த கண்ணியவான் இந்த மோடி.

இப்படிப்பட்ட ஒருவர், குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்காக, நேரில் சென்றார்; கண்ணீர் மல்கினார் என்ற செய்தியைப் படிக்கும் பொழுது, சிரிப்புதான் வருகிறது.

தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றிடவும், கடந்த காலத்தில் அவர்மீதுவிழுந்த மரண வியாபாரி என்ற முத்திரை சாயத்தைக் கழுவிக் கொள்ளவும், இப்படியெல்லாம் நாடகம் ஆடு கிறார் என்பதைப் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment