Sunday, 3 November 2013

மோடி-டெண்டுல்கர் மற்றும் விநாயகர்: இவை எல்லாம் பார்ப்பனீயம் நம்மை வீழ்த்த வைத்திருக்கும் ஆயுதங்கள்


சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மோடியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துவதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்றார்.
பிற்படுத்தப்பட்டவர் என்பதால் கொலைகாரன், கொள்ளைக்காரன், முடிச்சவிழ்க்கி, பிக்பாக்கெட், காமக் கொடூரன், சாமியார்கள் இவர்களை யெல்லாம் கண்மூடித்தனமாக ஆத ரித்துவிடமுடியுமா? அதே நேரத்தில், இதே தவறுகளை செய்த பார்ப் பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி என்று பாகுபாடு பார்த்தால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் வெகுண்டெழுவோம்.
காஞ்சி சங்கரனிலிருந்து சவுண் டிப் பார்ப்பான்வரை குற்றம் செய்து விட்டு ஒன்றும் தெரியாத மாதிரி பவனி வரும்பொழுது, பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தைச் சேர்ந்த லாலுவை (குற்றம் நிரூபிக்கப்பட்ட பொழுதும்) உள்ளே தள்ளியது மனசை நெருடுகிறது; என்ன செய்வது! பார்ப்பானுக்கு நீதி அஞ்சலில் வருகிறது என்றால் (பெரும் பான்மையான நேரத்தில் விலாசம் எழுதப்படாத அஞ்சல் மாதிரி அலைக் கழிக்கப்படுவதும் உண்டு), மற்றவற்கு ஈமெயிலில் அல்லவா வருகிறது.
மோடி பிற்படுத்தப்பட்டவர் என் றாலும் கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ். காரர். அக்மார்க் இந்துத்துவா வெறி யர். ஆயிரக்கணக்கான இசுலாமியர் களை வெட்டிச் சாய்க்க துணை நின்றவர். வரலாற்றில், ஹிட்லருக்குப் பிறகு ஒரு அரசாங்கமே தனது குடி மக்களை கொன்று குவிப்பதைக் கண்டு ரசித்தவர். (ராஜபக்சே அதை யும் விஞ்சி விட்டார் என்பது வேறு விஷயம்). துப்புரவுத் தொழிலாளியை நீ செய்யும் வேலை கடவுளுக்கு செய்யும் காரியம். கடவுளின் அன்பும், ஆதரவும் உனக்கு கிடைக்கும். துப்புரவு செய் பவர்கள், வால்மீகிக்கு ஒப்பானவர்கள் என்று எழுதியது, மோடி யார், எப்படிப் பட்டவர் என்பதை பட்டவர்த்தனமாக அல்லவா சொல்கிறது. அவர் சார்ந்த ஆர்.எஸ்.எஸ்-இன் இந்து கர்மா கருத்தினை நிறுவும் செயல்தானே அது?
பார்ப்பானுக்கு நேரடியாக பருப்பு வேகாது என்றால் மோடி போன்ற குறி யீடுகள் மூலம் நம்மை ஒடுக்க முயற்சிப் பான். அக்குறியீடுகளை சந்திரன், இந் திரன் என்றும் புகழ்வான். அவர்களுக்கு எல்லா நல்ல குணங்களையும் ஏற்றுவான். (கல்லுக்கே மந்திரத்தை ஏற்றி கடவுள் ஆக்கியவனுக்கு இது எம்மாத்திரம்?) அக்குறியீடுகளை அங்ஙனம் புனிதப் படுத்தி, அவர்களை யாரும் எதுவும் விமர் சிக்க முடியாத இடத்தில் வைப்பான். நம்மவர்களும் வாய்பிளந்து கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். அப்படிப்பட்ட புனிதர்களை ஜோடித்து ஊர் ஊராய் உற்சவம் நடத்துவார்கள். ஊரிலே இருக் கும் எல்லா பார்ப்பானும் வழக்கத்துக்கு மாறாக புது சொக்காய் போட்டுக்கிட்டு கிளம்பிடுவான்.
மோடியின் சமீப சென்னை விஜயத் தின் பொழுது விட்டல் மாமாவிலிருந்து பழைய கிரிகெட் வீரர் சிறீகாந்த் அத்திம் பேர் வரை முண்டியடிச்சுக்கிட்டுப் போறாங்கனா ஒரு வேளை மோடி பிரதமர் ஆக வந்துட்டாருன்னா அவாளும் பூணூ லில் கொஞ்சம் முதுகை சொரிஞ்சிக் கிலாம் பாருங்க.
அக்ரகாரத்து அம்பிங்க துள்ளி குதிக் கிறாங்கன்னாலே அதற்கு அர்த்தமே வேற. மோடி வந்தவுடன் எப்படியாவது, இட ஒதுக்கீட்டுக்கு சாவு மணி அடிச் சிடலாம்; இந்து, தருமம், வருணாசிரமம் என்ற இத்துப் போன பாத்திரத்திற்கு எல்லாம் புது முலாம் பூசி, பவனி விடலாம். மீண்டும் பேஷா எங்கும் அவா, எதிலும் அவாஎன்று ஆக்கிடலாம். நன்னா வயிறு முட்ட பருப்பும், நெய்யும் கலந்த சோற்றை சாப்பிட்டு விட்டு, வாய் மணக்க கும்ப கோணம் வெற்றிலையும் (வெத்தல்ல செல்லம்) சீவலையும் போட்டுக்கிட்டு இந்த சூத்திரப் பசங்களையும், சேரிப்பசங் களையும் மோத விட்டு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் மாதிரி ரசித்துப் பார்ப்பான் (அதான் பார்ப்பான் ஆச்சே). அதனாலேதான் கன்னியாகுமரி பார்ப்பான் வரை நெரிக் கட்டின மாதிரி துடிக்கிறான். எப்படியாவது மோடியை, பிரதமர் ஆக்கிட. குஜராத், நாட்டிலேயே வளர்ச்சியில் முதல் மாநிலம்ன்னு சொன்ன கதை இப்ப சாயம் வெளுத் துடிச்சி. நேர்மை, லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு பாஜக தரும்னு சொன்னா அவங்க கட்சிக்காரனே நம்ப மாட்டான். நிலையான ஆட்சி கொடுப்பாங்க ளான்னா. பழைய வாஜ்பேயி ஆட்சி வேற நினைவுக்கு வந்து பயமுறுத்துது. அப்ப மோடி முட்டி மோதிப் பார்த்தாலும் அமெரிக்காக்காரன் விசா கொடுக்க மாட்டேன்கிறான். வாஜ்பேயி, பிரதமர் என்று சொன்ன பொழுதாவது கூட ரெண்டுக் கட்சி வந்து சேர்ந்தது. மோடி மாமா பேரைக் கேட்டவுடனே இருந்த இரண்டு கட்சியும் ஓடிப்போயிடிச்சி. அத் வானி தாத்தாவும் முடுக்கிக் கிட்டு நிக்க றாரு. அப்படி மோடி என்னதான் கிழிப் பாரு?
பார்ப்பான்களுக்கு எல்லா கதவுகளை யும் திறந்து விடுவது மட்டுமின்றி, எதிர்ப் புக் குரல்களை மெல்ல நசுக்கி, ஹிட்லர் போல பாசிச ஆட்சி நடத்துவார். சாமான்ய மக்களுக்கு பல வருடங் களாகவே அரசு நிர்வாகத்தின் மீது கோபம் உண்டு. காரணம், லஞ்சம், வேலையில் அலட்சியம், அதிகார போதை இந்தக் காரணங்களால் மக்களுக்கு அரசாங்க நிருவாகத்தின் மீது எப்பொழுதும் ஒரு வெறுப்பு உண்டு. (முன்பு ஒரு முறை ஜெ அரசாங்கம், அரசு அதிகாரிகளையும், ஊழியர்களையும் ஒட்டு மொத்தமாக சிறையில் அடைத்த பொழுது சாமா னிய மனிதன் அதைக் கண்டு ரசித் தான். பாராட்டினான்.) அதனால் மோடி ஆட்சியில் நிருவாகத்தில் சீர் திருத்தம். கண்டிப்பு என்கிற பெயரில் இந்துத்துவ எதிர்ப்பாளர்களும், சிறு பான்மையினரும் பழி வாங்கப்படலாம். மக்கள் அதை உணராமல் தவறு களைத்தானே களை எடுக்கிறார்கள் என்று பாராட்டுவார்கள். எதிர்த்து எழுதுபவர்களும் கேள்விக் கேட்பவர் களும், திடீரென காணாமல் போய் விடு வார்கள்; என்கவுன்ட்டர்கள் சாதார ணமாக நடக்கும். அதை நியாப்படுத்தி பத்திரிகைகள்

நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது! - நோபல் அறிஞர் அமர்த்தியா சென்

புதுடில்லி, ஜூலை 24- குஜராத் முதல்வர் நரேந் திர மோடி பிரதமராக வருவதை ஏற்கமுடியாது என நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அறிவித்துள்ளார்.
நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்பதை யும் கிட்டத்தட்ட அறி வித்துவிட்டது பாஜக. மோடியை முன் நிறுத் துவதை பாஜவுக்குள் ளேயே ஒரு பிரிவினர் எதிர்த்து வரும் நிலை யில், நாட்டின் சமூக ஆர்வலர்கள், மத நல்லி ணக்கவாதிகள், பொரு ளாதார அறிஞர்கள் என பல மட்டங்களி லும் மோடிக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வரு கிறது.
நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென் கடுமையாக எதிர்த் துள்ளார் மோடியை. அவர் அளித்த பேட்டியில்,
மதநல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு மனிதரை எப்படி நாட்டின் பிரத மராக ஏற்க முடியும்? ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையில் அவர் பிரதமராவதை நான் கடு மையாக எதிர்க்கிறேன். சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்பு டன் இருக்கிறோம் என உணரும் வகையில் அவர் எதையுமே சொல்ல வில்லை. சிறுபான்மை யினருக்கு மட்டும் என் றல்ல... நான் சிறுபான் மையில் ஒருவன் இல்லை... பெரும் பான்மை மக்களுக்கும் கூட அவர் என்ன செய்துவிட்டார்? வன்முறைக்குச்சட்ட அங்கீகாரமா?
2002 இல் அவர் செய் தது திட்டமிட்ட வன் முறை. மோடியை அங் கீகரிப்பதன் மூலம் அந்த வன்முறைக்கு சட்ட அங்கீகாரம் தரப்போகி றார்கள் என்றுதான் அர்த்தம்.
இந்திய பிரதமராக விரும்பும் எந்த இந்திய குடிமகனுக்கும் இல்லாத பயங்கரமான வன்முறை பின்னணி மோடிக்கு உள்ளது. அவரை ஏற்கக் கூடாது.குஜராத்தில் சில உள்கட்டமைப்புகள் நன்றாக இருக்கலாம். ஆனால் கல்வி மற்றும் சுகாதாரத்தில் அந்த மாநி லம் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய உள்ளது.
சகிப்புத் தன்மையில் நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்தியாவில், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான நிலை உள்ளது என பெரும் பான்மை மக்கள் எண் ணுமளவுக்கு மோடி நடந்து கொள்ளவில்லை என்றார்.

உத்தரப்பிரதேசத்தில் தங்கக் கனவு சாமியார்- மோடியின் மூக்கை உடைக்கிறார்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன் னாவ் பகுதியில் உள்ள தாண்டியா என்ற ஊரில், இந்தியத் தொல்லியல் துறை யினரால் ஒரு சாமியாரின் கனவில் மன்னர் வந்து தங்கப் புதையல் பற்றி சொன்ன காரணத்தால், தங்க வேட்டை நடத்தி வருகிறார்கள். அதை குஜராத்தின் முதல் அமைச்சர் நரேந்திர மோடி கேலி செய்துள்ளார்.
இதனால் அந்த கனவு கண்ட சாமியார் சோபனா சர்க்கார் மிகவும் வருத்த மடைந்தார். மோடியின் பேச்சு தன்னை வருத்தமடையச் செய்ததாக, ஓம்ஜி என்ற மற்றொரு சாமியார் மூலம், அவர் ஒரு திறந்த மடல் அனுப்பினார். தங்கம் தோண்டுதலைப்பற்றி கேலி செய்த பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர், சாமி யாரின் கடிதம் பார்த்தார். உடனே தனது டிவிட்டரில் சாமியார்மீதும் அவரது செயல்பாடுகள்மீதும் தான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
சாமியாரின் கடிதம்
சாமியாரின் கடிதத்தில் அப்படி என்ன தான் இருந்தது?
முதலில் அந்தக் கடிதம் மோடியை கான்பூருக்கு வருமாறு, அழைப்பு விடுத்து இருந்தது. அடுத்து, மோடியின் கருத்துக்கள் மன வருத்தத்தை அளிப் பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவென்றால், நடுவண் அரசின்மீதும் சோனியா காந்திமீதும் நீங்கள் அவசரமாகத் தாக்கிப் பேசும்போது, நீங்கள் ஒரு சாமியாரின் கவுரவத்தை அவமதித்து இருக்கிறீர்கள்.அனாவசியமான ஆவேசப்பேச்சுகளில் நேரத்தை வீண் அடிக்காமல் சோபன் சர்க்கார் ஆகிய சாமியாரை நீங்களே பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுரையும் கூறப்பட்டிருந்தது. நாங்கள் எல்லாம் மதிப்பிற்குரிய சாமியார்கள். ஆனால் சோபனா சர்க்கார் பெரு மதிப்புக்கு உரியவர்
மோடி இந்தியாவின் அடுத்த பிரத மராகப் பார்க்கப்படுவதால் சாதாரண மனிதரும் சாமியார் சங்கமும் (சாது சமாஜ்) சில பிரச்சினைகளில் மோடியின் கருத்தைக் கேட்க  ஆவலாக உள்ளனர். அதற்காக சோபனா சர்க்கார் மோடியை ஒரு பொது விவாதத்துக்கு அழைத் துள்ளார். நீங்கள் பிரதமராக இருந்தால், தங்கப் புதையல் பற்றிய தகவல் கிடைத்தால், என்ன செய்வீர்கள்? அதைப் பற்றிச் சொல்லுங்கள். தற் போதைய தோண்டப்பட்ட பணிகளால் நாட்டின் கவுரவம் கேலி செய்யப்படுவ தாக நீங்கள் உணருகிறீர்களா? வாது புரிவதற்கு பல பிரச்சினைகள் உள்ளன நேரம் ஒதுக்கித் தரும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பல வழிகளிலும் அந்தக் கடிதம் மோடியையும் அவர் கட்சியையும் சிக்க வைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் வாஜ்பேயி பிரதமராக இருந்த பொழுது, ஏன் ஸ்விஸ் வங்கியிலிருந்து கருப்புப் பணம் கொண்டு வரப்படவில்லை என்று, கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கடிதம் மோடியின் மற்றும் பா.ஜ.க.வின் பிரச்சாரங்களுக்காகச் செலவிடப்படும் பணம் வெள்ளையா அல்லது கறுப்பா? என்பதை விளக்க வேண்டும் என்பதுடன் சேதுக் கால் வாய் பற்றிய பா.ஜ.க.வின் கருத்துக்கள் சவாலாக்கப்பட்டுள்ளது. உங்கள் கட்சி யைப் பொறுத்தமட்டில் அது நம்பிக்கை சார்ந்த ஒன்று.
அயோத்திக்குப் புறப்படுமுன், ராமன் விபீஷணனிடம் ராம் சேது பாலத்தை அழித்து விடும்படி கேட்டுக் கொண்டுள்ளான். பத்ம புராணத்தைப் பார்த்து, இதை உறுதி செய்து கொள்ளலாம். உங்கள் கட்சி செய்தித் தொடர்பாளரையும், சுதன்சு மிட்டலையும் நம்பிக்கை தொடர்பான பிரச்சினை களை எழுப்பும் முன்பு, அவற்றைப் பற்றி நன்கு படித்துக் கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதம் கூறுகிறது.
அந்தக் கடிதம் மேலும், மோடிக்கு ஒரு நிகழ்வை நினைவூட்டுகிறது. சாம்பிரோட்டோ என்ற வல்லுநர் சி. டாட் என்ற திட்டத்தைச் செயல்படுத்தி அதன் மூலம் நாட்டைக் கணினி மயப்படுத்து வதற்கான அடிப்படைகளை அமைக்க ஆரம்பித்தபோது வாஜ்பாயியின் தலை மையிலிருந்த பா.ஜ.க., நாடு முழுதும், கணினி வந்தால் வேலையில்லாத் திண்டாட்ட வலையில் நாடு சிக்கிக் கொள்ளும் என்று வீதியெங்கும் கூக்குரல் எழுப்பினர். அந்தச் சமயத்தில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு தவ றானது என்று ஒத்துக் கொள்ளும் துணிவு உங்களிடம் உள்ளதா? என்று சாமியார் ஓம்ஜியின் அந்தக் கடிதம் கேள்வி எழுப்புகிறது.
ராணுவத்தினரின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் போஃபர்ஸ் லஞ்ச ஊழலைப் பற்றியும் அந்த ஆயுதங்கள் பயனற்றவை என்ற அய்யங்களையும் கிளப்பி விட்டதாக பா.ஜ.க., மீது அந்தக் கடிதம் குற்றம் சாட்டுகிறது. பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது, ஏன் போஃ பர்ஸ் லஞ்ச ஊழல் பற்றிய ரகசியங்களை வெளியிடவில்லை? கார்கில் போரின் போது போஃபர்ஸ் ஆயுதங்கள் இல் லாமல் இருந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பதை விளக்க முடியுமா? என்று அந்தக் கடிதம் கேட் கிறது. மோடியை டெக்ரி அணைபற்றி  மேலும் சிக்க வைக்கிறது. உங்கள் கட்சி எப்பொழுதும் டெக்ரி அணை ஆபத் தானது என்றும் சாபக்கேடு என்றும் சொல்லி வருகிறது. டெக்ரி அணை மட்டும் இல்லாமல் இருந்தால் கேதார் நாத் பேரழிவினால் சமவெளிகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டிருக் குமே; அதன் பிறகு கான்பூர் பேரணியில் நீங்கள் எங்கிருந்து பேசுவது? என்றும் அந்தக் கடிதம் கேட்கிறது.

Wednesday, 30 October 2013

நரேந்திர மோடி - நியூயார்க் டைம்ஸ் படப்பிடிப்பு

2002-ல்  மேற்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நடைப்பெற்ற மதக் கலவரத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மையினர்களான முஸ்ஸிம்கள். தற்பொழுது 10 ஆண்டுகள் கடந்து அந்த மத கலவரத்தின் போது குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருத்த நரேந்திரமோடி தான் தற்போதும் முதல்வர்; மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய பிரதமருக்கான முன்னனி வேட்பாளராக உள்ளார்
திரு. மோடி இந்தியாவின் முக்கிய எதிர் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் மிக முக்கிய நபராகவும், ஒருவேளை இந்த கட்சி  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெற்றால் பிரதமர் ஆக்க் கூடியவராகவும் இருக்கிறார். ஆனால் திரு.மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் அது பெரும்பாலான இந்தியர்களுக்கு மிக ஆழமான பல பிரச்சினைகள் ஏற்படும். அதிலும் இந்திய நாட்டின் 138 மில்லியன் இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவில் உள்ள மற்ற சிறுபான்மையினருக்கும் ஆபத்து ஏற்படும். ஏனெனில் மோடி கடந்த  காலங்களில் ஏற்படுத்திய மதக் கலவரத்தின் கொடூரமான தீயை இந்தியா முழுவதும் பரவ விடும் அபாயம் உள்ளது.

 திரு.மோடியின் ஆதரவாளர்கள் மோடியை குற்றம் இல்லாதவர் என்றும் அவருக்கும் கலவரத்திற்கும் தொடர்பு இல்லை என இந்திய உச்சநீதிமன்றம் கூறியதாக வாதிடுகிறார்கள். மேலும் அவர்கள், குஜராத் மாநிலத்தை வேகமாக வளரக் கூடிய மாநிலமாக்கியதால் திரு.மோடிக்கு நடுத்தர மக்களின் பெரும் ஆதரவு இருப்பதாகவும், அவரால் பொருளதாரத்தில் அபார வளர்ச்சியை ஏற்படுத்தமுடியும் என்றும், கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியை ஒழித்துக் கட்டி இந்தியாவை முன்னேற்றுவார் என்றும் கருதுகிறார்கள் என்கின்றனர்.    

எந்தக் கேள்விக்கும் இடம் இல்லாமல் காங்கிரஸ் கட்சி பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி, பொது நிறுவனங்கள் மற்றும் நீதிபரிபாலனத்தில் தோற்றுப் போனது என்பது உண்மை தான். மேலும் புதிய சிந்தனைகள், தலைவர்களுடன் தன்னை மீளமைப்பதற்கு பதிலாக, நேரு-காந்தி குடும்பத்தின் அனுபவமில்லாத  இளந்தளிரான ராகுல் காந்தியின் தலைமையில் தேர்தலைச் சந்திக்கிறது.

ஆனால் திரு.மோடியின் ஆழமான கொடூரமான ஹிந்து தேசியவாதம் (ஹிந்துத்துவா) பொது மக்களின் கோபத்தையை இன்னும் தூண்டுவதாக உள்ளது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திரு.மோடியிடம் ராய்ட்டர்ஸ் நிறுவனம், ”2002-ல் நடைபெற்ற கொடூரமான கொலைகளுக்கு நீங்கள் வருத்தப்பட்டது உண்டா?” என்று கேட்டதற்கு திரு.மோடி கூறியது “யாரோ ஒருவர் கார் ஓடுகிறார் நாம் அந்த காரில் பின் அமர்ந்து பயணம் செய்கிறோம், வழியில் ஓரு நாய்க்குட்டி காரின் சக்கரத்தில் சிக்கினால், வருத்தபடுவோமா இல்லையா? கண்டிப்பாக வருத்தபடுவோம்”.” திரு.மோடியின் இந்த பொறுப்பற்ற, பொதுமக்களின் கோபத்தை தூண்டுகின்ற பதில், அரசியல் களத்தில் அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் தோற்றுவித்த்து.

திரு.மோடி எதிர் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுகிற பொறுமையோ, தகுதியோ இல்லாதவர் என பல சூழ்நிலைகளில் நிருபித்துக்காட்டி இருக்கிறார். மேலும் அவரின் கூட்டணி சகாக்கள் அவரை விட்டு வெளியேறிவிட்டனர்.  ஓரு முக்கியமான மாநில கட்சி- பாரதீய ஜனதா உடன் இருந்த 17 ஆண்டுகால கூட்டணியை முறித்து கொண்டது. அதற்கு ஒரே காரணம் திரு.மோடி ஏற்று கொள்ளக்கூடிய நபர் இல்லை என்பது மட்டுமே!

திரு.மோடியின் பொருளாதாரப் பதிவு முற்றிலும் ஏற்றுக் கொள்வது போல் இல்லை.  நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் ஏழ்மை சதவீதம் குறைவு என்றாலும் இந்திய நாட்டில் ஏழ்மை மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள  முஸ்லிம்கள் குஜராத்தில் தான் அதிகம் உள்ளனர்.  

இந்தியா என்ற நாடு பலவித மதங்களை கொண்டு நாடு,ஓரு டசன்க்கு மேலான மொழி, எண்ணில் அடங்கா மரபு வழி நம்பிக்கை கொண்டு குழுக்கள் மற்றும் பழங்குடியினர் வாழும் நாடு. இப்படி பல்வேறு மக்களையும் தலைமை ஏற்று சிறப்பாக திரு.மோடியால் நடத்தமுடியுமா  என்றால் இல்லை, ஒட்டு மொத்த மக்களின் பயத்தைப் போக்கி அவர்களின்  நம்பிக்கையை பெறும் வரை திரு.மோடி மக்கள் தலைவராக வர முடியாது

(தி நியூயார்க் டைம்ஸ் ஏட்டின் தலையங்கப் பகுதி)

மொழிபெயர்ப்பு: தமிழன் பிரசன்னா

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: அன்பு நண்பர்களுக்கு ....இந்த கட்டுரை புகழ் பெற்ற  The New York Times’ Editorial Board ல் திரு. மோடி குறித்து எழுதப்பட்ட கட்டுரை. அதனை என் சிற்றறிவுக்கு தெரிந்ததைக் கொண்டு மொழியாக்கம் செய்துள்ளேன். இதில் துளி அளவு கூட என் கருத்து பதிந்து விடகூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளேன். ஏதேனும் குறை இருந்தால் உங்கள் மேலான கருத்துகளை பதிவுசெய்யுங்கள்

Wednesday, 9 November 2011

சட்டத்தின் பிடியில் மோடி

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து, வளைந்து வளைந்து ஓடி தப்பித்துக் கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜாப்ரி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ஒரு முக்கியமான முட்டுச் சந்தில் திணறிக் கொண்டு நிற்கிறார்.

உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு மோடிக்குச் சாதகமான அறிக்கையை கொடுத்த நிலையிலும், வழக்கினை உள்ளூர் மாஜிஸ்ட்ரேட்டே  விசாரித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்ட நிலை யிலும், மோடி குற்றமற்றவர் என்பது நிரூபணமாகி விட்டது என்று நிர்வாணக் கூத்தாடினர்.

இதில் ஓர் ஆச்சரியம். தெகல்கா புலனாய்வு செய்து நேரிடையாக சாட்சியங்களைப் பதிவு செய்த தகவல்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது வெகு ஆச்சரியமான ஒன்றே!

இப்பொழுது ஒரு நம்பிக்கை ஒளி பளிச்சென்று பரவியுள்ளது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை சுதந்திரமான முறையில் சாட்சிகளுடன் விசாரணை நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு இராமச்சந்திரன் என்பவர் நடுநிலை விசாரணை நபராக (ஹஅஉரளபரசயைந) அறிவிக்கப்பட்டார். அவர் விசா ரணை செய்து அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவுகளுக்கு மாறாக மோடியின் மீதான குற்றச்சாற்றுகளுக்குப் போதுமான முகாந்திரங்கள் உள்ளன; குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று பரிந்துரைக் கப்பட்டுள்ளது.

குஜராத் கலவரத்தன்று (2002 பிப்ரவரி 27) முதலமைச்சர் நரேந்திர மோடி கூட்டிய உயர்மட்டக் குழுவில் கலந்துகொண்ட சஞ்சய் பட் என்னும் உயர்நிலைக் காவல்துறை அதிகாரி உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்த அறிக்கை மோடிக்கு நெரிகட்டச் செய்துவிட்டது! அந்தக் காவல்துறை அதிகாரி அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவே இல்லை என்று ஒரு போடு போட்டால் தீர்ந்தது பிரச்சினை என்கிற வடிவத்தில் குஜராத் பா.ஜ.க. ஆட்சி வழக்கைத் திசை மாற்றிவிட்டது.

நீதிமன்ற உதவிக்காக நியமிக்கப்பட்ட அமிக் கஸ்கூரி ராமச்சந்திரன் அறிக்கையோ வேறு விதமாகக் கருத்துத் தெரிவித்துள்ளது. சஞ்சய்பட் என்ற காவல்துறை அதிகாரி உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டாரா- இல்லையா என்பதை நீதி மன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்படும்பொழுது தான் உண்மை தெரியும் என்று கூறியுள்ளார்.

பந்து இப்பொழுது நீதிமன்றத்தின் மைதானத்தில் உள்ளது. இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்தியத் தண்டனைச் சட்டம் 153-ஏ (சமூகங்களுக்கிடையே விரோதத்தை வளர்க்கும் வகையில் தூண்டுதல்) 153பி (தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக நடந்துகொள் வது) 505 (பொதுமக்கள் மத்தியில் துவேஷங்களை உண்டு பண்ணுவது) 166 (சட்டத்துக்கு முரணாக காயம் ஏற்படுத்திட அரசு அலுவலர்கள் நடந்து கொள்வது) போன்ற பிரிவுகளில் மோடி தண்டிக்கப்பட வாய்ப்பு உண்டு.

அமிக்கஸ்கூரி ராமச்சந்திரன் கொடுத்த அறிக்கையை ஒருக்கால் சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்றுக்கொள்ளாது மறுக்குமேயானால், ஜாப்ரியின் மனைவி ஜாஹியா அமிக்கஸ்கூரி ராமச்சந்திரன் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் கோரி வழக்கு தொடரவும் வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே 2004 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 19 வயதே நிறைந்த இஸ்ரத் ஜஹான் மற்றும் மூவர் என்கவுண்டர் பெயரில் சுட்டுக் கொன்ற உண்மை இப்பொழுது உறுதி செய்யப்பட்டு விட்டது.

மேலும் மேலும் சட்டத்தின் பிடியில் இறுகும் நிலைதான் மோடிக்கு! நீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்து தான் மோடியின் எதிர்காலக் கனவுகள் பலிக்குமா- பலிக்காதா? என்ற நிலை எட்டப்படும்.

எப்படி இருந்தாலும் மோடி என்ற நபர் கொடூர மானவர், மதவெறியர் - சிறுபான்மை மக்களைக் கூண்டோடு ஒழித்துக் கட்ட எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர் என்ற பொதுவான கருத்து இந்திய மக்கள் மத்தியில் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை - உண்மையிலும் உண்மையாகும்!

Saturday, 24 September 2011

மோடியைத் தூக்கி நிறுத்துவதன் பின்னணி!

இந்து மதவெறியர் - குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி - பா.ஜ.க.வின் பிரதமருக்கான வேட்பாளர் என்று தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறார். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பன ஊடகங்கள் - குறிப்பாக துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி உள்ளிட்டோர், மோடியின் மோசமான மனிதகுல விரோத நடவடிக்கை களைப் புறந்தள்ளி, அவற்றை மூடி மறைத்து, மோடி சிறந்த நிருவாகி, அவர் ஆட்சி செய்யும் குஜராத்  மாநிலம் பொருளாதார நிலையில் நிமிர்ந்து நிற்கிறது என்பது போன்ற பிரச்சாரத்தை சாவி கொடுத்து முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி மீதான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம், இனி ஒரு மாஜிஸ்ட்ரேட் ஒருவரே விசாரித்துத் தீர்ப்பு வழங்கினால் போதும் என்று சொல்லிவிட்டதாம். அதை வைத்துக் கொண்டு தலைகால் புரியாமல் துள்ளிக் குதிக்கின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக வழக்கைத் தொடுத்தவர், இந்தத் தீர்ப்பில் திருப்தியடையாத திலிருந்தே உச்சநீதிமன்றம் மோடிக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறி விட்டதாக சோவுக்கே உரித்தான முறையில் எழுதுகோல் ஓட்டியுள்ளார்.

இதில் ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். வதேரா என்னும் இடத்தில் முஸ்லிம் ஒருவர் நடத்திய பெஸ்ட் பேக்கரியில் 14 முஸ்லீம்களை விறகுகள் போல் கை கால்களைக் கட்டி, பேக்கரி அடுப்பில் வைத்துக் கொளுத் தப்பட்ட வழக்கில், குஜராத் மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் குற்றவாளிகள் 21 பேர்களையும் விடுதலை செய்த வழக்குபற்றி உச்சநீதிமன்றம் என்ன கருத்து தெரிவித்தது?

சட்டத்தின் பார்வையில் அது விடுதலையே அல்ல என்று கூறவில்லையா?

தீர்ப்புரை என்ற பெயரால் விரைவு நீதிமன்றத்தின் முடிவு மதிக்கத்தக்கவையல்ல - நம்பிக்கைக்கு உரியதும் அல்ல.

மகாத்மா காந்தி பிறந்த பகுதியில் கொடூரமான கொலைகள் நடந்துள்ளன. இதைப் பார்க்கும்போது மகாத்மா காந்தி மதித்த அனைத்துக் கோட்பாடு களையும்  உதாசீனப்படுத்தும்படியான அளவுக்கு சிலர் போய் விட்டார்களா? என்ற கேள்வி எழுகிறது. எந்தவிதப் பாதுகாப்புமற்ற அப்பாவிக் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இது சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட அவமானமாகும்.

குஜராத் உயர்நீதிமன்றத்தின்அணுகுமுறையே சரியல்ல. அதன் தீர்ப்பில் குறைபாடுகளும், ஓரவஞ்சகமும், ஒரு தலைப்பட்ச முடிவுகளும் உள்ளன. நீதி மனப்பான்மை இல்லாமல் சொல்லப்பட்ட தீர்ப்பு என்று உச்சநீதிமன்றம் சொன்னதையெல்லாம் வசதியாக மறக்க - மறைக்க முயலுகிறார் திருவாளர் சோ.

பெஸ்ட் பேக்கரி படுகொலை வழக்கில் 21 பேர்களையும் சிறிதும் தயக்கமின்றி விடுதலை செய்த மாவட்ட நீதிபதிக்கு முதல் அமைச்சர் மோடி அளித்த பரிசு என்ன?

மாநில மின்சார வாரியத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்; மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய், பங்களா, கார், தொலைப்பேசி, உதவியாளர்கள் என்று சலுகைகளை வாரி இறைத்தார் முதல் அமைச்சர் மோடி என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி நீதிமன்றங்களையே மாநில அளவில் தன் கையில் சுருட்டி வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை குஜராத்தில் நிலவும்போது, மோடிமீது சுமத்தப்பட்ட வழக்கை இனி மாஜிஸ்ட்ரேட் அளவிலேயே நடத்திக் கொள்ளலாம் என்பது எவ்வளவு பலகீனமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உள்ளூர் மாஜிஸ்ட்ரேட் விசாரணையை இனி துவக்கவேயில்லை; தீர்ப்பும் அளிக்கப்படவில்லை; இந்த நிலையிலேயே மோடி பெரிய வெற்றி பெற்றதாக ஊடகங்களும், ஏன் மோடியும்கூட நினைக்கின்றனர், வாண வேடிக்கை விடுகின்றனர் என்றால் இதன் பொருள் என்ன? மாஜிஸ்டிரேட்டின் தீர்ப்பை இவர்களே முடிவு செய்து விட்டனர் என்பது விளங்கவில்லையா?

மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறியதும் இதே உச்சநீதிமன்றம்தான், வழக்கை வெளி மாநிலத்தில் நடத்த வேண்டும் என்று ஆணையிட்டதும் இதே உச்சநீதிமன்றம்தான்! அதற்கு மாறான ஆணையை இப்பொழுது பிறப்பித்திருப்பதும் அதே உச்சநீதிமன்றம் தான் என்னே வேடிக்கை!

இந்தியாவையே குஜராத் மாநிலமாக்கிட வேண்டும்; சிறுபான்மையினரை ஒடுக்க வேண்டும்; தேவைப்பட்டால் கொன்று குவிக்க வேண்டும்; அதற்கு முற்றிலும் தகுதியானவர் - திறமையானவர் நரேந்திரமோடிதான் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பன சக்திகள் - இந்துமத அடிப்படைவாதிகள் - சங்பரிவார்க் கும்பல், பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு, மோடியை உண்மைக்கு விரோதமாக ஜோடனை செய்து பொய்யான தகவல்களைப் பரப்பிக் கொண்டு வருகின்றன.

பொது மக்களே உஷார்! உஷார்!!

Tuesday, 20 September 2011

மோடியின் உண்ணாவிரதம்

மத நல்லிணக்கத்துக்காக குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி மூன்று நாள் உண்ணாவிரதமாம்! ஆம், ஆடுகளுக்காக ஓநாய் உண்ணாவிரதம் இருக்கிறது - புள்ளிமான்களின் உரிமைக்காக, நன்மைக்காக புலிகள் மாநாடு நடத்துகின்றன; எலிகளின் வாழ்வுரிமைக்காக பூனைகள் கூடிப் பேசுகின்றன என்பதைக்கூட நம்பினாலும் நம்பலாம்! மதநல்லிணக்கத்துக்காக மோடி உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதை நம்ப முடியுமா? பைத்தியக்காரன்கூட நம்ப மாட்டான்.

தமிழ்நாட்டில் உள்ள சோ குருமூர்த்திகள் அடுத்த பிரதமர் மோடிதான் என்று கொஞ்ச காலமாகவே காற்றடித்துக் காற்றடித்து விளம்பரப் பலூனை ஆகாயத்தில் பறக்க விட்டு வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், மாவட்ட நீதிமன்ற அளவிலேயே மோடி மீதான வழக்கைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாம்; அவ்வளவு தான் மோடியைக் குற்றமற்ற நிரபராதி என்றே உச்சநீதிமன்றம் சொல்லி விட்டது போல வாண வேடிக்கைவிட ஆரம்பித்து விட்டனர்.

எவ்வளவுப் பெரிய மோசடி! இதே உச்சநீதிமன்றம் இதே மோடியைப்பற்றி இதற்குமுன் என்ன கூறியது?

ஆதரவற்ற குழந்தைகள், அபலைப் பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்ட பொழுது முதல் அமைச்சர் நரேந்திரமோடி அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்த நீரோ மன்னன் என்று சொல்லவில்லையா? உச்சநீதிமன்றத்தில் இந்த விமர்சனத்துக்குப் பிறகு மோடி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமாவா செய்தார்?

2002 பிப்ரவரி 27 ஆம் தேதி கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டு 95 பேர் மரணம் அடைந்த போது, மோடியின் ஆட்சியில் 22 மணி நேர இடைவெளியில் இரண்டாயிரம் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்படவில்லையா?

ராம பக்தர்கள் படுகொலை செய்யப்பட்டதன் எதிர்விளைவே இஸ்லாமிய மக்களின் படுகொலை என்று தான் ஒரு முதல் அமைச்சர் என்ற பொறுப்பை மறந்து விமர்சனம் செய்யவில்லையா மோடி?

சர் அய்சக்நியூட்டன் கூறியதையெல்லாம் எடுத்துக்காட்டவில்லையா? எந்த வினைக்கும் எதிர்வினையுண்டு என்று இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டது விஞ்ஞான ரீதியாக சரிதான் என்று சொன்ன கொடுங்கோலன் - இப்பொழுது மத நல்லிணக்கத்துக்காக உண்ணா விரதம் இருக்கிறாராம்.

பெரு முதலாளிகள் பார்ப்பனர்கள், காவிக் கூட்டம் மோடியைப் பிரதமராக்கத் துடிப்பது - ஏன்?

நாட்டை இந்துக்கள் ஒரு பக்கம், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட வேற்று மதக்காரர்கள் இன்னொரு பக்கம் என்று பிரித்து நாட்டை மதவாரியாகத் துண்டு போட்டு ஆட்சி நடத்த வேண்டும்; ராமராஜ்ஜியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் சதியாகும்.

மதச் சார்பின்மை என்பது பார்ப்பனர்களுக்கு அனுகூலமானதல்ல. இதில் மாற்று மதக்காரர் களுக்கு சலுகைகள், வாய்ப்புகள் இருக்க வாய்ப்பு உண்டு.

வேறு சில நாடுகள் முஸ்லிம் நாடுகளாக இருக்கும் போது, இந்தியா ஏன் ஒரு இந்து நாடாக இருக்கக் கூடாது? என்பதுதான் அவர்களின் நோக்கமும் - ஆசையும்.

அந்த இந்து ராஜ்ஜியம் என்பது என்ன? மனுதர்ம ராஜ்ஜியம்தானே? நூற்றுக்கு மூன்று பேர்களாக இருக்கும் பார்ப்பனர்கள், நூற்றுக்கு 97 மக்களாக இருப்போர்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதுதானே அந்த இந்து ராமராஜ்ஜியம்?

ஒரு பார்ப்பான் பிரதமராக இருந்து இந்து ராஜ்ஜியம் நடத்தினால் பார்ப்பனர் அல்லாதார் மக்கள் மத்தியில் விரைவில் அடையாளம் காணப்பட்டு விடும் என்பதால் நரேந்திரமோடி போன்ற சூத்திரர் களைப் பிடித்து காரியம் சாதித்துக் கொள்வது என்ற தந்திரம்தான் இதன் பின்னணியில்!

உண்மையான புலிகளைவிட வேடம் போட்ட புலிகள்தானே அதிகமாகக் குதிக்கும்?

இருப்பதிலேயே மிகவும் குரூரமான ஓர் ஆளைப் பிடித்து பிரதமராக்க வேண்டும் என்பது - பார்ப்பனர்களின் ஆழமான சதி; எச்சரிக்கை! எச்சரிக்கை!!