Thursday, 20 March 2014

ஆர்.எஸ்.எஸ்.-இன் இரட்டை வேடம்


மும்பை பிவாண்டி பகுதியில் பேசிய ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் காந்தியை சுட்டுக் கொன்றது. ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள் கையைத்தான் பிஜேபி ஏற்றுக்கொண் டுள்ளது. சர்தார் படேல், ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக இருந்தவர். ஆனால், இன்று, காந்தியாரையும், சர்தார் படே லையும் பிஜேபி கொண்டாடுவதாக சொல்கிறது என பேசினார்.

உடன், ஆர்.எஸ்.எஸ். தனது எதிர்ப்பை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கிறது; சட்ட ரீதியாக நடவ டிக்கை எடுக்கும் என சொல்கிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் பற்றி இப்போது புகழ் பாடுகிறார் மோடி. அவருக்கு மிக உயரமான சிலையை அமைத்திட நாடு முழுவதும் இரும்பு திரட்டுகிறார். மோடியின் இந்த செயலை பாஜக ஆதரிக்கிறது. பல்லாயிரம் கோடியில் ஊடகங்களில் விளம்பரம் செய்கிறது.

காந்தியார் சுடப்பட்ட நிலையில், 1948-இல் உள்துறை அமைச்சராக இருந்தவர் சர்தார் படேல். அவர் ஆர்.எஸ்.எஸ் பற்றி என்ன கருத்தை தெரிவித்தார்? ஆர்.எஸ்.எஸ்-இன் நடவ டிக்கைகள் அரசுக்கும் நாட்டிற்கும் மிகப் பெரிய எச்சரிக்கையாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ்-இன் இந்த விஷத் தன்மையான விளைவினால், காந்தியா ரின் விலை மதிப்பில்லா உயிரை இழந்து நாடு அவதிப்பட காரணமா யிற்று.

காந்தியார் கொல்லப்பட்டதற்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். என சர்தார் படேல் கருத்து தெரிவித்தார். பின் அவரது உள்துறை அமைச்சக ஆணையின்படி தான் 5.2.1948-இல் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது.

நாட்டில் வெறுப்பும், வன்முறையும் முற்றிலுமாக வேரறுக்க ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது என தடை ஆணையில் விளக்கமும் அளிக்கப் பட்டது. காந்தியாரைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.-இன் விஷ விளைவு என சொன்னவர் சர்தார் படேல்; ஆர்.எஸ். எஸை தடை செய்தவர் சர்தார் படேல். இந்த கருத்தைத் தான் ராகுல் காந்தி தற்போது நினைவு படுத்தி உள்ளார்.

ராகுல் காந்தி மீது கோபப்படும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள், ராகுல் சொன்ன காரணத்தை உறுதிப்படுத்திய சர்தார் படேல் மீது தான் கோபப்பட வேண்டும்; அவமதிப்பு வழக்கு போட வேண்டும்.

ஆனால், மக்கள் இந்த வரலாற்றையெல்லாம் மறந்தி ருப்பார்கள் என நினைத்து, இன்றைக்கு படேலுக்கு சிலை வைக்க முயல்வ தும், படேல் சொன்ன காரணத்தை நினைவு படுத்திய ராகுல் காந்தி மீது வன்மம் காட்டுவதும், வழக்கம் போல், ஆர்.எஸ்.எஸ்-இன் இரட்டை வேடத்தைத் தான் அம்பலப்படுத்து கிறது.

- - குடந்தை கருணா

ஜாதி இந்தியா எப்படி முன்னேறும்?

நான் மோடியைக் கவனிப்பவன், என் தந்தை ஆடுகளைக் கவனித்ததைப்போல! நரேந்திர மோடி, தேசியப் பத்திரிகை களில் முழுப்பக்க விளம்பரங்கள் தந்தும், தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத் தியும் மிகப்பெரிய பிரச்சார இயக்கம் ஒன்றினை அண்மையில் நடத்தினார். அவர் தந்த தலைப்பு முதலில் இந்தியா என்பது. அவருடைய விளம்பரங்கள் மோடியின் குஜராத் (கவனியுங்கள், இந்தியா அல்ல) தான் தொடக்கமாம்! மாற்றங்களை ஏற்படுத்தியதாம்! நிறை வேற்றி முடித்ததாம்!

2004 தேர்தலின்பேதது பா.ஜ.க. இந்தியா ஒளிர்கிறது எனச் சொன்னது. இப்போதோ, குஜராத் மட்டும் ஒளிர் கிறதாம்! முதலில் இந்தியா இயக்கத்தை அடுத்து மோடியின் மற்றுமொரு இயக்கம், சாய்லே சார்ச்சா என்பது தேநீர் விருந்தாம்!

முதலில் இந்தியா என்பதும் தேநீர் விருந்து என்பதும் சுய முரண்பாடுகளைக் கொண்டவை! உலகம் முழுக்கப் பருகப் படும் தேநீரையும் குஜராத்தின் மாற்றத் திற்கான முயற்சிக்கான வரலாற்றையும் இணைத்துப் பார்த்தால் முரண்கள் புரியும். முதலில் இந்தியா எனும் கருத்து, குஜராத் மாநிலத்தைப் போல இந்திய நாடு வளரவேண்டும் என்பதை உணர்த்துகிறது.

தேநீரை பா.ஜ.க தேர்ந்தெடுத்ததைப் பார்த்தால் அவர்களது பரிதாப நிலை நன்கு விளங்கும். கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாதது! மோடியின் புதிய முயற்சிகள், அதன் விளைவுகள் என்பவற் றிற்கும் தேநீருக்கும் கொஞ்சமும் பொருத்தமே கிடையாதே! ஏன் என்றால் தேநீர் (சாய்) சீனாவில் கண்டறியப்பட்டது. அது இந்துத்வவாதிகளின் எதிரி நாடு!

இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டிஷாரால் இந்நாட்டிற்கு வந்தது சாய்! தகவல் களஞ்சியமான விக்கி பீடியா பதிவுகளின்படி தேநீரின் வரலாறு நீண்ட நெடியது, பல்வேறு கலாச்சாரங்களிடையே பரவிப்பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவிவருவது.

சீனாவின் யுன்னான் பகுதியில் ஷாங் வம்சம் ஆண்ட காலத்தில் (கி.மு. 1500 முதல் 1046 வரை) மருத்துவ குணம் கொண்ட பானமாகத் தோன்றியது. ஹீவா டோ என்பார் எழுதிய மருத்துவ நூலில் இதுபற்றிய தகவல் காணப்படுகிறது. 16-ஆம் நூற்றாண்டில்தான் சீனாவுக்கு வந்த போர்த்துகல் நாட்டுப் பாதிரியார்களுக்கும், வணிகர்களுக்கும் தேநீர் வழங்கப்பட்டது.

17-ஆம் நூற்றாண்டில் தேநீர் குடிப்பது பிரிட்டனில் பிரபலமானது. பிரிட்டிஷார் தான், தேநீர் குடிப்பதையும் பயிரிடுவதை யும் இந்தியாவில் அறிமுகப்படுத்தினார் கள். அதன் மூலம் சீனாவின் ஏகபோகத் திற்கு இடையூறை ஏற்படுத்தினார்கள்.

எனவே தேநீர் உலகம் முழுமைக்கு மானது. பா.ஜ.கட்சியின் கலாச்சாரத் தேசி யம் என்பது பன்முகக் கலாச்சாரத்திற்கு எதிரானது! ஆனால் இப்பன்முகக் கலாச்சார வாயிலாகத்தான் தேநீரே இந்தி யாவுக்கு வந்தது! அந்நிய தேநீரை இந்தியாவில் ஏற்றுக்கொள்ளும் பா.ஜ.க., அந்நிய மதங்களான இசுலாத்தையோ, கிறித்துவத்தையோ இந்தியாவில் ஏற்றுக் கொள்வதில்லை!

தேநீரைப்போலவே மதங்களும் பல்வேறு கலாச்சாரங்களின் ஊடே பயணித்துதான் மாற்றம் பெற் றுள்ளன. இந்தியாவின் சாய்வாலாக்கள் (தேநீர் விற்பவர்கள்) அந்த மதங்களைச் சேர்ந்தவர்களே!

விக்கிபீடியாவில் இடம் பெறும் அளவுக்கு குஜராத் ஒன்றையும் கண்டு பிடிக்கவில்லை, வளர்க்கவும் இல்லை. இந்தியா (குஜராத்தும் இதில் அடக்கம் தான்) கண்டுபிடித்த ஒன்றே ஒன்று! ஜாதிமுறை மட்டுமே!

சீனா, அய்ரோப்பா, அமெரிக்கா கண்டத்து நாடுகளின் மக்களைப் போல புதியவற்றைக் கண்டு பிடிக்கும் ஆற்றலுக்குப் பெரும் தடையாக இருப்பதே இந்த ஜாதி அமைப்பு தான்!

ஆர்எஸ்எஸ்ம், சுதேசி  ஜாக்ரான் மஞ்ச்சும் தூக்கிப் பிடிக்கும் மோடியின் இயக்கங்கள் எதுவும் பொருளாதார மேம் பாட்டுக்கான எதைப்பற்றியும் குறிப் பிடுவதே கிடையாது.

முதலில் இந்தியா எனப்பேசும் மோடி இந்தியாவில் ஜாதி முறையும் தீண்டத் தகாத மனிதர்களும் இருக்கும்வரை, இத்தகைய கொடும்நோய்களுக்கான தீர்வு முறையைத் தம் உரைகளில் குறிப் பிடாமல் இருக்கும்வரை, வளர்ச்சி என்பதே கானல் நீர்தான்!

நான் சொல்வது தவறு என்றால், மோடியில் சிந்தனைக் கண்களாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், 12 ஆண்டுகளாக அவர் ஆட்சி நடத்தும் குஜராத் மாநிலத்தில், உல கத்தின் அறிவியல் துறைக்குக் குஜராத் தின் பங்களிப்பு இது என எதையாவது காட்ட முடியுமா?

மோடியின் சிந்தனைக் கண்களாக இருப்பவர்கள் ஒன்றை உணரவேண்டும் குஜராத் சமூகம் மிகவும் மூடநம்பிக்கை யில் உள்ள சமூகம்! மிருகத்தனமான ஜாதி அமைப்பு, தெளிவில்லாத (சைவ) மரக்கறி உணவுப் பழக்கம் ஆகியவற்றைக் கொண்ட சமூகம்! இப்பேர்ப்பட்ட மூட, மதவாத, தெளிவற்ற சமூகத்தில் எப்படி அறிவியல் கண்டு பிடிப்புகள் ஏற்பட முடியும்?

ஆக, தேயிலை உற்பத்தி செய்வோ ரும் (பார்ப்பனப்) பண்டிதர்களும் தேநீர் விருந்தில் ஒரு சேரக் கலந்து கொள்ள முடியாத இந்தச் சமூகத்தில் முதலில் இந்தியா எனும் இயக்கம் இந்தக் கேடான சமூகத்தை மட்டுமே காட்ட முடியுமே தவிர, வேறொன்றும் செய்யாது.

திருப்பதி அல்லது வைஷ்ணவதேவி கோயில் அர்ச்சகர்களோ அல்லது இந்துத்வ வாதிகளால் பெருமையாகப் பேசப்படும் சங்கர மடங்களின் தலைவர்களோ மோடி யுடன் அமர்ந்து அவரின் தாயார் தயாரித்து கொடுக்கும் தேநீரை அருந்தினால் நாட்டுமக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்!

தெலங்கானா பகுதியைச் சேர்ந்த ஆட்டு இடையனான என்னை இந்த தேநீர் விருந்துக்கு அழைத்தால், நான் கூட அவருக்கு ஓட்டுப் போடுவேன், அவர் கொண்டுவரும் பெரிய மாற்றத்திற்காக! இந்தியாவில் வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றமும் சமூக மாறுதலும் சேர்ந்ததுதான் என்பதை மோடி புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணவும், குடிக்கவும் அனு மதிக்காத ஒரு சமூகத்தை வைத்துக் கொண்டு வளர்ச்சி என்பதும் கண்டு பிடிப்பு என்பதும் இந்தியாவில் எப்படி வரும்? எல்லா மனிதர்களும் பிறப் பிலேயே பாகுபாடு கொண்ட சமமாற்ற வர்கள் என்னு கருத்து நிலவும் ஒரு சமுதாயம் இருக்கும் நாடு எப்படி அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் முன்னேற முடியும்?

ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பின் ஆதார வேர்கள் இந்துமத ஆன்மிக நூல்களில் எழுதி வைக்கப்பட்டுள்ள. இந்நிலையில் எந்த இந்தியாவைப் பற்றி மோடி பேசுகிறார்? அது தலித் இந்தி யாவா? பிற்படுத்தப்பட்ட மக்களின் இந்தியாவா? அல்லது பார்ப்பனர்களின் இந்தியாவா? எந்த இந்தியா முதலில்? எந்த இந்தியா இரண்டாவதாக? எந்த இந்தியா மூன்றாவதாக?

பா.ஜ.க பாரத் என்று அழைக்கப் பிரியப்படும் இந்தியாவாக இருந்தாலும், அங்கே பெண்களின் நிலை மிகவும் பயங்கரமானதாயிற்றே! தம் விருப்பத் திற்கேற்ப, ஜாதி மறுப்புத் திருமணங் களைச் செய்து கொள்ள மறுக்கப்படும் நிலையில் பெண்களை வைத்துக் கொண்டு எந்த நாடு தான் முன்னேற முடியும்?

மோடியும் நானும் ஒரே வயதினர், ஒரே பிற்படுத்தப்பட்ட சமூகப் பின்னணி கொண்டவர்கள், என்றாலும் தலித் பெண் ஒருத்தி தன் விருப்பத்திற்கேற்ப ஒருவனை மணம் செய்து கொள்ள என் கிராமத்தில் வழியில்லை என்பதற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன்.

அந்த அளவில் எனது சமூக மாற்றத்திற்கான திட்டம் தோற்றுப்போனது. மோடியின் திட்டம் இது பற்றிக் கூறுவது என்ன? அவ ருடைய பெருமைக்குரிய குஜராத் மாநிலத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதா? ஓர் இந்துப்பெண்ணும் முசுலிம் இளைஞனும் திருமணம் செய்து பதிவு செய்வதை அவரது குஜராத் மாநிலம் அனுமதிக்கிறதா? விரும்பிய உணவை உண்ணும் உரிமை குஜராத்தில் எந்த அளவுக்கு இருக்கிறது?

இடைவிடாமல் முயற்சி செய்து புதுப்பித்து உங்களால் பெருமையாகப் பேசப்படும் சோம்நாத் கோயிலில் அர்ச்சகராக ஒரு தலித் ஜாதி இந்துவோ, பிற்படுத்தப்பட்டவரோ அல்லது ஒரு பெண்ணோ வர முடியுமா? மிஸ்டர் மோடி? மானுடர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான, சமமான ஆன்மீக உரிமை அற்றவர்களாக இருக்கும்வோது, உங்கள் இந்தியா எப்படி மானுடத்தின் மாண்பைப் பெற்ற முதல் நாடாக முடியும்?

உழைப்புக்கு மாண்பும் மரியாதையும் நிலவும் சமூகத்தில் தான் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன எனும் உண்மையாவது உங்களுக்குத் தெரியுமா, மோடி அவர்களே!

அர்ச்சகர் வேலை உட்பட அனைத்து வேலைகளுக்கும் ஒவ்வொரு குழந்தை யும் ஒவ்வொரு வயது வந்தோரும் சமவாய்ப்பு பெற்றிருக்க வேண்டும். நீங்கள் பின்பற்றும் மதத்தில் அப்பேர்ப் பட்ட நிலை உண்டா?

நம்மிடையே உள்ள பலவீனங்க ளையும், தவறுகளையும் ஒத்துக் கொள் ளும் மனோபாவத்தோடு இந்தியா எல்லாவற்றிலும் முதலிடத்திற்கு வர வேண்டும் என்று நானும் தான் விரும் புகிறேன். நீங்கள் எப்படி

தரவு: டெக்கான் கிரானிக்கிள் 12-3-2014
 
தமிழில்: சு.அறிவுக்கரசு

Monday, 17 March 2014

மன்னிப்பா?

நாங்கள் எப்போதாவது ஏதேனும் தவறு செய்து இருந்தால், மன்னிப்புக் கேட்பதற்கு தயாராக இருக்கிறோம் என அண்மையில் முஸ்லீம் மக்களி டையே உரையாற்றிய பாஜகவின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் பேசினார். காலையில் பேசிய தனது பேச்சுக்கு, அன்று மாலையே விளக்க மும் அளித்தார். 

அதாவது, தனது மன் னிப்பு பற்றிய பேச்சு, குஜராத் கலவ ரத்தை ஒட்டி சொல்லப்படவில்லை என்றும், பொதுவாக சொன்னதாகவும் கூறினார். ராமன் அங்கே தான் பிறந் தான் எனக் கூறி, நானூறு ஆண்டுகால பாபர் மஜ்ஜித்தை இடித்துத் தரை மட்டம் ஆக்கிவிட்டு, அதன் தொடர்ச்சி யாக நாடு முழுவதும் அப்பாவி சிறு பான்மை மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்; அவர்களது சொத் துகள் சூறையாடப்பட்டன.

இத்தகைய  கலவரத்தை பாஜகவும், சங் பரிவாரும் செய்தது தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்?  2002-இல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைச் சாக்காக வைத்து, ஏறத்தாழ இரண்டா யிரம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற் கும், அந்த மாநிலத்தில் அவர்கள் வாழ்வதற்குப் பயந்து ஓடுவதற்கும், மோடி தலைமையிலான அரசு செய்த அரசு பயங்கரவாதம் தவறா அல்லது குற்றமா  ராஜ்நாத் சிங்? பிப்ரவரி 2007-இல் ஹரியானாவில் உள்ள பானிபட் நகருக்கு அருகில் சென்று கொண்டிருந்த சம்ஜாயுதா விரைவு ரயில், குண்டு வெடிப்புக் குள்ளாகி, நமது இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 68 பேர் பலி யானார்கள்.

அந்த குண்டு வெடிப்புக்கு அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பு தான் காரணம் எனச் சொல்லப்பட்டு, அதில் இராணுவ அதிகாரி பிரசாந்த் சிரீகாந்த் புரோகித் ஈடுபட்டதை, சுவாமி அசீதானந்த் வாக்குமூலமும் அளித்தாரே; 

இந்த குண்டு வெடிப்பு சம்பவம், தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்? செப்டம்பர் 2008-இல், மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் எட்டு பேர் இறந்தனர். சாத்விக்கும், ராணுவ வீரர் புரோகித்திற்கும் இதில் தொடர்பு உண்டு என்று வழக்கு நடைபெறு கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆசியுடன் தான் இந்த குண்டு வெடிப்புகள் நடைபெற்றதாக சுவாமி அசீதானந்த் பேட்டி அளித்து, அது அண்மையில் கேரவான் பத்திரிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டதே. இந்த கலவரங்கள் எல்லாம், தவறா அல்லது குற்றமா ராஜ்நாத் சிங்? குற்றங்களுக்குத் தீர்வு தண் டனையா அல்லது மன்னிப்பா? மன் னிப்பு தருவதற்கு, இந்திய குற்றவியல் சட்டம் தேவாலயம் அல்ல, ராஜ்நாத் சிங்.  அதெல்லாம் இருக்கட்டும். உங்கள் கூட்டணியில் சேர்த்திட நீங்கள் மெனக்கெடும், கேப்டனுக்கு மன் னிப்பு என்ற வார்த்தையே பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா ராஜ்நாத்சிங்? அவர் காதில் விழுந்தால், உங்களை மன்னிக்கவே மாட்டார்.


- - குடந்தை கருணா

மோடிக்கு குட்டு!!


பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, போட்டியிடும் தொகுதியைத் தேர்ந்தெடுப்பதில் பாஜக தலைவர்களிடையே கடும் சச்சரவு ஏற்பட்டுள்ளது. மோடி வாரணாசி தொகுதியில் நிற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி சென்ற முறை வெற்றி பெற்ற தொகுதி. இந்த முறையும் தனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்கிறார். இப்போது மோடி அந்த தொகுதியை கேட்பதால், ஜோஷி ஆத்திரம் அடைந்துள்ளார்.

கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் இத் தகைய முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பி உள்ளார். பாஜகவின் மக் களவைத் தலைவராக இருந்த சுஸ்மா சுவராஜ், ஜோஷிக்கு ஆதரவாக உள்ளார்.

ஏற்கனவே, குஜராத்தில் அத்வானி தொடர்ந்து வெற்றி பெறும் காந்தி நகர் தொகுதியில் மோடி தான் நிற் பதற்கு முயற்சி செய்து, அத்வானியின் கடும் எதிர்ப்பால், அது நிறுத்தப் பட்டது.

இப்போது, வாரணாசி தொகுதி யில், ஜோஷியை விரட்டி விட்டு தான் நிற்கலாம் என முடிவு செய்திருப்ப தற்குக் காரணம், அங்கே ஆர். எஸ்.எஸ். மோடிக்கு ஆதரவாக ஏற் கனவே பிரச்சாரம் துவக்கிவிட்டது.

இந்நிலையில், தனது டிவிட்டரில், மோடிக்கு நாடு முழுவதும் அலை வீசுகிறது என்றால், எதற்காக, வார ணாசி தொகுதிதான் தனக்கு வேண் டும் என ஏன் கேட்க வேண்டும்; மற்ற தலைவர்களும், அவரவர் தொகுதியிலேயே போட்டியிட லாமே? என கேள்வி எழுப்பி உள்ளார் சுஸ்மா சுவராஜ்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் இதுவரை மூன்று பட்டி யல் வெளியிடப்பட்டது. ஆனால், மோடி எந்த தொகுதி என இன்னமும் தெரிவிக்கப்படவில்லை.

அண்மையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள், ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, மோடிக்கு அலை வீசுவதாக ஊடகங் கள் சொல்கின்றன. மோடிக்கு அலை ஒன்றும் வீச வில்லை; மோடி தான் அலைந்து கொண்டிருக்கிறார் என்று பேசினார்கள்.

ஆசிரியர் வீரமணியின் இந்த பேச்சை, வழிமொழிவது போல் இருக்கிறது பாஜகவின் மூத்த தலை வர் சுஸ்மா சுவராஜின் கருத்து.

- - குடந்தை கருணா

மோடி அலை வீசுகிறதாம்! நம்புங்கள்! இந்தப் பொய்யை

 

தலைவர் கலைஞர் அவர்கள் திரைக் கதை வசனம் எழுதிய மனோகரா திரைப் படத்தில் ஒருகாட்சி. மகன் மனோ கரனைக் கைது செய்து மன்னர் தந்தை அவைக்குக் கொண்டு வருவார்கள்.

அப்போது மனோகரனைப் பார்த்து மன்னர் கேட்பார்.

மனோகரா உன்னை எதற்காக அழைத்து வந்திருக்கிறோம் தெரியுமா?
 
மனோகரன் பதில் கூறுவார்

மன்னிக்க வேண்டும் மன்னரே. அழைத்து வரவில்லை. இழுத்து வந்திருக் கிறீர்கள் என்று.

அதுபோல் போகும் ஊரில் எல்லாம் கூட்டத்தைக் கூட்டி வந்து காட்டி, அந்தந்த ஊர் தொப்பியை அணிந்து கொண்டு - ஆம்! மலைப்பகுதியில் மலைப்பகுதி மக்கள் அணியும் குல்லா, பஞ்சாபில் சீக்கியர் அணியும் தலைப் பாகை, இராஜஸ்தானில் இராஜஸ்தானிய மக்கள் சுற்றும் தலைத்துணி அணிந்து காட்சி அளித்துப் பாரீர்! பாரீர்! என்று மோடி அலை வீசுவதாகப் போட்ட ஆட்டம் ஓய்ந்து விட்டது இப்போது தேர்தல் அறிவிப்பால்.

அதற்கு முன் குஜராத்தில் பாலாறு, தேனாறு ஓடுகிறது. இந்தியாவில் முதன்மை மாநிலம் குஜராத் - குஜராத்தில் அப்படி முன்னேற்றம், இப்படி முன் னேற்றம் என்று கனைத்ததெல்லாம் பொய்யுரைத்தவையெல்லாம் புள்ளி விவரங்களால், உண்மை நிலவரம் வெளிச்சத்துக்கு வந்ததால் அவை பொய், கனவு, பழங்கதை என்று ஆகிப் போனதையும் பார்த்தோம்.

அடுத்து இந்தியா முழுவதும் வீசுவது பா.ஜ.க.அலை. பா.ஜ.க விலேயே மோடியை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். உள் கட்சியினர் ராஜ்நாத்சிங், சுஸ்மா சிவராஜ், எல்.கே.அத்வானி ஆகிய எல்லோரும் கொண்டுள்ள அதிருப்தி வெளியாகி உள்ளது. வெட்கக்கேடான அவர்களின் உள்விவகாரம் வெளிச்சத் திற்கு வந்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் குஜராத்தின் முதல்வர், குஜராத்தை குளிரச்செய்து வருபவர் என்றெல்லாம் பகட்டாகப் பேசிய மோடிக்குக் குஜராத் தில் மட்டுமல்ல. வேறு வட மாநிலத்தில் கூட வேட்பாளராகப் போட்டியிடத் தொகுதியே கிடைக்கவில்லை. ஏன் எனில் வெற்றி வாய்ப்புள்ள ஏற்கெனவே வெற்றி பெற்று வந்தவர்கள் தங்கள் தொகுதியை மோடிக்கு விட்டுத்தரத் தயாரில்லை.

எல்.கே.அத்வானி காந்திநகர் தொகுதியில் குஜராத்தில் போட்டியிட்ட காந்தி நகரை அவர் மோடிக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. ஆகக் குஜராத்திலேயே தொகுதி இல்லை. தனக்கு இடமில்லாதபோது அவருடைய ஆதரவாளர்கள் குஜராத்திலேயே மோடி அலை வீசச்செய்வார்களா? என்பது கேட்கப்படும் கேள்வி.

அடுத்துக் காஜியாபாத் தொகுதி - டெல்லிக்கு அருகில் இருப்பது. அதில் நின்று வெற்றி பெற்றவர் தாண்டன் என் பவர். அந்தத் தொகுதியை அவர் மோடிக்கு விட்டுக்கொடுக்கத் தயாரா யில்லை. உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி தொகுதி என்பது பா.ஜ.க வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பா.ஜ.க கல்வி அமைச்சரும், வாரணாசி பல்கலைக் கழகப் பேராசிரியருமான ஜோஷியின் தொகுதியை மோடி கண் வைத்தார்.

மறந்துபோய் சென்னையில் உணவு விடுதி விருந்தில் தண்ணீர் என்று ஆசிட் டைக் குடித்து விட்டார் என்று அப்போல் லோவில் சேர்க்கப்பெற்றுப் பிழைத்த ஜோஷி தொகுதியை விட்டுக்கொடுக்க மறுத்து விட்டார். தான் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டார். தான் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் விட்டுக்கொடுக்க இயலாது என்பதை மழுப்புப் பதிலாகத் தெரிவித்து விட்டார்.

அடுத்து லக்னோ தொகுதி இது ராஜ்நாத்சிங், பா.ஜ.க. வின் தலைவரின் தொகுதி. இந்தத் தொகுதியைக் கண் வைத்தார் மோடி. அதுவும் கொடுக்க இயலாது என்று அவரும் சொல்லாமல் சொல்லி விட்டார்.

அடுத்து மிஞ்சி இருப்பவர் சுஷ்மா சுவராஜ். அவர் சமீபத்தில் பெங்களூர் வந்திருந்த போது தொகுதி பறிப்பு விவகாரத்தில் தன் அதிருப்தியைத் தெரிவித்து வெளியேறி விட்டார்.

ஆக இந்தியா முழுவதுமே பா.ஜ.க. வுக்குள்ளேயே குத்து வெட்டை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற மோடிதான் இந்தியத் தலைமை அமைச்சர் வேட் பாளர் என்று கூறிவருவது ஒரு வேடிக்கை.

மராட்டியத்தில் பா.ஜ.க வின் தொடர்ந்த ஆதரவாளர் கட்சி பிற ஊர் மக்களை, மண்ணின் மைந்தர் கொள்கை அடிப்படையில் மராட்டியத்தை விட்டுத் துரத்தப்பல முறை வன்முறையில் ஈடுபட்ட சிவசேனா கட்சி தான். அந்தக் கட்சியுடன்தான் எப்போதுமே பால் தாக்கரே காலத்தில் இருந்து கூட்டு.

இப்போது ராஜ்தாக்கரே எனும் பால்தாக்கரேயின் மகன் நவ நிர்மாண் கட்சி என்று புதிய கட்சியைத் தொடங்கி ஏழு இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டதோடு ஏழு இடங்களில் ஆறு இடங்களில் சிவசேனாவை எதிர்த் துப் போட்டியிடப் போவதாக அறிவித்துத் தோளோடு தோள் இணைந்து மோ டியோடு நடைபோட்டு வருகிறார். சிவசேனா என்ன செய்யும் என்பது வெளிப்படையான உண்மை.

ஏற்கனவே தமிழகத்தில் பா.ஜ.க பூஜ்யம். ஆனால் பொய்க்கணக்கில் ஏராளமாக வைத்திருக்கிறார்கள் என்பதால் நம் ஊர் கேப்டன் கட்சி பா.ஜ.க வுடன் கூட்டு என்று பேச்சு வார்த்தை நடத்துகிறார். இவருடைய எதிரியான பா.ம.கவும், பா.ஜ.க வுடன் கூட்டு என்று பேசிப்பத்துத் தொகுதியை அறிவித்து விட்டது. எட்டுத்தொகுதியாவது போட்டி யிட்டே தீருவோம் என்கிறார் மருத்துவர். திராவிடப் பாரம்பரை என்று சொல்லும் வைகோ இந்த அணி என்று எட்டுத் தொகுதிகளாவது கிடைக்குமா என்று   ஏங்கி நிற்கிறது கொங்கு வேளாளர் கட்சி மோடிதான் பிரதமர் என்று முழங்கிய தெல்லாம் போய் வெளியேறும் நிலை.

இந்த நிலையில்  வழக்கம் போல், இன்னும் இரண்டு நாள்களில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிடும் என்று ஜோசியம் சொல்லிக்கொண்டு இருக் கிறார். அகில இந்திய அளவிலேயே பிரச்சினையைத் தீர்க்க இயலாத பா.ஜ.க. தலைவர் வந்த பின் எல்லாம் முடிந்து விடுமாம்.

இப்படிக் குழப்பமான குழப்பம் உடைய பா.ஜ.க. தான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்று மக்களை ஏமாற்று வதில் மட்டும் பா.ஜ.கவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது என்னவோ உண்மை.

இந்த நிலையில் அலை வங்கக்கடலில், அரபிக்கடலில் வீசலாமே தவிர அது மோடி அலையாக எங்கும் வீசவில்லை. இது தான் உண்மை.

முனைவர் பேராசிரியர்
ந.க.மங்களமுருகேசன்
 

Saturday, 8 March 2014

மோடிக்கும் பாஜகவிற்கும் வாக்களிக்காதீர்கள்! புகழ் பெற்ற குடிமக்கள் அறிக்கை


வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வையும் அதன் பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடியையும் படு தோல்வி அடையச் செய்ய வேண்டும் என வாக்காளர்களைப் பல்வேறு துறை களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இடதுசாரிகளும் வகுப்புவாதத்துக்கு எதிரான சக்திகளும் ஆம் ஆத்மி  கட்சிக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யக் கூடாது எனவும், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பா.ஜ.க. அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தோல்வியுறச் செய்ய வேறு ஆற்றல்மிகு வேட்பாளர் இல்லாத போது மட்டுமே மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர்கள வெளியிட்டுள்ள அறிக்கை யில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நரேந்திர மோடியின் அரசியல் பாசிச அரசியல் ஆகும்.

எவராலும் மறுக்க முடியாத அடிப்படை உரிமைகளும், சட்டத்தின் ஆட்சியும்கூட மோடி ஆட்சிக்கு வந்தால் பாதிப்படையும். பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்காத வரை நரேந்திர மோடியைத் தடுத்து நிறுத்த முடியாது. இதனை அடைய காங்கிரஸ் கட்சி, சுயேச்சைகள் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் தேர்தல் களத்தில் ஓரணியில் திரட்ட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள் ளனர்.

இந்த அறிக்கையில் கையெழுத் திட்டுள்ள பிரமுகர்கள் வருமாறு:

அனில் பாடியா (இதழியலாளர்),

அன்ஜும் ராஜாபாலி (திரைக்கதை ஆசிரியர், ஆசிரியர்),

அருணா புர்டே (பெண்ணிய செயற்பாட்டாளர்),

ஹஸீனா கான் (முஸ்லீம் பெண்களின் உரிமைகள் இயக்கம்),

இர்ஃபான் இன்ஜினியர் (அகில இந்திய மதச் சார்பற்ற ஃபோரம்),

ஜாவித் மலிக் (பல்கலைக் கழக விரிவுரையாளர்),

காமயானி பாலி மஹாபல் (பெண்ணிய, மனிதஉரிமை ஆர்வலர்),

கண்ணன் சிறீநிவாசன் (பத்திரிகையாளர், ஆய் வாளர்),

மங்ளூரா விஜய் (எழுத்தாளர், சமூக ஆர்வலர்),

மனோகர் இளவர்தி (பிரஜா ராஜகிய வேதிகே),

எம்.கே. பிரசாத் (கேரள சாஸ்திர ஸாஹித்திய பரிஷத்)

பிரதீப் எஸ்டிவ்ஸ் (ஆய்வாளர், ஆலோசகர்),

ராம்தாஸ் ராவ் (பி.யூ.சி.எல் - பெங்களூர்),

ராம் புன்யானி (அகில இந்திய மதச்சார்பற்ற ஃபோரம்),

ஆர். கிறிஸ்டோபர் ராஜ்குமார் (நேஷனல் கவுன்சில் ஆஃப் சர்ச்சஸ் இன் இண்டியா),

ரிபக்கா குரியன் (வகுப்புவாத எதிர்ப்பாளர்),

ரோஹினி ஹென்ஸ்மேன் (அறிஞர், எழுத்தாளர்),

ஷேக் உபைத் (மனித உரிமை ஆர்வலர்),

எஸ். ஜனகராஜன் (மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்),

சுபாஷ் கடதே (நியூ சோசியலிஸ்ட் இனிஷியேட்டிவ்),

சுமி கிருஷ்ணா (பெண்ணியவாதி, எழுத்தாளர்),

உத்ய சந்திரா (அரசியல் ஆய்வாளர்),

உமா வி. சந்துரு (பி.யூ.சி.எல் - பெங்களூரு),

ஜஹீர் அஹ்மத் சயீத் (நரம்பியல் மருத்துவர்).

- சமரசம் 1-15 மார்ச் 2014

மோடி ஆட்சியில் குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நெல்லையில் பிச்சை எடுக்கும் அவலம்